Thursday, 20 December 2018

பிசினி அரிசி :

பிசினி அரிசி 120 நாட்கள் பயிர் 5 உயரம்வரை வளரும் தன்மையுள்ளது.

பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி.

தனித்துவம் :

பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக் கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கிச் செழிக்கும் இது, பூச்சித் தாக்குதல் அற்றது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நடவு முறைக்கும் ஏற்ற இந்த நெல்வகை, தொழு உரம் மட்டும் இட்டால் போதும். மிக எளிமையாகச் சாகுபடி செய்யகூடியவை.

உளுந்து, மற்றும் பிசினி நெல்லின் அரிசி கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதாகவும் கருதப்படுகிறது. பெண்களின் பேறுகாலத்தில், பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும், மற்றும் இந்நெல்லை அவல் செய்து சாப்பிடச் சுவையாகவும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டதுமாகவும் கருதப்படுகிறது.

பிசினி அரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள் :

* உளுந்து, மற்றும் பிசினி நெல்லின் அரிசி கலந்து களி செய்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி (Hip Pain) நீங்குவதாக கூறப்படுகிறது.

* மாதவிடாய் கோளாறுகள் (Menstrual Problems) நீங்குவதாகவும் கருதப்படுகிறது.

* பெண்களின் பேறுகாலத்தில் (Pregnancy), பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும், மற்றும் இந்நெல்லை அவல் செய்து சாப்பிடச் சுவையாகவும், உடலில் உள்ள தேவையில்லாதக் கொழுப்பைக் (Cholesterol) குறைக்கக்கூடியத் தன்மை கொண்டதுமாகவும் கருதப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday, 19 December 2018

குடவாழை அரிசி :

குடவாழை என்றழைக்கப்படும் இந்நெல் இரகம், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது.

அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும் குடலை சுத்தப்படுத்துவதாலும் இதற்குக் “குடைவாழை” என்று பெயர்.

தனித்துவம் :

நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழமையான அரிசி வகையாகும். நூற்றி முப்பது நாள் வயதுடைய இந்த நெல் ரகம், மோட்டா ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி. உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற இரகமாகும். தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .

இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது.

கிடை அவசியம் :

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நெல் இரகம், விதைபிற்கு பின் ஒரு முறை மழை பெய்துவிட்டால் போதும், மூன்று நாட்களில் விதை முளைத்து நிலத்தின் மேல் பச்சைப் போர்வை போற்றியது போல் காட்சியளிக்கும். மிக வேகமாகவும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கியும் வளரும் தன்மை கொண்ட இந்த இரகத்துக்குக் கோடையில் ஆடு, மாடு கிடை அமைத்து நிலத்தை வளப்படுத்துவது அவசியம்.

குடவாழை உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* உடலுக்குத் தெம்பு தந்து மருந்தாகும் குடைவாழை.

* உடல் பலம் & தேக பளபளப்பு (Body Strength & Skin Glow) உண்டாகும்.

* அஜீரணத்தை (Indigestion) போக்கும்.

* தோல் வியாதிகளை(Skin Diseases) நீக்கும்.

* சர்க்கரை நோய் (Diabetes) வராமல் தடுக்கும்.

* குடல் (Intestinal) சுத்தமாகும்.

* வயிறு (Stomach) பிரச்னை குணமாகும்.

* மலத்தை இழகச் செய்து மலச்சிக்கல் (Constipation) இன்றி பாதுகாக்கும்.

* புரதம் (Protein), நார் (Fiber), தாது (Minerals) மற்றும் உப்புச்சத்து (Salt) இந்த அரிசியில் அதிகம் உள்ளது, சர்க்கரை (Sugar level) அளவை குறைத்து உடலை உற்சாகமாக (Active) வைக்க உதவுகிறது.

* அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் (அரிசி) இரகமான இது, பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். காலை, மதியத்துக்கு இடையே ஒரே வேளை பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை தரக்கூடியது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
தங்கச் சம்பா :

தங்கச் சம்பா 130 - 135 நாள் பயிர், இது 5 அடி வரை வளர கூடிய பயிர்.

தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் (Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு “தங்கச் சம்பா” என பெயர் வந்திருக்கும்.

தனித்துவம் :

தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது. ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம். மத்திய காலப் பயிர். இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, நூற்றி முப்பந்தைந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது. இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.

ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா.

தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.

தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் (Glowing Face) ஜொலிக்கும்.

* நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.

* பல்(Teeth), இதயம் (Heart) வலுவாகும்.

* புரதம் (Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.

* மனிதர்களின் வாழ்நாள் (Human life) அதிகரிக்கும்.

* உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.

* உடல் நிறம் (Colour complexion) கூடும்.

* ஆண் ஆற்றல் (Potency of male) அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 18 December 2018

மாப்பிள்ளை சம்பா :

மாப்பிள்ளை சம்பா 160-165 நாள் பயிர், 6 அடி வரை வளர கூடிய பயிர்.

பெயர் காரணம் :

பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா (Samba Groom) என்று பெயர் இட பெற்றது.

தனித்துவம் :

இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional) நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம் (Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity Power). இதில் புரதம் (Protein), நார்சத்து (Fiber) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது.

மாப்பிள்ளை சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes) நன்மை தரும்.

* உடலுக்கு வலுவைத் (Body strength) தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.

* அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் (Nerves) பலப்படும்.

* உடல் வலுவாகும் (Body Strength).

* உடலை பலபடுத்தும், ஆண்மை (Masculinity) கூடும்.

* குழந்தைகளின் மூளை திறன் அதிகரிக்கும்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம் :

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 16 December 2018

கருடன் சம்பா :

கருடன் (Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.

பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. 1911-ம் ஆண்டில் கருடன் சம்பா நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் அவர் சாகுபடி செய்துள்ளார். அப்போது அவர் நடவு செய்தபோது கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வந்துள்ளது. சாலையில் போவோர், வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பண்ணைத் தொழிலாளர்கள் திருஷ்டி பொம்மை ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். 32 சென்டில் ஒவ்வொரு நாற்றாக, முக்கால் அடி சாலை சாலையாக நடவு செய்து ஒரு ஏக்கருக்கு 4,012 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.

தற்போது இந்த நெல் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது, மகசூல் அதிகபட்சம் 3,500 கிலோ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷங்கள் இல்லாமலேயே விவசாயிகள் மகசூல் எடுத்துவருகிறார்கள்.

தனித்துவம் :

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம். இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும், மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வரும்.

சிகப்பு நெல், வெள்ளை அரிசி கொண்ட இந்த வகை நடுத்தரமான ரகம், மத்தியக் காலப் பயிர், 140 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடியது. நடவு, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஏற்றது. நான்கு அடி உயரம்வரை வளரும்.

கருடன் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* நோய் எதிர்ப்பு சக்தி(Immune power) தரும்.

* சாப்பாடு மற்றும் பலகாரங்களுக்கு ருசி (Taste) தரும்.

* பசையம் (Gluten) குறைவாக உள்ள அரிசி , உடல் வலிமையாக்கும்.

* சிறுநீர் தொற்று உபாதைகளை (Urinary Infection) சீர் செய்யும்,

* உடல் கட்டிகளை(Body Tumors) குணமாக்கும்.
ரத்த சோகை(Blood Anemia) நீக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தினை அரிசி :


தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார் சத்து (Fiber)அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.

ஊட்டச்சத்து அட்டவணை :

புரதம் – 12.3 
சக்கரை – 60.2 
கொழுப்பு – 4.3 
மினரல் – 4.0
கொழுப்பு – 6.7 
கால்சியம் – 31 
பாஸ்பர்ஸ் – 290 
இரும்புசத்து-2.8
தையமின் – 0.59 
நையஸின் – 3.2

தினை உண்பதால் ஏற்படும் பலன்கள் :

* எலும்புகளை(Bones) வலுவாக்கும்.

* குடல் புண்(Ulcer), வயிற்றுப் புண்களை குணமாக்கும். 

* செரிமானத்தை (Digestion)மேம்படுத்தும்.

* தோலின் நெகிழ்வுத் (Skin Elasticity) தன்மையை அதிகரிக்கின்றது.

* விரைவில் முதுமையடைவதைத்(Anti Aging) தடுக்கிறது.

* உடலை வலுவாக்கும்(Body Strength), சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு(Heat)உள்ளது.

* வாயு நோயையும்(Gastric Problems), கபத்தையும் போக்கும்.

* உடலுக்கு வன்மையைக்(Body stronger) கொடுக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
மூங்கில் அரிசியின் பயன்கள் :
* 40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும்.

* மூங்கில் அரிசியை, மற்ற சாதாரண அரிசியை போல், எந்த வடிவத்திலும், விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம்.இதை சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்; ஆண்மை அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதை கட்டுப்படுத்தும்.இப்படி, மூங்கில் அரிசிக்கு, பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த வயதினரும் சாப்பிடலாம்.

* மூங்கில் நெல்லை சேகரிப்பது கடினமானது. பார்ப்பதற்கு, கோதுமையை போல காணப்படும் மூங்கில் அரிசி, உடலுக்கும், எலும்புக்கும், வலு சேர்க்கும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையும் உண்டு.

* மூங்கில் அரிசி நீரிழிவை கட்டுப்படுத்தும்.

* உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும்.

* உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

* மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

* உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும்.

* உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும்.

* இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm