Monday, 2 April 2018

எருமை வளர்ப்பு பாகம் - 4

1. நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை :

எருமை அம்மை (Buffalo pox) :

இந்நோய் பொதுவாக இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றும். நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான் இதற்கு சரியான தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து ஈக்கள் மொய்க்காமல் பாதுகாத்தல் அவசியம்.

அறிகுறிகள் :

நோய் தொற்றி 2-5 நாட்களில் எருமையின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். பின்பு கடுகு அளவில் சிவப்புக் கொப்புளங்கள் ஆங்காங்கு தோன்றும். உள்ளே நீரற்ற இந்தக் கொப்புளங்கள் காம்புகளின் சற்று நீளமானதாகவும், மடியில் உருண்டை வடிவிலும் காணப்படும். பின்பு இவை வளர்ந்து ஒன்றோடொன்று இணைந்து பெரிதாகிவிடும். இக்கொப்புளங்கள் தானாகவே மறைந்து, மடி பழைய நிலையை அடைந்து விடும். ஆண் எருமைகளில் இவை முடி மற்றும் அழுக்கில் மறைந்திருப்பதால் அதிகமாகத் தெரிவதில்லை.

சிகிச்சை :

பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல் அதை சுத்தப்படுத்த வேண்டும். 1:1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவலாம். பாதிக்கப்பட்ட எருமை அப்புறப்படுத்தி தனியே பால் கறக்கவேண்டும். இந்த எருமைகளிலிருந்து கறக்கும் பாலை நன்கு காய்ச்சிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

பிளாக் குவார்டர் (Black Quarter) :

இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது.

பரவல் :

இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அறிகுறிகள் :

சில சமயங்களில் எருமைகள் அறிகுறி ஏதுமின்றி இறந்துவிடும். இதன் முக்கியமான அறிகுறி முன் அல்லது பின் பாதத்தில் வரும் வீக்கம் ஆகும். இதைத் தேய்க்கும் போது சதை தோலில் வெடிப்பு ஏற்படும். காய்ச்சல், கால்நடை நடக்க முடியாமை, வாலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அடித்துக் கொள்ளுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்நோய்க்கண்ட 24 மணி நேரத்தில் எருமை இறந்து விடும். பாதிக்கப்பட்ட இடம் சிறிது நேரம் மிக சூடாகவும், வலியுடனும் இருந்து பின்பு சாதாரணமாக ஆகிவிடும். பாதிக்கப்பட்ட பாகங்களின் தோல் வறண்டு, கடினமானதாக இருக்கும். செம்மறி ஆடுகளில் கழுத்து, பின் பகுதியின் சதைகள் பாதிக்கப்படும். காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்.

சிகிச்சை :

பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். ஏன்டிஆக்ஸிஸெரா, சர்போஃதையே போன்ற மருந்துகளும் இந்நோய்க்கு ஏற்றவை.

தடுப்பு முறை :

இந்நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதை விட, சுகாதாரமான முறையில் வருமுன் காப்பதே சிறந்ததாகும்.இறந்த எருமைகளை அகற்றி, எரித்து நோய் பரவாமல் சுத்தம் செய்யவேண்டும். காயம்பட்ட இடங்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.ஆலம் படிந்த ஃபாரிமலைஸ்டு கலந்த தடுப்பூசி சிறந்தது. மழைக்காலம் தொடங்கும் முன்பே தடுப்பூசி அளித்துவிட வேண்டும். செம்மறி ஆடுகளில், ஆண் மலடாக்குதல், குட்டி போடுதல் போன்ற செயல்களுக்கு முன்பு கட்டாயம் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஜோனிஸ் நோய் (Johne’s Disease) :

சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது.

பரவல் :

இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது.

கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு வெளிவரும் கழிவுகளில் இதன் அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை :

இந்நோய் பரப்பும் கிருமிகள் கீமோதெரப்பியூட்டிக் காரணிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மிக்கவை. இந்நோய் வந்தபின் குணப்படுத்துவது கடினம்.

கட்டுப்பாட்டு முறை :

கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. இந்தத் தடுப்பூசியில் ஜானிஸ் பேசில்லஸ் என்னும் நோய்த் தாக்க முடியாத குணம் உள்ளது. நோய் பாதிக்கப்பட்ட மந்தைகளில், உடனே பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.

ஆதாரம் : கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், திண்டுக்கல்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
கோழி இனங்கள் :

கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது. தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.

இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

* முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.

* வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.

* அதிக அளவுக் கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.

* இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.

* குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.

* ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோழி இனங்களின் வகைப்பாடு :

1. அமெரிக்க இனங்கள் :

* புதிய ஹேம்ப்ளையர்
* வெள்ளை விளை மொத்ராக்
* சிவப்பு ரோட்ஜலேன்
* வையான்டேட் II

2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள் :

* லெஹார்ன்
* மினோர்க்கா
* அன்கோனா

இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை.

3. ஆங்கில இனங்கள் :

* ஆஸ்டிராலார்ட்
* சுஸெக்ஸ்
* ஒர்பிங்டன்

இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்.

4. ஆசிய இனங்கள் :

பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.

5. இந்திய இனங்கள் :

* ஆசில் (சண்டைக்கோழிகள்)
* கடக்னாத்பர்ஸா

வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள் :

காப், ஹப்பர்டு, லோமேன், அனக் 2000, ஏவியன் 34, ஸ்டார்பிரா, சேம்ராட்.

முட்டையிட ஏற்ற இனங்கள் :

எ.கா பிவி 300, போவான்ஸ், ஹைலின், ஹச் மற்றும் என் நிக், டீகால் லொஹ்மேன்.

இறைச்சிக் கோழி :

இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்ாக அனுப்பப்படுகின்றன.

வளரும் பருவக் கோழிகள் :

முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.

முட்டையிடும் கோழிகள் :

முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.

ஆதாரம் : டாக்டர். பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோழிக்குஞ்சு இனங்கள் :

கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை வெள்ளை பெய் இனங்கள் நிறமுடைய வெள்ளை இனங்கள்.

இந்தியாவின் முட்டையிடும் கோழி இனங்கள் :

1. இனங்கள் : அசீல்
உடல் எடை (20 வாரங்கள்) : 1220
பருவ வயது அடையும் காலம் (நாட்கள்) : 196
ஆண்டு முட்டை உற்பத்தி (எண்ணிக்கையும்) : 92
40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) : 50
உற்பத்தித் திறன் : 66
பொரிக்கும் திறன் (FES(5) : 63

2. இனங்கள் : ஃபிரிஸில்
உடல் எடை (20 வாரங்கள்) : 1005
பருவ வயது அடையும் காலம் (நாட்கள்) : 185
ஆண்டு முட்டை உற்பத்தி (எண்ணிக்கையும்) : 110
40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) : 53
உற்பத்தித் திறன் : 61
பொரிக்கும் திறன் (FES(5) : 71

3. இனங்கள் : கடக்னாத்
உடல் எடை (20 வாரங்கள்) : 920
பருவ வயது அடையும் காலம் (நாட்கள்) : 180
ஆண்டு முட்டை உற்பத்தி (எண்ணிக்கையும்) : 105
40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) : 49
உற்பத்தித் திறன் : 55
பொரிக்கும் திறன் (FES(5) : 52

4. இனங்கள் : திறந்த கழுத்து (நெக் டு நெக்)
உடல் எடை (20 வாரங்கள்) : 1005
பருவ வயது அடையும் காலம் (நாட்கள்) : 201
ஆண்டு முட்டை உற்பத்தி (எண்ணிக்கையும்) : 99
40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) : 54
உற்பத்தித் திறன் : 66
பொரிக்கும் திறன் (FES(5) : 71

ஆதாரம் : மத்திய ஏவியன் ஆராய்ச்சி நிலையம்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நம்நாட்டு இனங்கள் :

சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. இவைக் குறைந்த உற்பத்தித் திறனே பெற்றுள்ளன. உள்ளூர் இனங்களான டெனிஸ், காஷ்மீர், ஃபேடரெல்லா, டில்ரி, பர்ஸா, டெல்லிச்சேரி, டான்கி, நிக்கோரை, காலஹஸ்தி போன்ற சில தூய இனங்களே உள்ளன., பல வகை கலப்பு இனங்கள் வளரும் இடங்களுக்குத் தகுந்தவாறு பல நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றில் அசீல், சிட்டாகாங், லாங்ஸான், பிரம்மா இரத்தம் போன்றவை நல்ல உற்பத்தியுள்ள வளாக்கக்கூடிய இனங்களாகும்.

அசீல் :

இக்கோழிகள் இதன் ஆற்றலுக்கும், சண்டைத் தன்மைக்கும், புகழ் பெற்றவை. இவை ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் காணப்படுகிறது. நன்கறியப்பட்ட இனங்களான (பொன்னிறச்சிவப்பு), யார்க்கின் (கருப்பு சிகப்பு), நியூரி 89 (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கறுப்பு, வெள்ளை) டீக்கர் (செம்பழுப்பு) ரெசா (இளம் சிவப்பு) போன்றவை குறைந்த உற்பத்தித் திறனே கொண்டாலும் தரம் மிக்கவை. நன்கு குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றவை. கொண்டை சிறிதாக தலையுடன் நன்கு அமைந்திருக்கும். கோழித் தாடி, காதுகள் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்கள் பெரிதாகவும் நல்ல பார்வைத்திறனுடன் இருக்கும். கழுத்து நீண்டு, சதையற்றதாக இருக்கும், உடலமைப்பு உருண்டையாகவும், மார்பகம் அகன்றும் முதுகு நேராகவும் உடலுடன் நெருக்கமாக அமைந்திருக்கும். மார்புப் பகுதியில் அதிக இறக்கைகள் இருக்காது. இறக்கைகள் கடினமாகவும் சிறகுத் துகளின்றிக் காணப்படும். வால் சிறியதாக சரிந்தும் கால்கள் நேராக, வலிமையானதாக சிறிது இடைவெளி விட்டுக் காணப்படும். சராசரி உடல் எடையளவு கிலோகிராமில் சேவல் 4-5, பெட்டைக் கோழி 34-, சேவல் குஞ்சு 3-5,4-5 பெட்டைக்குஞ்சு 2-5,3-5

ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யா, Handbook of Animal Husbandry

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கடக்னாத் :

இதன் உண்மைப் பெயர் காலம்சி எனப்படுகிறது. கருப்புச் சதையாலான கிண்ணம் போன்ற அமைப்பு என்பது இதன் பொருள் முட்கைள் சிறிது பழுப்பு நிறம் கொண்டவை. ஒரு நாள் வயதுக் குஞ்சு நீலம் கலந்த நிறத்தில் பின்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகளுடன் இருக்கும். பெரிய கோழியின் இறக்கை வெள்ளைநிறத்திலிருந்து தங்க நிறம் வரை பல நிறங்களில் வேறுபட்டுக் காணப்படும். தோல், பாதம், அலகு விரல்கள் சிலேட்டு நிறத்தில் காணப்படும். கொண்டை, தாடி, நாக்கு ஆகியவை கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். மேல் மூச்சுக் குழல், வயிற்றுக் காற்றரைகள், மார்புக் கூடு போன்ற உட்புற உறுப்புகள் கருமைக் கலந்த நிறத்துடன் இருக்கும். மூளை, மூளை உறைகள், நரம்புகள், எலும்புக் கூட்டுத் தசைகள், போன்றவையும் கருமைக் கலந்து காணப்படும். மெலனின் படிவதால் இரத்தம் கூட நிறமிகளைப் பெற்று கருஞ்சவப்பு நிறத்தில் தான் இருக்கும். சாதாரணக் கோழி வருடத்திற்கு 80 முட்டைகள் இடும். இக்கோழி இதன் இயற்கைச் சூழலில் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும். ஆனால் கூண்டில் அடைத்து வளர்க்கும் போது வாத நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள் :

1. இனங்கள் : எல்ஏ 77
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1300
7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1600
உணவை மாற்றும் தன்மை : 2.3
வாழ்திறன் (சதவீதம்) : 98-99

2. இனங்கள் : காரிபிரோ 91
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1650
7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 2100
உணவை மாற்றும் தன்மை : 1.94-2.2
வாழ்திறன் (சதவீதம்) : 97-98

3. இனங்கள் : காரிபிரோ (பலநிறம் கலந்தது)
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1600
7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 2000
உணவை மாற்றும் தன்மை : 1.9-2.1
வாழ்திறன் (சதவீதம்) : 97-98

4. இனங்கள் : காரிபிரோ நேக்டு நெக்
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1650
7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 2000
உணவை மாற்றும் தன்மை : 1.9-2.0
வாழ்திறன் (சதவீதம்) : 97-98

5. இனங்கள் : வார்னா
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1800
7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) : 1800
உணவை மாற்றும் தன்மை : 2.1-2.25
வாழ்திறன் (சதவீதம்) : 97

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1. இனங்கள் : ஐஎல்ஐ 80
முதல் முட்டை (வாரங்களில்) : 17-18
50 சதவிகித உற்பத்தி : 150 நாட்கள்
அதிக உற்பத்தி (வாரம்) : 26-28
வாழும் திறன் (சதவீதத்தில்) : வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94)
அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) : 92
தீவனம் உட்கொள்ளும் திறன் : 2.1
முட்டை எடை (கிராமில்) : 54
சராசரி முட்டை உற்பத்தி : 280 முட்டைகள்

2. இனங்கள் : கோல்டன் 92
முதல் முட்டை (வாரங்களில்) : 18-19
50 சதவிகித உற்பத்தி : 155 நாட்கள்
அதிக உற்பத்தி (வாரம்) : 27-29
வாழும் திறன் (சதவீதத்தில்) : வளரும் கோழி (96) முட்டையிடுபவை (94)
அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) : 90
தீவனம் உட்கொள்ளும் திறன் : 2.2
முட்டை எடை (கிராமில்) : 54
சராசரி முட்டை உற்பத்தி : 265 முட்டைகள்

3. இனங்கள் : பிரியா
முதல் முட்டை (வாரங்களில்) : 17-18
50 சதவிகித உற்பத்தி : 150 நாட்கள்
அதிக உற்பத்தி (வாரம்) : 26-28
வாழும் திறன் (சதவீதத்தில்) : வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94)
அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) : 92
தீவனம் உட்கொள்ளும் திறன் : 2.1
முட்டை எடை (கிராமில்) : 57
சராசரி முட்டை உற்பத்தி : 290 முட்டைகள்

4. இனங்கள் : சோனாலி
முதல் முட்டை (வாரங்களில்) : 18-19
50 சதவிகித உற்பத்தி : 155 நாட்கள்
அதிக உற்பத்தி (வாரம்) : 27-29
வாழும் திறன் (சதவீதத்தில்) : வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94)
அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) : 90
தீவனம் உட்கொள்ளும் திறன் : 2.2
முட்டை எடை (கிராமில்) : 54
சராசரி முட்டை உற்பத்தி : 275 முட்டைகள்

5. இனங்கள் : தேவேந்திரா
முதல் முட்டை (வாரங்களில்) : 18-19
50 சதவிகித உற்பத்தி : 155 நாட்கள்
அதிக உற்பத்தி (வாரம்) : 27-29
வாழும் திறன் (சதவீதத்தில்) : வளரும் கோழி (97) முட்டையிடும் (94)
அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) : 90
தீவனம் உட்கொள்ளும் திறன் : 2.5
முட்டை எடை (கிராமில்) : 50
சராசரி முட்டை உற்பத்தி : 200 முட்டைகள்

ஆதாரம் : மத்திய ஏவியான் ஆராய்ச்சி நிலையம்

மேலே குறிப்பிட்டுள்ள கோழி இனங்களை காணொளியாக பதிவிட்டுள்ளேன் : https://www.youtube.com/watch?v=JGZItYevWKU

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
மனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..!

எங்கு பார்த்தாலும் வாடி வறண்ட செடிகள், விரிசல் விழுந்து இப்பவோ அப்பவோ என்று மரங்கள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. புதியதாக எந்த மரங்களையுமே காணோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு செடிகளும் புற்களுமே செழிப்பாக வளர்கின்றன. உலகின் கடைசி விலங்கையும் அடித்துக் கொன்று தின்றுகொண்டிருந்தார்கள், உடலில் எலும்பைத் தவிர வேறெதுவும் இல்லாத ஒரு சிலர். அது தான் கடைசி விலங்கு, இனி சாப்பிட மாமிசம் கூட கிடைக்காது. மனித மாமிசத்தைத் தவிர. அதையும் சில பகுதிகளில் தொடங்கிவிட்டனர். சைவ உணவு உண்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தாகிவிட்டது. ஒரு கிலோ தக்காளியின் விலை ஒரு லட்சம் ரூபாய். உலகின் ஒவ்வொரு மனிதனும் வாரத்திற்கு ஒருவேளை சாப்பிடுவதற்கே உணவைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலம் வளர்க்கப்படும் தாவரங்கள் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கும் அளவிற்கு இல்லை. கொத்துக் கொத்தாக பஞ்சத்தால், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

இது கற்பனையல்ல. நிஜத்தில் வரும் காலத்தில் நிகழக்கூடியவை. உலகின் கடைசித் தேனீ அழியும்போது நமது நிலை இதுதான். அளவில் மிகச்சிறிய தேனீக்கள் சூழலுக்கும், தாவரங்களின் பசுமைக்கும் இன்றியமையாதது. ஒரு விதையை விதைத்து அதற்குத் தேவையான உரங்களைப் போடுங்கள், தேவையான நீரைத் தாருங்கள். ஆனால் அவற்றைத் தேனீக்கள் அண்டாத வகையில் பாதுகாத்து வையுங்கள். அத்தாவரத்தின் வளார்ச்சி நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நமக்குத் தேவையான பூக்களோ, பழங்களோ மேலும் அவற்றை வளரச் செய்வதற்குத் தேவையான விதைகளோ எதையுமே அது தராது.

செடிகள் கருத்தரிப்பதற்கும், பல்கிப் பெருகுவதற்கும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். அது இரண்டு முறைகளில் நடைபெறும். சுய மகரந்தச் சேர்க்கையில் ஒரே செடியில் பிறக்கும் ஆண் பூக்கள் அதே செடியின் பெண் பூக்களுக்குத் தனது மகரந்தத் துகள்களை அனுப்பி கருத்தரிக்கச் செய்கிறது. இது உலகின் மொத்த தாவரங்களில் சிலவற்றிலேயே நடைபெறும். ஆனால், பெரும்பாலான செடிகள் அயல் மகரந்தச் சேக்கை மூலமே வம்சவிருத்தி அடைகின்றன. அதாவது, ஒரு செடியில் இருக்கும் ஆண் மலரின் மகரந்தத் துகள்களை வேறொரு செடியின் பெண் மலருக்குத் தந்து கருத்தரிக்கச் செய்வது. செடிகளால் நகர முடியாதல்லவா, அதனால் அவற்றுக்குப் பூச்சிகள் உதவுகின்றன. அவை ஆணின் வித்துக்களைச் சுமந்துசென்று பெண் மலரிடம் சேர்க்கிறது. இவ்வாறு செய்பவற்றைப் பூந்து சேர்ப்பிகள் (Pollinators) என்று அழைப்பார்கள். இந்தப் பணியில் பங்கெடுப்பதில் 90% பணியாளர்கள் தேனீக்கள் தான்.

தேனீக்கள் அழிந்துவிட்டால், இந்தப் பணி முழுவதும் நிறைவடையாமல் ஸ்தம்பித்துவிடும். உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் சுமார் 250,000 தாவர வகைகள் கருத்தரிப்பதற்குத் தேனீக்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. மகரந்தச் சேர்க்கை நிகழாமல் இனப்பெருக்கம் நிகழுமா, உணவுப் பொருள்கள் தான் கிடைக்குமா?

பிறகு இந்த அயல் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகிவிடும். இந்தப் பணிச் சுமையைத் தாங்குவது எளிதான காரியமல்ல. அதனால் அதன்மூலம் கிடைக்கும் உணவுப்பொருள்களின் விலையும் தாறுமாறாக உயரும். 100இல் 99 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். உணவுப் பஞ்சம் மனித இனமே அழியக்கூடிய நிலைக்கு ஏற்படும். உலகப் பொருளாதாரமே முடங்கிவிடும். உணவைத் தேடுவதே பிரதான வேலையாகிவிடும். சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் தாவரங்களில் உணவைத் தேடிக்கொள்ளும் நிலைக்கு நமது உணவுப் பழக்கம் பழகுவதற்குள் உலகின் பாதி மக்கள் தொகையை இழந்துவிடுவோம். ஆடைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் பருத்தி இல்லாமலே ஆடை உடுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

அட இதையெல்லாம் இப்ப எதுக்குப்பா சொல்லிகிட்டு இருக்க? தேனீக்களுக்கு இப்ப என்ன குறை வந்துடுச்சு?

கடந்த 20 வருடமாகச் சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வடக்கில் பஞ்சாபில் இருந்து தெற்கில் கேரளா வரையிலும், மேற்கில் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கில் திரிபுரா வரையிலும் அனைத்து மாநில விவசாயிகளும் அவர்களது பகுதிகளில் தேனீக்களின் வரத்து முன்பிருந்ததைவிட குறைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேனீ என்றில்லை, தேனீ இனத்தைச் சேர்ந்த எந்த வகையும் பெருமளவில் வருவதில்லை என்று அஞ்சுகிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றில் சுய மகரந்தச் சேர்க்கையே நடைபெற்றாலும் அவற்றை மட்டுமே உண்ணமுடியாது. காய் மற்றும் கனி வகைகளின் உற்பத்தி இவற்றின் வருகை பாதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வருந்துகிறார்கள்.

தேனீக்களின் வருகை ஏன் குறைகிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகளவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் பெரும்பாலான நாடுகள் ரசாயன உரங்களின் மூலம் அதீத உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். பின்னாளில், அவர்களது வியாபார வெறி அதை வைத்துப் பணத்தில் புரள நினைத்த வியாபாரிகளின் பேராசை அதை உலகம் முழுக்கப் பரவச் செய்தது. இன்று விவசாயம் என்றால் ரசாயன உரமின்றி சாத்தியமில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க, பெண் மலர்களைக் கருத்தரிக்கச் செய்வதற்கு மகரந்தத் துகள்களை ஆண் மலரில் சேகரிக்கும் தேனீக்கள் அவற்றோடு ரசாயனத்தையும் உட்கொள்கின்றன. தொடக்கத்தில் அவற்றின் உணர்கொம்பு திறனை இழப்பதால் மணங்களை நுகரும் திறனை இழந்து மலர்களைக் கண்டடைய முடியாமல் தவிக்கின்றன. பிறகு, அந்த ரசாயனம் அவற்றின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் தசைகள் முடக்கப்பட்டு இறந்துவிடுகின்றன.

அவற்றின் மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களைச் சார்ந்து வாழும் தாவர உண்ணிகள் உணவின்றி அழியத்தொடங்குவதில் இருந்து உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிப்பது, உலகளவில் பஞ்சம், புது மரங்கள் வளராமல் போவதாலும் இருக்கும் மரங்களும் அழிந்துபோவதாலும் நீர்த்தேக்கச் செயல்பாடுகள் நிகழாமல் நன்னீர் பற்றாக்குறை ஏற்படும். நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து சங்கிலித் தொடரில் பின்னிப்பிணைந்து வாழும் வகையில் அமைத்திருக்கிறது இயற்கை. அதன் படைப்பில் அனைத்தும் செழித்து வாழ்வதற்கு அது வகுத்தளித்த பாதையில் இருந்து பிறழ்ந்து சென்றது மனித இனம். அந்த ஒரு இனத்தின் பிறழ்வு உலகின் இயக்கத்தையே ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 1 April 2018

எருமை வளர்ப்பு பாகம் - 3

1. எருமைக் கன்றுகளின் தீவன ஊட்டம்
2. கன்றுகளுக்கான தீவனம்
3. கன்றுக்களுக்கான கலப்புத் தீவனம்

எருமைக் கன்றுகளின் தீவன ஊட்டம் :

இந்தியாவில் கன்றுகளின் இறப்பு விகிதம் (30-40 சதவிகிதம்) அதிகம். இது சரியாக பால் வழங்கப்படாமை, காயங்கள், நோய்த்தாக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது. கன்றுகளுக்கு சரியான தீவனமும், கவனிப்பும் அளித்துப் பராமரித்தல் இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவும்.

பிறந்த கன்றுக்கு சீம்பால் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். கன்று பிறந்த 12 மணி நேரத்திற்குள் சீம்பாலானது ஊட்டப்பட வேண்டும். கன்று உயிர்வாழத் தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சீம்பாலில் அடங்கியுள்ளன. சீம்பாலானது சுரக்கும் வரை அதாவது 3-4 நாட்களுக்கு கன்றுக்கு சீம்பால் தரப்படவேண்டும். கன்று ஊட்டியது போக மீதமுள்ள சீம்பாலை பீய்ச்சி வேக வைத்தோ அல்லது குளிர்விப்பானில் வைத்தும் பயன்படுத்தலாம். குளிர்விப்பானில் வைக்கும் போது சீம்பாலானது 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். லேக்டிக் அமிலம் மூலம் சீம்பால் ஆனது நொதிக்க வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்த பாலானது 2 வாரங்கள் வரை குளிர்விப்பானில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

தாய் எருமை கன்றை தன்னிடம் ஊட்ட அனுமதிக்கவில்லையெனில் பாலை பீய்ச்சி சிறிதளவு வெப்பநிலைக்கு (39 டிகிரி செல்சியஸிற்கு) காய்ச்சி சிறிது நேரம் வைத்து கன்றுக்கு அருந்தக் கொடுக்கலாம். சீம்பாலை எக்காரணம் கொண்டும் கொதிக்க வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள நுண்ணுயிரிகள் அனைத்துதம் அழிந்துவிடும்.

கன்று தானாகவே தாயிடம் சென்று அடிக்கடி ஊட்டும். ஆனாலும் சிறிதளவே பால் குடிக்கும். எனவே பாலை கறந்து நாளொன்றுக்கு இரண்டு வேளையாவது நாமே காட்டுவது நல்லது. கன்றை வாளியிலிருந்து நீர் அருந்தப் பழக்கவேண்டும். இதற்கு வாளித் தண்ணீரினுள் கையைவிட்டுக் கன்றை அந்தக் கையை நக்குமாறும், ஊட்டுமாறும் பழக்கவேண்டும். இவ்வாறு நீர் அருந்தப் பழக்கினால் உணவூட்டமும் அதற்கு எளிதாக இருக்கும். கன்று பிறந்து 4-5 நாட்கள் வரை நீர் மற்றும் பால் அருந்தப் பழக்கவேண்டும்.

சீம்பாலை அடுத்து 15 நாட்கள் வரை கன்றின் உடல் எடையில் 1/8 பங்கு 1/10 பங்கு வரை தாய்ப்பால் வழங்கப்படவேண்டும். அதன் பிறகு சிறிது பாலுடன் சேர்த்து பிற உட்டச்சத்துக்களுடன் கூடிய அடர் தீவனம் அளிக்கப்படலாம். பாலை நிறுத்தி (திடீரென) உடனடியாக வெறும் அடர் தீவனம் மட்டும் கொடுத்தால், ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படலாம். நாளொன்றுக்கு இரு வேளை என்ற அளவில் கொழுப்பு நீக்கிய பாலும், தீவனமும் கலந்து அளிக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குப் பின்பு., பசும்புல், கலப்புத்தீவனம் போன்றவை (அட்டவணை 3ல் காட்டிய படி) அளிக்கலாம். இதுவே செரிமானத் திறனை அதிகப்படுத்தும். கீழ்க்காணும் அட்டவணைப்படி தீவனமிடும்போது முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு 0.35 கி.கி அளவு பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

* முதல் 3-4 நாட்கள் சீம்பால் கொடுக்கலாம்.

* சிறிது சிறிதாக கொழுப்பு நீக்கிய பாலை பாலுக்கு பதிலாகக் கொடுத்துப் பழக்கவும்.

* மற்றொரு முறையில் செவிலித்தாய் ஊட்டம் மூலமும் பால் அளிக்கச் செய்யலாம். இத்தாலி போன்ற நாடுகளில் 40 சதவிகிதம் எருமைக் கன்றுகளில் அதிக பால் தராத எருமைகள் அல்லது மாடுகளில் பால் ஊட்டம் செய்யப்படுகின்றன. இதனால் ஆட்செலவு குறைவதோடு, கன்றுக்கும் நல்ல பாலூட்டம் கிடைக்க ஏதுவாகிறது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுக்களுக்கான கலப்புத் தீவனம் :

தீவனப் பொருள் - அளவு

நசுக்கப்பட்ட பார்லி - 50

கடலைப்புண்ணாக்கு - 30 சதவிகிதம்

கோதுமைத் தவிடு - 8 சதவிகிதம்

மீன்துகள் / கொழுப்பு நீக்கிய பால் பவுடர் / மாமிசக்கழிவு - 10 சதவிகிதம்

தாதுக்கலவை - 2 சதவிகிதம்

கரும்புச்சக்கை - 5-10 கிகி

உப்பு - 500 கிராம்

சோளம், கம்பு, ஓட்ஸ் போன்ற பயிர்களின் தட்டுக்களை வெறுமனே எதுவும் கலக்காமல் கொடுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் ஏதும் கால்நடைகளுக்குக் கிடைப்பதில்லை. மாறாக யூரியா, கரும்புச் சக்கை, உப்பு போன்ற பொருட்களை சேர்த்து நேர்த்தி செய்து அளிக்கும் போது கால்நடைகளுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன. நேர்த்தி செய்த சோளத்தட்டை அளிக்கும் போது எருமைக் கன்றின் எடை 150-200 கி.கி வரை கிடைக்கிறது.

இளம் எருமைகளுக்கான தீவனத் தேவை :

* இளம் எருமையானது நல்ல ஊட்டச்சத்துக்களுடன் முறையாக கவனிக்கப்படவேண்டும். அப்போது தான் அதிலிருந்து ஆரோக்கியமான நல்ல எடையுள்ள கன்று கிடைக்கும். எல்லா விலங்குகளுக்கும், எல்லா காலங்களிலும் நிறைய தீவனம் அளிப்பது சாத்தியமில்லை. எனினும் பசுந்தீவனங்கள் கிடைக்கும் காலங்களில் நல்ல பராமரிப்பு அவசியம்.

* இளம் எருமையை நன்கு கவனிக்க வேண்டும். அதன் உடல் எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவேண்டும். எடை சரியாக இல்லையெனில் தீவன அளவைச் சரி செய்யவேண்டும்.

* இளம் எருமைகளுக்கு 4-7 கி.கிராம் பசுந்தீவனம் நாளொன்றுக்கு அளிக்கப்படவேண்டும். அதனுடன் தானிய வகைகள், அடர் தீவனம் போன்றவை அளிக்கலாம்.

* அம்மோனியா கலந்த வைக்கோல் இருந்தால் அதைத் தரம் குறைந்த தீவனங்களுடன் கலந்து அளிப்பதால் அந்தத் தீவனங்களை கால்நடைகள் விரும்பி உண்ணும். பதப்படுத்தப்பட்ட தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளிக்கலாம்.

* முதல் கன்று ஈனும் இளம் எருமையின் ஒரு நாள் தீவனம் என்பது 1-1.5 கி.கி உலர் தீவனம், 3 கி.கி பசும்புல் மற்றும் 1 கி.கி அடர் தீவனம் ஆகும்.

* எருமைகளின் உடல் எடையை அதிகரிக்க வெறும் வைக்கோல் தீவனம் மட்டும் போதாது. வைக்கோலை அம்மோனியாவுடன் பதப்படுத்திப் பின்பு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்துடன் மாற்றி மாற்றி அளிப்பதே நல்ல ஆரோக்கியமான எருமை வளர்ப்பிற்கு ஏற்றது.

பால் வற்றிய எருமை மாடுகளின் தீவனப் பராமரிப்பு முறை :

பால் வற்றிய சினை எருமைகளுக்குக் கன்று ஈனும் 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே நல்ல முறையான தீவனப் பராமரிப்பு அவசியம். இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், முர்ரா இன எருமைகளில் நடத்திய ஆராய்ச்சியின் படி கன்று ஈனுவதற்கு 2 மாதம் முன்பு அட்டவணையில் காட்டிய உணவில் 125 சதவிகிதம் அளவு தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்போது தான் கன்று நல்ல வளர்ச்சி, எடை மற்றும் ஆரோக்கியத்துடன் பிறக்கும். கன்று ஈன்ற பிறகு 100 சதவிகிதம் அளவு தீவனம் அளித்தால் போதுமானது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இறால் மீன் வளர்ப்பது எப்படி?


கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே… பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக… குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.

தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!

தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின் இறால் பண்ணையை வலம் வந்தோம். ”எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்… அந்த சமயத்துல, இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால, குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே… இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள் நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே… மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா இறால் வளர்த்துட்டுருக்கேன்.

இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா… ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை இருக்கு” என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.

100 நாட்களில் வருமானம்!

”நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட, இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7 ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர், கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய ‘லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன்” என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால் வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

‘களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.

குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி… அதில், 50 கிலோ ஈரச் சாணம்,5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.

தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.

தீவனம்… கவனம்! 

குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.

38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்… 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.

ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!

60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்’ தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன் நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.

”அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.

தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம். உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர் குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம்” என்றார், மகிழ்ச்சியாக.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm