Sunday, 9 December 2018

பாரம்பரிய நெல் :

பாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.

பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது. இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது.

பாரம்பரிய அரிசியின் பெருமை :

பாரம்பரிய அரிசி ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும் மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன.

நவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் :

தென்னிந்திய வரலாறு, அரிசியைக்கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளின் பிரதான உணவாகவும் இடம்பெற்றுள்ள அரிசி, ஒவ்வொரு தனிமனிதனின் விழா, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் அத்தியாவசிய அங்கமாகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் பகுதியை, தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என புகழ்பெற்றுள்ளது. அரசர்கள் ஆண்ட காலத்தில் சுமார் 400 வகையான நெல் வகைகள் இருந்துள்ளதாகவும், பண்டைய தமிழர்களின் வீட்டு வகைகளாக இருந்த அந்த பாரம்பரிய நெல் இரகங்களின் பெயர்களை சேகரிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் உள்ளது.

குறிப்பு : இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய நெல் வகைகளில், அனைத்து நெல் பெயர்களும் உண்மையென்ற போதிலும், அதற்கான முழுவிவரங்கள் கிடைக்கக்கூடியது அல்ல, இருபினும், நம் நண்பர்கள் பண்டைய நெல் பெயர்களை அறிந்துக்கொள்ளவே இங்கே பதிவிட்டுள்ளேன். அவை,

1. அரியான்
2. அரியநாகன்
3. அரிக்கிராதி
4. அதிக்கிராதி
5. அச்சதித்தவன்
6. அரைச்சம்பா
7. அறுபதாம் குறுவை
8. அறுவதாங் கொடை
9. அறுபதுக்கு இருபது
10. அடுக்குச்சம்பா
11. அழகுச்சம்பா
12. அழகிய மணவாளன்
13. அன்னமழகி
14. அன்னச் சம்பா
15. அன்னதாளி
16. அம்பலவாணன்
17. ஆனைக் கொம்பன்
18. ஆனைக்கோடன்
19. ஆனைக் கொம்பு சம்பா
20. இடையபட்டிச்சம்பா
21. இலுப்பைப்பூ சம்பா
22. இரவாரி
23. இரங்கல் மீட்டான்
24. இரங்கஞ்சம்பா
25. இராச பாலன்
26. இராச வாணன்
27. இராமபாணம்
28. இருமிளகி
29. ஈர்க்குச்சம்பா
30. ஈசர்கோவை
31. உவர்முண்டான்
32. ஊசிச்சம்பா
33. ஒட்டடையான்
34. ககைச்சம்பா
35. கசப்புச்சார்
36. கடப்புவரகு
37. கடப்புக்கார்
38. கட்டச்சம்பா
39. கடுகுச் சம்பா
40. கடுக்கன் பரிபாலன்
41. கப்பக்கார்
42. கரியணிக்கட்டி
43. கருஞ்சூரை
44. கருங்கூரை
45. கருங்குறுவை
46. கருங்குருனா
47. கண்ணகி
48. கண்ணாடிக் கூத்தன்
49. கண்ணாடிச் சாத்தான்
50. கதலி வாழை
51. கத்தன்
52. கத்தூரி
53. கத்தூரிவாணன்
54. கருவாலன்
55. கருவாலன் சம்பா
56. கருணா
57. கருடன் சம்பா
58. கம்பன் சம்பா
59. கம்பஞ்சம்பா
60. கம்மஞ்சம்பா
61. கருணைவாரி
62. கருமணல்வாரி
63. கருத்த நெல்
64. கருப்பு அரிசி நெல்
65. கருப்புக் கவுனி
66. கருப்புக்காலி
67. கற்பூரவாடை
68. கற்பூரப்பானை
69. கறுப்பாலி
70. கல்லுண்டை
71. கல்லுருண்டை
72. கல்லுண்டைச் சம்பா
73. கலியன் சம்பா
74. கலியுகராமன்
75. கள்ளிமடையான்
76. களர் சம்பா
77. களர் பாலை
78. கட்டைவாலன்
79. காட்டுப் பொன்னி
80. காட்டுயானம்
81. காடைக் கழுத்தன்
82. காடைக்கன்னி
83. காடைச்சம்பா
84. காச்சம்பா
85. கார்
86. கார்குருகை
87. கார்த்தியசம்பா
88. காளான்சம்பா
89. காலா நமக்
90. காலிங்கராமன்
91. கிச்சலி சம்பா
92. குழவாழை
93. குடவாழை
94. குலைவாழை
95. குளவாழை
96. குண்டுச்சம்பா
97. குண்டைச் சம்பா
98. குதிரைவால் சம்பா
99. குதிரை வாலன்
100. குத்தாரி
101. குருவிக்கார்
102. குழியடித்தான்
103. குளித்தான்
104. குள்ளக்கார்
105. குற்றாலன்
106. குறக்குரு கண்ணன்
107. குறுஞ்சம்பா
108. குரும்பை
109. குருவை நெல்
110. குடும்பை
111. குறுவை (ஏ டி டீ - 3)
112. குறுவைக் கிள்ளை
113. குறுவைக் களஞ்சியம்
114. குருவைக் கலையான்
115. குறுவைச் சர்க்கரை வண்ணன்
116. குன்றிமணிச்சம்பா
117. குட்டாடை
118. குட்டைச் சிவப்பன்
119. குங்குமச்சம்பா
120. குங்குப் பாவை
121. குங்கும வெள்ளை
122. கூம்பாளை
123. கூம்வாளை
124. கூகைச்சம்பா
125. கைவரைச்சம்பா
126. கொக்கு நிறுத்துய்ய சம்பா
127. கொசும்பா நெல்
128. கொம்பாளை
129. கொடைக் கழகன்
130. கோடைச்சம்பா
131. கோரைச்சம்பா
132. கோதண்டராமன்
133. கோதுமைச் சம்பா
134. கொடைக் கழகன்
135. கோதும்பை
136. கைவிதைச் சம்பா
137. சங்கர வண்ணன்
138. சடமிளகி
139. சடைக்கார்
140. சண்டி கார்
141. சம்பா மோசனம்
142. சம்பா முத்து
143. சம்பா
144. கொடைக் கழகன்
145. சன்னச் சம்பா
146. சன்னப் பூம்பாளை
147. சலகண்டன்
148. சாலி
149. சமுத்திரம்
150. சிங்கினிகார்
151. சித்திரக்காரி
152. சித்திரக்காளி
153. சித்திரை கார் (Chithiraikar)
154. சித்திரை கார் (பாண்டி) (Chithiraikar (Pondy)
155. சிறுமணியன்
156. சிறு நாகராசன்
157. சிறுபேரா வண்ணன்
158. சிறுகுறுவையிடைக்காட்டான்
159. சிறை மீட்டான்
160. சிவப்பு சித்திரை கார்
161. சிவப்புக் கவுணி
162. சின்னச் சம்பா
163. சின்ன வாலன்
164. சின்ன அறுபதாங் கோடை
165. சின்னட்டிச்சம்பா
166. சிதாபோக நெல்
167. சீதாபோகம்
168. சீத்தா வல்லிக் குறுவை
169. சீரகச் சம்பா
170. சீராமபாணம்
171. சுருணைவாலன்
172. சுந்தர புழுகுச்சம்பா
173. சூரன் குறுவை
174. சூலை குறுவை
175. சூரியச் சம்பா
176. சூடகச் சம்பா
177. செங்கல்பட்டு
178. செங்கல்பட்டு சிறுமணி
179. செங்குறுவை
180. செஞ்சாலி
181. செஞ்சம்பா
182. செந்நெல் (Chennel)
183. செந்தாழை நெல்
184. செவ்வாழை
185. செவ்வாழன்
186. செம்மிளகி
187. செம்மழகி
188. செம்பாளை
189. செம்பிலிபிரியன்
190. செல்லச் சம்பா
191. செழும்பனை முகரி
192. செருக்குரும்பை
193. சொரணாலி
194. சொரி குரும்பை
195. சொர்ணமசூரி
196. சொல்லச்சம்பா
197. தங்க அரிசி நெல்
198. தானச் சம்பா
199. தங்கச் சம்பா
200. தம்பான்
201. திருப்பதிசாரம்
202. திருவரங்க செந்நெல்
203. திருமங்கையாழ்வான்
204. தில்லைக் கூத்தன்
205. தில்லை நாயகன்
206. துரை வாணன்
207. தூயமல்லி
208. தெக்கலூர் சம்பா
209. தேவன் சம்பா
210. தேங்காய்ப்பூ சம்பா
211. தொப்பிச்சம்பா
212. தோட்டஞ்சம்பா
213. நவரை
214. நற்பொசும்பா
215. நாராயணன் நெல்
216. நீலஞ்சம்பா
217. நூற்றிப் பத்து
218. நெய் கிச்சி
219. நெடு மூக்கன்
220. நெல்லன் சம்பா
221. நொறுங்கன்
222. பக்கிரி சம்பா
223. பனங்காட்டு குடவாழை
224. பனை முகரன்
225. பனை முகத்தான்
226. பவளச்சம்பா
227. பச்சை வண்ணன்
228. பச்சை நாயகன்
229. பரிமள ராமன்
230. பண்ணாடி காத்தான்
231. பத்தன்
232. பள்ளிகொண்டான்
233. பன்றிக்கூரன்
234. பாளை முகன்
235. பானை முகன்
236. பாற் கடுக்கன்
237. பாரக் கருக்கன்
238. பாலுக்கினியான்
239. பிச்சாவரை
240. பிசினி
241. பிறங்கலமிட்டான்
242. பிரியாணிச்சம்பா
243. புத்தன் வாரி
244. புருகு சீரகச்சம்பா
245. புளுகு சீரகச்சம்பா
246. புழுகுச்சம்பா
247. புனுகுச்சம்பா
248. புழுதிக்கார்
249. புழுதிபிரட்டி
250. புன்னைவனச் சம்பா
251. புன்னைப்பூச் சம்பா
252. பூபாலை பாலன்
253. பூஞ்சாலி
254. பூசைப்பாடி
255. பூங்கார்
256. பூவஞ்சம்பா
257. பூவானிசம்பா
258. பெரிய அறுபதாங் கோடை
259. பெருங்கார்
260. பெருவெள்ளம்
261. பெங்களூர் சம்பா
262. பொய்கைச் சம்பா
263. பொட்டி சம்பா
264. பொற்காளி
265. பொற்காலி சொக்கநாதன்
266. பொற்பாளை
267. பொன்னாயகன்
268. மங்கலச் சம்பா
269. மங்கலப் பிச்சை
270. மதுரவேலி
271. மணக்கொத்தன்
272. மணக்கத்தை
273. மணவாளன்
274. மணல்வாரி
275. மணவாரிவாலன்
276. மச்சு முறித்தான்
277. மணிச்சம்பா
278. மட்டை கார்
279. மரநெல்
280. மருவில்லி
281. மலைமுண்டான்
282. மதுரவேலி
283. மல்லி
284. மல்லிகை
285. மல்லிகைச்சம்பா
286. மல்லியப் பூசம்பா
287. மாணிக்கமாலை
288. மாலை புத்தன்
289. மாப்பிள்ளைச் சம்பா
290. மிளகுச் சம்பா
291. மின்னல் சம்பா
292. முக்கண்
293. முண்டன்
294. முட்டைக்கார்
295. முத்து வெள்ளை
296. முத்து விளக்கி
297. முத்துச் சம்பா
298. முத்து வண்ணச் சம்பா
299. முக்காச்சம்பா
300. முடுவு முழுங்கி
301. முருங்கைக் கார்
302. முள்ளுக் குறுவை
303. முளை நெடுமூக்கன்
304. முனை நெடுமூக்கன்
305. முல்லைச் சம்பா
306. மூங்கில்சம்பா
307. மேகத்திரை கொண்டான்
308. மைச்சம்பா
309. மைசூர் மல்லி
310. மொட்டைச் சம்பா
311. மொட்டைக் குறுவை
312. யானைமுகன்
313. வங்கி
314. வரகஞ்சம்பா
315. வரப்புக் குடைஞ்சான்
316. வரியான்
317. வர்ண பொற்பாளை
318. வல்லளராயன்
319. வண்டாளை
320. வளைதடிச்சம்பா
321. வனச்சம்பா
322. வாசனை சீரகச்சம்பா
323. வாடை
324. வாடன் சம்பா
325. வால் சிவப்பு
326. வாரிநெல்
327. வாலான்
328. வாலன் நெடுமூக்கன்
329. விங்கிநாராயணன்
330. வீதிவிடங்கன்
331. விஷ்ணுபோகம்
332. வெந்தயச் சம்பான்
333. வெள்ளை குறுவை கார்
334. வெள்ளைப்பொன்னி
335. வெள்ளை மலை
336. வெள்ளை
337. வெம்பா
338. வைகுண்டா


இதில் ஐயா நெல் ஜெயராமன் மீட்டெடுத்தது சுமார் 174 வகைகள் அதில் சில வகைகளை காணொளியில் காணலாம் : https://www.youtube.com/watch?v=bBVACrKyonU Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 4 December 2018

உலக மண் தினம் 5 டிச 2018 :

உயிர்கள் வாழ மண்ணைக் காப்போம்!

உலக அளவில் தற்போது 85 கோடி மக்கள் போதுமான உணவின்மையாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும் தவிக்கும் நிலையில், மண் வளத்தின் தன்மை மேலும் குறையுமானால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். மண் வளத்தைக் காக்கும் விழிப்புணர்வை உலகமெல்லாம் ஏற்படுத்தும் பொருட்டு டிச.,5 ம் நாள் 'உலக மண் தினம்' என கொண்டாடப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு தேவை :

வரும் 2050ம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படையில் மண் வளம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2002 முதல் டிச.,5 ம் நாள் 'உலக மண் தினம்' என கொண்டாடப்பட்டு வருகிறது. ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப்பொருட்களும், 25 விழுக்காடு நீர், 25 விழுக்காடு வளியும், 5 விழுக்காடு நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன.

மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன. பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பல்வேறு நிறங்களில் மண் வகைகள் இருந்தாலும், பொதுவாக கருப்பு, பிரவுன் மற்றும் சாம்பல் நிறங்களிலேயே காணப்படுகின்றன. மண்ணரிப்பு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், கடல்நீர் ஊடுருவல் போன்ற செயல்பாடுகளே மண் வளம் சீர்கேடு அடைவதற்கான காரணம். ஒட்டு மொத்த உலகப் பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தை வகிக்கிறது. இந்தியா 32 லட்சத்து 87 ஆயிரத்து 782 ச.கி.மீ., பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 45 விழுக்காடு நிலப்பரப்பு வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது. களிமண், செம்மண், கரிசல்மண் என எட்டு விதமான மண் வகைகள் காணப்படுகின்றன.

மண்ணுக்குள் கனிமப் பொருட்கள் :

தமிழகத்தைப் பொறுத்தவரை 130 லட்சம் எக்டேர் பரப்பளவு நிலத்தைக் கொண்டுள்ளது. இதில் 63 லட்சம் எக்டேர் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற மண் வளத்தையும், செறிவையும் கொண்டுள்ளது. தாவர இனங்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் இந்த மண்ணில் நிறைந்துள்ளன. பொழிகின்ற மழைநீரை மண்ணுக்குள் ஈர்த்துக் கொள்ளவும், காற்றின் மூலமாகக் கிடைக்கும் நுண்ணுாட்டங்களைப் பெற்றுக் கொள்ளவும் மண்வளம் செறிந்த தன்மையில் இருக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் மண்வளம் :

அடுத்த 50 ஆண்டுகளுக்குள் நிகழக்கூடிய மக்கள் தொகைப் பெருக்கம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. அதில் குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் தேவை இரு மடங்காகவும், தண்ணீர் தேவை 150 விழுக்காடு கூடுதலாகவும் அதிகரிக்கும். நமது பருவநிலையில் நிகழ்ந்த மாறுதல் காரணமாக உயிரிப்பன்மயத்திலும் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் சிக்கல், நகர்ப்புறங்களின் மண் வளத்தை மிகப் பெருமளவு பாதிக்கக்கூடும். காடுகளில் நிகழ்ந்த சூழல் கேடுகளும், அழிவுகளும் உயிரிப்பன்மயத்திற்கே உலை வைத்துவிட்டன. இதனால், அங்கு உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது. வனவிலங்குகளின் இருப்பே, காட்டு வளத்தையும், மண் மற்றும் நீர்வளத்தையும் பாதுகாக்கும் என்பதை உணரத் தவறியதால், இன்றைக்கு மிகப் பெரும் சூழல்கேட்டிற்குள் நாம் சிக்கி உள்ளோம்.

வசதிப் பெருக்கங்கள் அனைத்தும் மனிதர்களுக்கானதாய் இருந்தாலும், அவை மண்ணுக்கானதாய் இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து மின்னணுப் பொருட்கள் வரை மண்ணின் வளத்தைச் சீர்குலைக்கும் காரணிகளாக மாறிவிட்டன. ஆகையால் அப்பொருட்களின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.வேதி உரங்களைத் தவிர்த்து, இயற்கை சார்ந்த வேளாண்மை செய்யும் மனப்பக்குவம் அனைத்து உழவர்களுக்கும் வளர வேண்டும். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாற்ற வேண்டும்.

இயற்கை வளங்களைச் சுரண்டி சூறையாடும், பொறுப்பற்ற போக்கு இனியும் வளர்வதற்கு அனுமதிக்கக்கூடாது. உயிரினங்களின் இருப்பே, மனித குலத்தின் இருப்பு என்பதை உணர்தல் வேண்டும். இயற்கையை போற்றி, மதித்து,மகிழும் நம் மரபுகளுக்கு எதிராக ஒருபோதும் இயங்குதல் கூடாது என்ற உறுதிமொழியையும் இந்த நொடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm