Wednesday, 5 April 2017

வான்கோழி பராமரிப்பு முறைகள் :


நாட்டுக் கோழிகள் அல்லது வான்கோழிகள் மூலமாகக் குஞ்சுகள் பொரித்திருந்தால் தாய்க்கோழிகளே தம் குஞ்சுகளுக்குத் தீவனத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்து விடும். தன்னுடைய காலால் கிளறி, தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதை பார்த்துக் குஞ்சுகளும் தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்து குஞ்சுகளும் தானியங்களை சாப்பிடப் பழகிவிடும்.

இயந்திரங்கள் மூலமாகப் பொரிக்கப்படும் குஞ்சுகளை கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது போல் அடைக்காப்பான் அமைத்து மின்சார குண்டு விளக்கைப் பொட்டு தரையில் உமியிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பிவிட்டு அதன் மேல் குஞ்சுகளை விடலாம். திறந்த தட்டுக்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்திட வேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்து விட வேண்டும். இளம்குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் அளித்திடவேண்டும். தாய்க்கோழி எந்த அளவிற்கு வெப்பத்தைத் தன் குஞ்சுகளுக்கு தேவைப்படும் பொழுது அளிக்கிறதோ அந்த அளவிற்கச் செயற்கையாக வெப்பம் அளித்திடவேண்டும்.

நான்கு தீவனத்தட்டுகள், நான்குத் தண்ணீர்த் தட்டுகள் வைத்திடவேண்டும். வெப்பம் அளித்திட 100 வாட் மின்விளக்கு நான்குத் தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் தொங்கும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு 2 அடி நீளமுள்ள இரண்டு மரப்பலகைகளை அல்லது பிளாஸ்டிக் பைப்களை எடுத்துக் கொண்டு கூட்டல் குறி வடிவத்தில் (+) பொருத்திக் கொள்ளலாம். ஓரங்களில் மின்விளக்கு பொருத்தக்கூடிய வகையில் மின் இணைப்பு கொடுக்கவேண்டும். இந்தக் கூட்டல் குறி வடிவ அமைப்பினைக் கயிற்றால் கட்டித் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானுக்குள் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் தொங்கும்படி விடலாம். இரு கட்டைகளின் நான்கு முனைகளிலும் மின்விளக்குகளைப் பொருத்தி மின்இணைப்பு கொடுத்து எரிய விடலாம். இரண்டு மின்விளக்குகளுக்கு ஒரு சுவிட்சு என்றக் கணக்கில் அமைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது நான்கு மின் விளக்குகளையும் எரிய விடலாம். அல்லது இரண்டு மின் விளக்குகளை அணைத்து விடலாம். இந்த அமைப்பினைத் தான் 'அடைகாப்பான்' என்று அழைக்கின்றோம். இதை ஆங்கிலத்தில் 'புருடர்' என்று அழைக்கின்றோம்.

இந்த புருடருக்குள் வான்கோழி, குஞ்சுகள் பொரித்த நாளிலிருந்து சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை வளர்க்கலாம். வெயில் காலமாக இருந்தால் செயற்கையாக மின்விளக்குகள் மூலமாக அளிக்கப்படும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது 2 மின்விளக்குகள் மட்டும் எரிய விடலாம். மழைக்காலமாக இருந்தால் 4 மின்விளக்குகளையும் எரியவிடலாம். பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருந்தால் மின்விளக்குகளை அணைத்து விடலாம். இதைக் கண்டறிவது மிகவும் எளிது. உஷ்ணம் புருடரில் போதவில்லையெனில் எல்லாக் குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கும். அப்பொழுது சூட்டை அதிகப்படுத்திடவேண்டும். செயற்கை வெப்பம் அதிகமாக இருந்தால் அடைக்காப்பானின் ஓரத்திற்குச் சென்று விடும். சுறுசுறுப்பற்ற நிலையுடன் காணப்படும். மின்விளக்குகளுக்கு அடியில் வருவதற்கு தயங்கும். இதை உற்றுக் கவனித்தால் போதுமான சூடு அடைகாப்பானில் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும. தாய்க்கோழி அளிக்கும அளவிற்கே சூடு கொடுத்திட வேண்டும்.

குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளருவதற்கு பொரித்த நாளிலிருந்து சுமார் 3 வார காலமாகும். அதுவரை தன்னுடைய உடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி பறவையினத்திற்கு கிடையாது. அதற்காகத் தான் செயற்கை முறையில் வெப்பத்தை அளித்து வளர்க்கச் செய்கிறோம். அடைகாப்பான் பொருத்துவது தாய்க்கோழியின் அரவணைப்பில் இருப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். வான்கோழிக் குஞ்சுகள் மிகக் குறைந்த காலத்தில் அதிக எடை பெறுவதால் அதனுடைய 2வது வார வயதிற்குள் உடல் முழுவதும் இறகுகள் வளர்ந்து விடும்.

ஆழ்கூள முறையில் வளர்க்கும் சமயத்தில் இரண்டாவது வாரத்திற்குப் பறிகு அதாவது 10 முதல் 14வது நாளுக்குப் பின் அடைகாப்பானை நீக்கிவிட்டு ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி இடவசதி அளித்து வளர்க்கலாம். வான்கோழிக் குஞ்சுகள் மூன்று வார வயதிலிருந்து சுமார் ஐந்து வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து ஒரு சதுர அடி இடவசதியும் அதற்குப்பின் 8 வார வயதினை அடையும் சமயத்தில் 2 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்கவேண்டும். இடவசதி குறைவாகக் கொடுத்தால் ஆழ்கூளம் ஈரமாகிவிடும். மேலும் பல நோய்ப்பிரச்சினை ஏற்படும்.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
ஒரு நாள் விவசாயி :


விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை நெல், காய்கறிகள், மரப்பயிர்கள் என்று பல்வேறு விதமான விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று கடந்தாண்டு விவசாயத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தது பசுமை விகடன்.

சென்னை, காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி என்று தமிழகம் முழுவதும் ஐ.டி., அரசு, தனியார் என்று பல துறைகளில் பணிபுரியும் பலருக்கு விவசாய அனுபவத்தைப் பெறச் செய்ததோடு, அதை கற்றும் கொடுத்திருக்கிறது. இதற்கு பலரிடம் இருந்து வாழ்த்தும் வரவேற்பும் குவிய, தொடர்ந்து ‘ஒருநாள் விவசாயி பருவம்-2’ என்ற பெயரில் மீண்டும் விவசாயத்தைக் கற்றுக் கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது பசுமை விகடன். இதில் ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனத்தில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்தமுறை ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையைச் சுற்றியுள்ள மனிதவளத்துறை அதிகாரி சின்னமுனியாண்டி, வங்கி அதிகாரி வைத்தீஸ்வரன், தனியார் நிறுவன மேலாளர் தேவராஜ், செல்வக்குமார்-ஆர்த்தி தம்பதி, கல்லூரி மாணவிகள் ரக்‌ஷனா, காவ்யா ஆகியோர்.

இவர்களை நாம் அழைத்துச் சென்றது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகே கெங்காபுரம் கிராமத்தில் சிறப்பாக பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து வரும் ‘இயற்கை விவசாயி’ மணியின் பண்ணைக்கு.

ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், ஓய்வுக்குப்பிறகு கற்றுக்கொண்ட ‘செல்தெரபி’ மூலம் மருத்துவம் பார்த்து வருகிறார். 2003-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஏற்கெனவே ‘காலாநாமக்’ மற்றும் ‘வரகு’ சாகுபடி செய்தபோது, இவரைப் பற்றி பசுமை விகடன் இதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘பாரம்பர்ய நெல்லைத் தவிர வேறு எந்தவொரு ரக நெல்லையும் என்னுடைய நிலத்தில் அனுமதிக்கமாட்டேன்’ என்று சொல்லும் இவர், பணம் கொட்டும் மருத்துவத்தைக்கூட பகுதி நேரமாக வைத்துக்கொண்டு, விவசாயத்தில் முழு நேரமாகச் செயல்பட்டு வருகிறார்.

ஒருநாள் விவசாயிகள் பண்ணைக்குள் நுழைந்தபோது மழை பெய்து முடிந்த இதமான சூழல் நிலவியது. பண்ணைக்குள் நுழைந்ததும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற மணி ‘மூலிகைப் பானகம்’ கொடுத்தார். ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டதும் இயற்கை விவசாயம் குறித்து ஒருநாள் விவசாயிகளிடம் பேசினார் மணி.

“இயற்கை விவசாயம்ங்கறது எளிமையான முறை. அதிகச் செலவில்லாதது. இயற்கை விவசாயம்தான் தற்சார்பு விவசாயம். நாமே இடுபொருட்களைத் தயார் செஞ்சுக்கலாம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைக் கண்டிப்பா தவிர்த்திடணும். மாட்டு எரு, சில பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தினாலே போதும். எந்தப்பயிரா இருந்தாலும் பழுதில்லாம மகசூல் எடுத்திடலாம். இங்க எல்லாத்தையுமே நீங்க நேரடியா பார்க்கலாம். எதையும் நேரா பார்க்கும்போதுதான் நல்லா புரியும்” என்ற மணி அனைவரையும் வயலுக்குள் அழைத்துச் சென்றார்.

“இங்க எனக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 25 ஏக்கர்ல வருஷம் மூணு போகம் நெல் விதைப்பேன். 10 ஏக்கர் நிலத்துல கீரைகளையும் காய்கறிகளையும் பயிரிடுவேன்” என்றார்.

அவரைக் குறுக்கிட்ட வைத்தீஸ்வரன், “பொதுவா பயிர்சுழற்சி முறையிலதான் விவசாயம் செய்யணும்னு சொல்றாங்களே? வருஷத்துல மூணு போகமும் நெல் விதைச்சா மகசூல் சரியா வருமா?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மணி, “தம்பி, நான் இன்னிக்கு நேத்து இல்ல... பல வருஷமாவே நெல்லை மட்டும்தான் திரும்பத் திரும்ப பயிர் செய்றேன். நம்ம நிலத்தைத் தயார் செய்யுற முறை சரியா இருந்தா, எல்லாமே சரியா இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஏக்கருக்கு 2 டன் மாட்டு எருவோடு, உயிர் உரங்களக் கலந்து தூவி விடுவேன். அறுவடை முடிஞ்சப்பறம் வயல்ல இருக்குற நெல் தாளோடவே ஏர் ஓட்டி, மாட்டைக் கட்டி பரம்படிச்சு விட்டிடுவேன். சரியான பருவத்துல, விதை நேர்த்தி செஞ்சு நாத்து விடுவேன். முளைச்ச நாத்துகள சீரான இடைவெளியில நடவு செய்வோம். இங்க எப்பவுமே கை நடவுதான். இந்த முறைகளோடு பயிருக்குச் சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கிற மாதிரி நடவு செஞ்சா நெல்லுல அதிக மகசூல் கிடைக்கும்” என்றார்.

“இடுபொருள் தயாரிப்பு முறைகளைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார், சின்னமுனியாண்டி. “அது சொன்னா புரியாது. கண்ணுல பாத்தாதான் தெரியும்” என்ற மணி, மாட்டுக் கொட்டிலுக்குள் அழைத்துச் சென்று, மாடுகளின் சிறுநீரைச் சேகரிக்கும் முறை பற்றி விளக்கினார். மாட்டுக்கொட்டிலின் ஓரத்தில் சிறுநீர் சேகரிக்கும் நான்கு பெரிய தொட்டிகள் இருந்தன. அதற்கு மேல் வாத்துக்கூண்டு, அதற்கு மேல் புறாக்கூண்டு என அமைத்திருந்தார். அதைப்பார்த்த ஒரு நாள் விவசாயிகள் ஆச்சர்யமானார்கள்.

அனைவருக்கும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறையைச் சொல்ல ஆரம்பித்தார், மணி. “200 லிட்டர் தண்ணீர், ஜீவனுள்ள ஒரு கைப்பிடி மண், ஏதாவதொரு பயறு வகை மாவு 2 கிலோ, வெல்லம் 2 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், நாட்டுப் பசுஞ்சாணம் 10 கிலோ. இதையெல்லாம் ஒரு தொட்டியில் ஒண்ணா போட்டு கலந்து நன்றாக கலக்கிவிடணும். வெயில் படாதபடி இத மூடி வைக்கணும். தினமும் 2 முறை இந்தக் கரைசலை ஒரு நிமிடம் கலக்கி விடணும். இப்படி மூணு நாள் தொடர்ந்து செஞ்சா ஜீவாமிர்தம் தயாராகிடும்.

ஒரு கைப்பிடி மண்ணுல 5 கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்குது. ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கும் இந்த நுண்ணுயிர்கள் இரண்டு மடங்கா பெருகிக்கிட்டே இருக்கும். இந்த நுண்ணுயிர்க் கலவைதான் ஜீவாமிர்தம்.

நடவு செஞ்சதுல இருந்து 15 நாளுக்கு ஒரு தடவை பயிர்களுக்கு ஜீவாமிர்தத்தைத் தெளிச்சிட்டு வர வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்கணும். மூணு மாசத்துக்கு இப்படிச் செஞ்சிட்டு வந்தா, பங்கமில்லாம மகசூல் கிடைச்சுடும்” என்ற மணி, மாட்டுச் சாணம் மூலம் உயிர் உரம் தயாரிக்கும் முறை குறித்துச் சொல்லிக் கொடுக்க... ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் சாணத்தைக் குவித்து உயிர் உரம் தயாரிக்க ஆரம்பித்தனர்.

பண்ணையில் இருந்த 40 நாட்டு மாடுகளைப் பார்த்த ஒரு நாள் விவசாயிகள், “நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். அதை ஏன் வளர்க்கிறீங்க?” என்றனர்.

“பால் எவ்வளவு கிடைக்கும்கிறது முக்கியமில்லை. பால் எவ்வளவு சத்தானதுங்கிறதுதான் முக்கியம். அதில்லாம நாட்டு மாட்டுச் சாணத்துலதான் நுண்ணுயிர்கள் அதிகமா இருக்கும். இதுல இடுபொருட்கள் தயாரிக்கிறப்போ வீரியமா இருக்கும். அதனாலதான் நாட்டு மாடுகளை அதிகமா வெச்சிருக்கேன்” என்ற மணி, பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு முறைகள் குறித்தும் ஒரு நாள் விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்லி, பிறகு நெல் வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆட்கள் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு ஒரு நாள் விவசாயிகளும் இணைந்து நாற்றுகளைப் பறித்து, கட்டுக் கட்ட ஆரம்பித்தனர். கல்லூரி மாணவிகள் ரக்‌ஷனாவும், காவ்யாவும் அங்கிருந்த பணியாளர்களிடம் விடாமல் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து நாற்று நடவுப் பணியிலும் ஈடுபட்டனர், ஒரு நாள் விவசாயிகள். அவர்கள் ஆர்வத்துடன் நாற்று நடுவதைக் கண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

வைத்தீஸ்வரன் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்வதைப் பார்த்த வேலையாட்கள், “ஒரு குத்துக்கு ரெண்டு நாத்தா நட்டா, ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு வளந்து வந்துடும். அதனால எப்போதுமே நெல்பயிரை நடவு செய்யும்போது ரெண்டு ரெண்டா நட வேண்டும்” என்றனர்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 4 April 2017

கூடுதல் விளைச்சல் கொடுத்த தென்னை... பஞ்சகவ்யாவின் பலே பயன்கள்!


ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் தன்னுடைய பஞ்சகவ்யா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சேத்துமடைப் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நா.சண்முகசுந்தரம்.

“எனக்குப் பூர்விகம் திருப்பூர். வக்கீலுக்குப் படிச்சிருந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்து மேலதான் ஆர்வம் அதிகம். திருப்பூர்ல எனக்குச் சொந்தமா ஏக்கர் கணக்குல தோட்டம் இருக்கு. ஆனா, அங்க விவசாயம் செய்யக்கூடிய சூழல் இல்லை. அதனால 30 வருஷத்துக்கு முன்னாடியே, திருப்பூர்ல இருந்து பல மைல் தள்ளி, இங்க வந்து இந்த 30 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். தென்னை, மா, ஜாதிக்காய்னு மூணு பயிர்கள்தான் பிரதானம்.

நான் பொறந்து வளர்ந்த ஊர்ல நடந்த இயற்கைச் சீரழிவுகளைக் கண்ணால பார்த்து வளர்ந்தவன்ங்கிறதால இயற்கையைச் சீரழிக்காம விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆரம்பத்துல முறையா இயற்கை விவசாயம் செய்யத் தெரியாம குழப்பத்துல இருந்த போதுதான் முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் மூலமா, டாக்டர் நடராஜனின் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட பஞ்சகவ்யா குறித்துத் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் நம்மாழ்வார் ஐயா நடத்தின களப்பயிற்சிகள்லயும் கலந்துகிட்டதுல இயற்கை விவசாயம் குறித்துத் தெளிவு கிடைச்சது. அதுல குறிப்பா சொல்லப்போனா, பஞ்சகவ்யா கரைசல் குறித்த தெளிவு நல்லா கிடைச்சது” என்ற சண்முகசுந்தரம் தொடர்ந்தார்.

“அதுக்கப்புறம் 10 வருஷமா பஞ்சகவ்யா பயன்படுத்தி ட்டிருக்கேன். 15 நாட்களுக்கு ஒரு தடவை எல்லா பயிர்களுக்கும் பஞ்சகவ்யா கொடுத்திடுவேன். மா, ஜாதிக்காய் ரெண்டுக்கும் தெளிப்பு மூலமாவும் பஞ்சகவ்யா கொடுக்கிறேன். தென்னைக்குச் சொட்டுநீர்ப் பாசனத்துல கலந்து விட்டுடுவேன். பஞ்சகவ்யாவுக்கு மாறினதுக்கப்புறம் நான் அடைஞ்ச பலன்கள் ரொம்ப அதிகம்.

இந்தச் சேத்துமடைப் பகுதி, ரொம்பச் செழிப்பான பகுதி. தென்மேற்குப் பருவமழை பட்டம் தவறாமல் கிடைக்கிற பூமி. நாடெல்லாம் வறட்சி ஏற்பட்டாலும், எங்க பகுதி வளம் குறையாமல் இருக்கும். ஆனா, அப்படியான இடத்துல இந்த வருஷம் கடுமையான வறட்சி. பருவமழை கிடைக்கவே இல்லை. அக்கம் பக்கத்துல பல ஏக்கர்ல தென்னை மரங்கள்ல எல்லாம் மட்டைகள் காய்ஞ்சு விழுந்து மொட்டையாயிடுச்சு. ஆனா, என்னோட தோட்டத்துல இருக்கிற தென்னை, மா, ஜாதிக்காய் மூணுமே கடுமையான வறட்சியிலும் வாடாம உயிர்ப்போடு இருக்கு. அதுக்கு முழுக்காரணம் பஞ்சகவ்யாதான். இதைக் கொடுக்கிறப்போ மண்புழுக்கள் பெருகி மண்ணைப் பொலபொலப்பாக்கிடுது. அதனால பாசன நீர் சுலபமா மண்ணுக்குள் இறங்கி நிலத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கு. அதனாலதான் அவ்வளவு வறட்சியிலயும் மரங்கள் வாடாம இருந்துச்சு. மரப்பயிர்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கிறவங்க, வறட்சியைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை” என்ற சண்முகசுந்தரம், தான் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தும் விதம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“தென்னை மரங்களுக்கு 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாங்கிற அளவுல கலந்து 15 நாளுக்கு ஒருமுறை சொட்டு நீர்க் குழாய்கள் வழியா கொடுத்திடுவேன். அதனால, தென்னை மரங்கள்ல காய்ப்பு அதிகரிச்சிருக்கு. குரும்பை உதிர்றதும் குறைஞ்சிடுச்சு. அதேமாதிரி ஈரியோபைட் தாக்குதலும் படிப்படியா குறைஞ்சிடுச்சு. இப்போ என்னோட தோப்புல தென்னை மரங்கள் ஆரோக்கியமா இருக்கிறதுக்குக் காரணம் பஞ்சகவ்யாதான்.

500 மாமரங்களுக்கும் ஊடுபயிரா இருக்கும் ஜாதிக்காய் செடிகளுக்கும் பூ, பிஞ்சு, காய்னு மூணு பருவங்கள்லயும் பஞ்சகவ்யா தெளிச்சுடுவேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பாசனத்துலயும் கலந்து விட்டிடுவேன். அதனால பூக்கள் அதிகம் உதிர்றதில்லை. பிஞ்சுகள் ஊட்டமாக வளர்ந்து நல்ல வடிவத்துல காய்களாக மாறிடுது. மாம்பழங்கள் நல்ல எடையோட ருசியாவும் இருக்கு ஜாதிக்காயும் அதிகம் விளையுது.

ஆரம்பத்துல பசு மாட்டுச் சாணம், பசு மாட்டுச் சிறுநீர், பால், தயிர், நெய்னு அஞ்சு பொருட்களைத்தான் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிச்சாங்க. காலப்போக்கில் நிறைய விவசாயிகள் ஆராய்ச்சி செஞ்சு, அதுல கொஞ்சம் கொஞ்சமா வேற பொருட்களையும் சேர்த்து இப்போ பத்துப் பொருட்கள் வரை சேர்த்துத் தயாரிக்கிறாங்க. நான், 9 பொருட்களைச் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன் (5 கிலோ பசுஞ்சாணம், 2 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர், 2 லிட்டர் பசும்பால், 2 லிட்டர் புளித்த தயிர், அரைக்கிலோ நெய், 3 லிட்டர் இளநீர், 3 லிட்டர் கரும்புச்சாறு, 12 கனிந்த வாழைப்பழங்கள், 2 லிட்டர் சுத்தமான கள்). பஞ்சகவ்யாவுல கள்ளைச் சேர்க்கிறதால நொதிப்புத்தன்மை அதிகரிச்சு பலன் கூடுது. இங்க கள் இறக்க தடை இருக்குறதால, நான் கேரளாவில் இருந்து வாங்கிட்டு வந்து தயாரிக்கிறேன். என் தோட்டத்துல இருந்து அரை மணி நேரத்துல, கேரளா போயிட முடியும். இப்படி கள் வாங்க சாத்தியமில்லாத விவசாயிகள், இளநீரைப் புளிக்க வெச்சு பயன்படுத்துறாங்க. அதுவும் ஓரளவு நல்லாவே பலன் கொடுக்குது” என்ற சண்முகசுந்தரம் நிறைவாக,

“பஞ்சகவ்யா, கால்நடைகளோட பல நோய்களுக்கு மருந்தா பயன்படுது. நாமும்கூட அதைக் குடிச்சு பல நோய்களை அண்ட விடாம தடுக்க முடியும். அதனால மனிதர்கள் குடிக்கிற விதத்துல ‘அமிர்த சஞ்சீவி’ங்கிற பெயர்ல பஞ்சகவ்யாவை மேம்படுத்தியிருக்கேன். நான் எல்லார்கிட்டயுமே பயிருக்கும் உயிருக்கும் பாதுகாவலன், பஞ்சகவ்யான்னுதான் சொல்லிட்டு இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,நா.சண்முக சுந்தரம், செல்போன்: 98422 42936
“தேயிலைக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”

பசுமை விகடன் வாசகர்கள் பலர், கொடுமுடி டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொண்டு பஞ்சகவ்யா குறித்த பல சந்தேகங்களைக் கேட்டு வருகிறார்கள். டாக்டர் நடராஜனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றில் சில இங்கே இடம்பெறுகின்றன.

“பஞ்சகவ்யா கரைசலை அதிக அளவில் தயார் செய்யமுடியுமா?”

லீலா கிருஷ்ணன், சின்னக் கம்மாளபட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

“கண்டிப்பாக முடியும். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வசிக்கும் ‘முன்னோடி ஏலக்காய் விவசாயி’ ராமமூர்த்தி, ஒவ்வொரு முறையும் 1,000 லிட்டர் அளவில் பஞ்சகவ்யா கரைசலைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்.”

“பஞ்சகவ்யா தயாரிக்க ஒரு லிட்டருக்கு எவ்வளவு செலவு ஆகும்?”

ராஜேஸ்வரன், குன்னத்தூர், ஈரோடு.

“மூலப்பொருட்கள் அனைத்தையும் விலைக்கு வாங்கினால் லிட்டருக்கு 25 ரூபாய் செலவு ஆகும். பசுமாடு, தென்னை, கரும்பு, வாழை மரம் ஆகியவை உங்கள் தோட்டத்தில் இருந்தால் பைசா செலவில்லாமல் பஞ்சகவ்யா தயாரிக்க முடியும்.”

“பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் எத்தனை நாட்களுக்கு வாடாமல் இருக்கும்?”

கார்த்திகா, வையப்பமலை, நாமக்கல்.

“அதிகபட்சம் ஒரு வாரம் வரை காய்கள் வாடாமல் பளபளப்புடன் இருக்கும். இருப்பு வைத்து விற்பனை செய்யவும், வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லவும் ஏதுவாக இருப்பதால் பஞ்சகவ்யாவில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை வியாபாரிகள் தேடிவந்து கொள்முதல் செய்கிறார்கள்.”

“பஞ்சகவ்யா பயன்பாட்டில் 3 சதவிகிதம் என்பது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்துமா?”

தமிழ்செல்வி, மணப்பாறை.

“பொருந்தும். ஆனால் அதேசமயம் கீரை வகைகளுக்குத் தெளிக்கும்போது முதல் தெளிப்பில் 2 சதவிகிதம் மட்டும் கொடுப்பது நல்லது. எந்தப்பயிராக இருந்தாலும் பாசன வழியாகக் கொடுக்கும்போது, 3 சதவிகிதம்தான் கொடுக்க வேண்டும்.”

“சமவெளிப் பயிர்களுக்கு மட்டும்தான் பஞ்சகவ்யாவா... மலைத்தோட்டப் பயிரான தேயிலைக்குக் கொடுக்கலாமா?”

ஜெஸி தேன்மொழி, கருமலை எஸ்டேட், வால்பாறை.

“தாராளமாகத் தேயிலைச் செடிகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாம். குறிப்பாக இலைவழி தெளிப்பு மூலம் 3 சதவிகிதக் கரைசலை மழை இல்லாத நாட்களில் கொடுத்து வந்தால், தேயிலைக் கொழுந்துகள் அதிக அளவு கிடைக்கும். சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தேயிலைத் தூள் வெளிநாட்டினரால் அதிகம் விரும்பப்படுகிறது.”

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday, 3 April 2017


வான்கோழி வளர்ப்பு முறைகள் :


வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம் :

1.புறக்கடை வளர்ப்பு(Backyard system)

2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)

3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)

4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு :

நம்முடைய கிராமபுறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்கு/ சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்
ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்து அக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊற வைத்த பிண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.

இடவசதி :

வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு இடவசதி போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை தேவைப்படும். அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை :

வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு, கொட்டகையில் 5-6 கொட்டகையில் சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும். இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.

ஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு :

கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும் ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம். ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோலை, சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நேர்கிகல் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்கவேண்டும். இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்ாகழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம். ஒரு சேவல் வான்கோழிக்கச் சுமார் 5-6 சதுர அடி இடவசதியும் ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவை. 40 ஆண் கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டை வான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவை. வளர்ந்த வான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 2 April 2017


தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் லாபம் குறித்த தகவல் :


உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” ஆகும். இது “வெர்பினேசியே” தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மரம் ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.

தேக்கு பயிரிட ஏற்ற நிலம் :

இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது. இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கரநாடகம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.

மரத்தின் சிறப்பியல்புகள் :

1. தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.

2. மேலும் இம்மரம் “ஒளி விரும்பி” (Light Demand-er) ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.

3. தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.

பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :

தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். 20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.

விதை சேகரம் :

நாற்றுகள் உற்பத்திக்கு தேக்கு வதைகளை 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய மரங்களிலிருந்து சேகரம் செய்வது நன்று. மேலும் பக்க கிளைகள் அதிகம் இல்லாத நேராக, உயரமாக வளர்ந்த, நோய்தாக்காத மற்றும் நல்ல பருமனமான தேக்கு மரங்களிலிருந்து விதைகள் சேகரம் செய்ய வேண்டும். இவ்வாறு விதைகள் சேகரம் செய்து தோட்டம் உற்பத்தி செய்தால் நல்ல தரமான மரங்கள் கிடைக்கும்.

விதை நேர்த்தி :

தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதை உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும். இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப் பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வது மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.

நாற்றுகள் உற்பத்தி :

தேக்கு நாற்றுகள் பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் எழுப்பலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீத மணலும் 25 சதவீத செம்மண்ணும் 25 சதவீத வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். தாய்பாத்தியின் மேல்சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மண்ண்ல் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும். பூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும். அதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை “பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும்”. பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள்வரை முளைத்து கொண்டிருக்கும். இந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும். தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும். மேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க தகசாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

நாற்றுக்குச்சிகள் மூலம் தோட்டம் உற்பத்தி :

நாற்றுக்குச்சிகள் 8 முதல் 10 வரை தாய்பாத்தியில் வளர்ந்து அதே சமயத்தில் பென்சில் பருமனுள்ள தேக்கு நாற்றுக்களிலிருந்து தயார் செய்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். தேக்கு நடவு செய்யப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து களைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். சம பகுதியாக இருப்பின் நடவு செய்ய வேண்டிய இடத்தை உழுதுவிடவேண்டும். பின்னர் தென்மேற்கு பருவமழையின் ஆரம்பத்தில் 1 ஏக்கருக்கு 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவுள்ள 1000 குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் நன்கு காய்ந்த பின் மக்கிய 2 கிலோ தொழு உரத்துடன் வண்டல் மண் மற்றும் செம்மண் சமமாக கலந்து குழியில் 95 சதவீதம் நிரப்ப வேண்டு்ம். மழைக்காலம் ஆரம்பித்தும் குழிகளில் உள்ள எருக்கலவை நன்கு ஈரமாகும். இந்நிலையில் கடப்பாரையால் குழியின் மையப் பகுதியில் துவாரம் இட்டு அவைகளில் தேக்கு நாற்றுக்குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மேல் மண்ணை கொண்டு அணைத்து காற்று புகாமல் இறுக்கமாக கைகளால் கெட்டிப்படுத்த வேண்டும். அதே சமயம் நாற்றுக்குச்சிகளின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல்மட்டமும் தரை மட்டத்திற்கு இருக்குமாறும் குச்சியின் மேல் பகுதி 2செ.மீ. அளவிற்கு தரை மட்டத்திற்கு மேலே இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் குச்சியின் மேல் பகுதியில் மண் மூடிவிட்டால் துளிர்வருவது தடைப்படும். நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை வீதம் மூன்று மாதம் நீர் விடவேண்டும். மழைபெய்தால் நீர்விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடப்பட்ட நாற்றுக்குச்சிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். நாற்றுக்குச்சிகள் ஒன்றுக்கு மேல் துளிர்கள் வருமாயின் திடமான ஒரு துளிரை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை நடவு செய்த இரண்டு மாதம் கழித்து அகற்றிவிடவேண்டும். பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செடியை சுற்று 15செ.மீ ஆழம்வரை கொத்தி களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடையும்.

பை நாற்றுக்கள் உற்பத்தி செய்தல் :

செம்மண், வண்டல்மண், மணல் மற்றும் நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியே சலித்து சம அளவில் கலந்து (16X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை (10X1) மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி விடவேண்டும். பின்பு தாய்பாத்தியிலிருந்து 6 இளைகளுடன் கூடிய தேக்கு இளங்கன்றுகளை பிடுங்கி பாலித்தீன்பைகளில் ஒரு பைக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். மேலும் நாற்றுக்குச்சிகளை தயார் செய்து பாலித்தீன் பைகளில் நட்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். பைச்செடிகளுக்கு முதல் 10 நாட்களுக்கு தினம் இரு வேளையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒன்றுவிட்டு ஒருநாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும்.பின்பு வாரத்திற்கு இரண்டு நாள் நீர் ஊற்றினால் போதுமானது. நான்கு மாத காலத்தில் சுமார் 60-75 செ.மீ உயரத்திற்கு நாற்றுக்கள் வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு தகுதியான நாற்றாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டுடிய இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் முதன் மழையில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சமபங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழிஉரம் அல்லது 2 கிலோ தொழுஉரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவிற்கு நிரப்ப வேண்டும். ஜுன்-ஜுலை மாதங்களில் பருவ மழைகிடைத்தவுடன் பாலித்தீன் பைகளை அகற்றிவிட்டு குழிகளில் தாய்மண் கட்டி உடையாதவாறு செடிகளை நடவு செய்ய வேண்டும். குழிகளின் மீதிப்பகுதியை சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு மூடி செடியை சுற்றி இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்து விடவேண்டும். செடியை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும், நிர்வாகத்தலும் :

நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள், தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தசகாவ்யா அல்லது வேம்புபால் அல்லது நீம் அசால் அல்லது புகையிலை வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டருக்கு 30 மி.லி. வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)

தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15 செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வுண்டும். செடிகள் நன்கு வளர மாதம் இருமுறை நீர்விடுவது அவசியமாகும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை களை கொத்தி தொழுஉரம் இடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தேக்கு கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.

வரப்பு நடவு :

விவசாய நிலத்தில் வரப்புபகுதியில் 2மீX2மீ இடைவெளியில் தேக்கு குச்சி நாற்றுகள் அல்லது பை நாற்றுக்களை மேற்கானும் செய்முறைப்படி வரப்பு நடவு செய்யலாம். மேலும் பராமரிப்பு பணியும் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும். வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளை விட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.

பக்ககிளை களை அகற்றுதல் : (Pruning)

தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும், பக்ககிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் கழித்து விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பக்ககிளைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்.

5ம் ஆண்டில் இடை வரிசைகளை கலைத்தல் :

மேலும் தேக்கு மரங்கள் அடர்ந்த வளர்ந்து வரும் நிலையில் நட்ட 5ம் ஆண்டில் இடை வரிசைகளில் உள்ள மரங்களை நீக்கி மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளர வழி செய்ய வேண்டும். அதாவது முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒருவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2மீX2மீ இடைவெளியில் தேக்கு மரக்கன்றுகளை நடும்பொழுது ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்கள் வெட்டி எடுக்க வேண்டும்.

தேக்கு மரம் கலைத்தல் முதல் வருவாய் :
5ம் ஆண்டில் 500 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ. 100 – வீதம் 500 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 50,000/- ஆகும்.

12 ஆம் ஆண்டில் இடைவரிசைகளை கலைத்தல் :

அடுத்த 12ம் ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்து விட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் மீதம் இருக்கும் .

தேக்கு மரம் கலைத்தல் இரண்டாம் வருவாய் :

12-ம் ஆண்டில் 250 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ.1000 வீதம் 250 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 2,50,000/- ஆகும்.

மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 30 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும். 30ம் ஆண்டில் 1 ஏக்கரில் 250 தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கும்.

வேளாண்காடு வளர்ப்பு :

தேக்கு மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம். தென்னை மற்றும் வாழை தோப்புகளின் வரப்போரமாக தேக்கு மரக்கன்றுகளை நட்டு சாகுபடி செய்யலாம்.

தேக்கு மரத்தின் பயன்பாடு :

தேக்கு மரம் ஒரு உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம். மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.

தேக்கு மரத்தின் சுற்றளவு மற்றும் பருமன் சாதாரண தோட்டங்களில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. தேக்கு மரதோட்டத்தை நீர்பாய்ச்சி பக்க கிளைகளை முறையாக அப்புறப்படுத்தி மரங்களை 5 மற்றும் 12 ஆம் ஆண்டுகளில் கலைத்து நன்கு பராமரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம்.

மேலும் தகவலுக்கு :
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு
சென்னை – 600 048.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
வான்கோழி இனங்கள் :


அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் :

இவ்வவை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும் , பெட்டடைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை , பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்கபட பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.

அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி :

இந்த இரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 முதல் 9 கிலோ எடை வரையும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 முதல் 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.

பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை :

அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப்பட்டன. இவ்வகை வான்கோழிகள்ப் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும், வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday, 1 April 2017

பண்ணைகுட்டை வவ்வால் மீன் வளர்ப்பு :


திருவாரூர் மாவட்டம் திருமதிக்குன்னம் சேர்ந்த அருண் குமார் அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தன் அப்பாவின் உதவியோடு இரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது. அவர் கூறியவை :

நான் தற்போது சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருகிறேன். எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் ஆகையால் எனது சொந்த இடமான ஏழு ஏக்கரில் ஒன்றை ஏக்கரை பிரித்து இரும்பு வேலி எடுத்து குமிழ், செம்மரம், மஹோகனி, வாகை, கரு மருது, மலை வேம்பு போன்ற 1200 மரங்கள் நட்டுள்ளேன் பின்பு சிறியதாக குளம் வெட்டி மீன் வளர்க்க வேண்டும் என்ற முடிவோடு என் அப்பாவின் உதவியோடு மீன் வளர்க்க ஆரம்பித்தேன். எங்கள் நிலத்தில் தற்போது இரண்டு குளம் வெட்டி அதில் மீன் வளர்க்கிறோம்.ஒரு குளத்தின் அளவு நீளம் 50 அடி, அகலம் 50 அடி, ஆழம் 8 அடி இன்னொரு குளம் 100 அடி நீளம், 50 அடி அகலம், 8 அடி ஆழம், என்ற அளவில் உள்ளது. மீதம் உள்ள 5.5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தெரிந்தவரிடம் குத்தகைக்கு விட்டுள்ளோம் அதில் அவர் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் 20 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கட்லா, ரோகு, நாட்டு வவ்வால் போன்ற மீன் குஞ்சுகளை 4 ரூபாய் விலைக்கு மன்னார்குடியிலிருந்து வாங்கி வந்து பெரிய குளத்தில் 300 குஞ்சுகளும் சிறிய குளத்தில் 300 குஞ்சுகளும் விட்டோம்.

பின்பு 8 மாதம் கழித்து விற்பனைக்காக மீன்களை பிடித்தோம். இதில் கட்லா மற்றும் ரோகு வகை மீன்கள் வெறும் 300கிராம் எடை மட்டுமே இருந்தது ஆனால் நாட்டு வவ்வால் மீன்களோ 1.300 கிராம் எடை இருந்தது. கட்லா, ரோகு எடை குறைவாக கிடைத்த காரணம் நாட்டு வவ்வால் மட்டுமே அதிக தீவனம் எடுத்து நல்ல வளர்ச்சி அடைந்தது தெரியவந்தது. இதில் எங்களுக்கு லாபமும் எல்லை நஷ்டமும் இல்லை.

ஆகையால் இரண்டாவது முறையாக என் அப்பாவின் அறிவுரையோடு ஏற்கனவே 300 கிராம் எடையோடு பிடித்த கட்லா ரோகு மீன்களை சிறிய குளத்தில் மீண்டும் ஒன்றாக விட்டோம். நாட்டு வவ்வால் மீன் குஞ்சுகளை மட்டும் பெரிய குளத்தில் 500 குஞ்சுகள் வாங்கி மீண்டும் விட்டோம். இந்த தடவை 7 மாதம் கழித்து மீன்களை பிடித்தோம் அதில் ரோகு, கட்லா மீன்கள் 1.250 கிலோ கிராம் எடையை தாண்டவில்லை. ஆனால் நாட்டு வவ்வாலோ 1.250 மற்றும் 1.300 கிலோ கிராம் எடையில் விட்ட 500 மீன்களும் மீண்டும் 7 மாதத்தில் கிடைத்தது. ரோகு கட்லா மீன்களில் வளர்ச்சி மற்றும் லாபம் இல்லாததால் இதை வாங்க வந்த மீன் வியாபாரியின் அறிவுரையின் பேரில் தற்போது பெரிய குளத்தில் 1000 குஞ்சுகளும் சிறிய குளத்தில் 500 நாட்டு வவ்வால் குஞ்சுகள் மட்டும் விட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் இவைகளை பிடிக்க உள்ளோம் என்றார்.

தீவனம் :

தினமும் மாலை 5 மணிக்கு தீவனம் கொடுப்போம். மீன்களுக்கு கடையில் வாங்கி தான் தீவனம் போடுகிறோம் சில நேரம் வீட்டில் உள்ள பப்பாளி களை எடுக்கும் புற்கள் போன்றவைகளை மீன்களுக்கு போடுவோம். முற்றிலுமாக இறைச்சியை தவிர்த்தோம் எங்கள் குளம் எப்போதும் தெளிவாக இருக்க காரணம் முறையான தீவனமே .

விற்பனை மற்றும் லாபம் :

8 மாதத்திற்கு ஒரு முறை மீன்களை பிடித்து விற்பனை செய்கிறோம். மீன் வியாபாரிகளே நேரில் வந்து அவர்களே மீன்களை பிடித்து எடை போட்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ நாட்டு வவ்வால் ரூபாய் 130க்கு வாங்கி செல்கிறார்கள். அவர்கள் 180 முதல் 230 ரூபாய் வரை வெளியில் விற்பனை செய்கிறார்கள்.

வவ்வால் மீன் விற்பனை செய்த கணக்கு :

500 மீன்கள் ஒரு மீனின் எடை 1.300 கிலோ கிராம்

500*1.300 = 650 கிலோ கிராம்

650 * 130 = 84,500 ரூபாய்

இதில் தீவன செலவு ஒரு மீனுக்கு 25ரூபாய் மற்றும் வாங்கி வந்த செலவு 6 ரூபாய் ஆகா மொத்தம் ஒரு மீனுக்கு செலவு 31 ரூபாய்.

169 - 31 = 138ரூபாய் ஒரு மீனிலிருந்து கிடைத்த லாபம்

ஆகா மொத்தம் 500 நாட்டு வவ்வாலிருந்து கிடைத்த மொத்த லாபம் 69,000 ரூபாய் என்றார்.

இது வரை இவர் மீன் வளர்ப்பில் எந்த ஒரு பயிற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கடைசியாக அவர் கூறிய அறிவுரை குளம் வெட்டும் முன்பு முறையான அனுமதி பெற்று வெட்டுவது மிகவும் நல்லது மற்றும் நேரடியாக விற்பனை செய்தல் அதிக லாபம் பெறலாம் என்றார். மற்றும் இவர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சிங்கப்பூர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக ஒருங்கிணைந்த பண்ணை 7 ஏக்கரில் செய்ய போகிறேன் என்றார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm