Monday, 24 December 2018

மறைந்து வரும் பாரம்பரியம் :


நான் முதன்முதலாக அகமதாபாத் போனபோது, விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகும் வழியில், சாலையோரம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த மாடுகள் என் கவனத்தை ஈர்த்தன. என்னை அழைத்துப்போக வந்தவரிடம் இவை என்ன இன மாடுகள் என்று கேட்டபோது ‘காங்க்ரேஜ்’ மாடுகள் என்றார்.

அவர் கொஞ்சம் விஷயம் தெரிந்த ஆசாமி. இதுதான் மொஹஞ்சதாரோ சித்திரமுத்திரையில் காட்டப்பட்டிருக்கும் இனம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்றார். குஜாரத்தில் பணி செய்யும்போது இந்தப் புள்ளியிலிருந்துதான் எனக்கு இந்திய இன கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ளது போன்ற இத்தனை வகை கால்நடைகள், உலகில் வேறெங்கும் இல்லை என்கிறார்கள் உயிரியலாளர்கள். பரந்த புல்வெளிகள், பழமையான இடையர் பாரம்பரியம் இவற்றால் இங்கு பல மாட்டினங்கள் உருவாகின. பிரிட்டீஷ் காலத்தில் நம் நாட்டில் தனித்துவம் கொண்ட 26 மாட்டினங்கள் பதிவு செய்யப்பட்டன.

இமயத்தில் குஜ்ஜர்கள், குஜாரத்தில் ராபாரிகள் போன்ற மாட்டிடையர்கள் தங்களது மந்தைகளை ஓட்டிக்கொண்டு நெடுந்தூரம் பயணித்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் ஆடுகளை வெவ்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் இடையர் மக்கள் உள்ளனர். இவ்ர்களைப் பற்றி தமிழில் ‘ஆடோடிகள்’ எனும் ஒரு முக்கியமான ஆவணப்படத்தை செந்தமிழன் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்லடம், காங்கேயம் பகுதிகள், குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதி போன்று விவசாயத்துக்கு உட்படாத, மேய்ச்சலுக்கான நிலம் பரந்திருக்கும் பகுதிகளில் சீரிய மாட்டினங்களைக் காணலாம். தாராபுரம், பல்லடம் போன்ற பகுதிகளில் நம்பீசன் வெண்ணை வருவது போல காரணத்தோடுதான் அகமதாபாத்தில் அமுல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் ஒரு முரண் என்னவென்றால், இந்த மேய்ச்சல் நிலம், பாசன வசதி படைத்து வேளாண்மைக்கு வரும்போது, இந்த மாட்டினங்களின் நிலைமை மோசமடைகிறது. ஆகவே அவற்றைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. கால்நடை பல்லுயிரியமும் ஒரு நாட்டின் வளத்துக்குக் குறியீடு.

மாட்டைக் காக்கும் ‘தர்பார்’ :

குஜராத்தின் பெயர்போன மாட்டினம் ‘கிர்’ மாடுகள்தாம். உருவில் பெரியவை மட்டுமல்ல. பார்ப்பதற்கும் எழிலார்ந்தவை. இந்த இனத்தைக் காப்பாற்ற ஒரு முன்னாள் குறுநில மன்னர் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டேன். இங்கு பல சமஸ்தானங்கள் இருந்தன.

பிரிட்டீஷார் காலத்தில் குஜராத்தில் பயணிக்கும்போது அஜாக்கிரதையாய் இருந்தால் ஒரு சமஸ்தானம் உங்கள் காலில் ஒட்டிக்கொள்ளலாம் என்று எங்கள் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் கூறியது நினைவுக்கு வருகிறது. 256 என்று ஒரு கணக்கு சொல்கிறது. அதில் ஒன்றுதான் ஜஸ்தான் சமஸ்தானம்.

அதன் இளவரசர், மக்களால் ‘தர்பார்’ என்றழைக்கப்படும் சத்யஜித் குமார் கச்சார், பறவைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் அவர் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை கட்ச் பகுதியின் வடபுறத்தில், லட்சக்கணக்கான பூநாரைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் இடத்தைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல், சலிம் அலியையும் அங்கு கூட்டிச் சென்றார். ‘ஃபிளமிங்கோ சிட்டி’ (Flamingo city) என்றறியப்படும் இந்த உறைவிடத்திலிருந்து பூநாரைகள் தமிழகத்தின் கோடியக்கரைக்கும் கூந்தங்குளத்துக்கும் வலசை வருகின்றன.

கிர் இன மாடுகளைப் பாதுகாக்க சத்யஜித் கச்சார் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று இந்தக் காளையின் விந்தை எடுத்து, உறையவைத்து, மற்ற நாடுகளுக்கும் ஊர்களுக்கும் அனுப்புவது. பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, பொலிவியா ஆகிய நாடுகளில் இந்த இனம் பரவி பிரபலமாயிருக்கிறது. இவர் வளர்க்கும் ஒரு பெரிய காளையைப் படமெடுக்க வேண்டி நான் அவரது பண்ணைக்குச் சென்றபோதுதான் அங்கு வேலை செய்யும் வாசாவைச் சந்தித்தேன்.

அஞ்சல் தலையான ‘கிர்’ :

வாசாவுக்கு அப்போது 72 வயது. ஒரு குட்டி யானையைப் போன்ற அந்த கிர் பொலி காளையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவருடையது. நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்த அவரது உடல் உறுதியைக் கண்டு நான் வியப்படைந்தேன். பாரம்பரிய சவுராஷ்டிர விவசாயியின் உடையில் தலைப்பாய், முறுக்கு மீசையுடன், அவரே ஒரு ராஜா மாதிரி நடமாடினார். ஒரு நாயும் அவருடன் கூடவே சுற்றிக் கொண்டிருந்தது. அது லாஹோரி என்ற இனம் என்றார் (இது லாகூர் அருகே காணப்படும் மிக அரிதான இனம் என்று பின்னர் அறிந்துகொண்டேன்).

இரவில் பண்ணை ஓரத்தில் ஓநாய்கள் நடமாட்டம் உண்டு என்று அவர் சொன்னதும் அன்றிரவு பண்ணையிலேயே தங்க முடிவு செய்து, நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு கயிற்றுக்கட்டிலில் தூங்கினேன். ஆனால் ஓநாய்கள் ஏமாற்றிவிட்டன. வாசாவின் கிர் காளையைப் படமெடுத்தேன். சில ஆண்டுகள் கழித்து அந்தப் படம் ஒரு அஞ்சல் தலையாக வெளிவந்தது.

தமிழ்நாட்டிலும், பிரசித்தி பெற்ற காங்கேயம் காளை உட்பட, பல இனங்கள் உண்டு. உம்பலாச்சேரி, புலிகுளம், பருகூர், ஆலம்பாரி, தேனிமலை மாடு என மறைந்து கொண்டிருக்கும் மாட்டினங்கள் பல. கோவை அருகே உள்ள குட்டப்பாளையத்தில் கார்த்திக் சேனாதிபதி நிர்வகிக்கும் காங்கேயம் காளை ஆய்வு மையம், அகவிட பாதுகாப்பு (in situ conservation) முறையில் இந்த இனத்தைக் காப்பாற்ற பாடுபட்டு வருகிறது.

இது ‘கொங்குநாடு’ என்றறிப்படுகிறது. மழை குறைவான வறண்ட பகுதியில், வேளாண்மை அதிகமில்லாமல், கொரங்காடு மேய்ச்சல் நிலம் பரந்திருந்தது. வேல மரங்கள் நிறைந்த இந்நிலப் பரப்பை மேய்ச்சலுக்கான முல்லை நிலம் என்று வர்ணிக்கலாம்.

வாசாவின் நினைவாக மீசை :

கடந்த நூற்றாண்டில் புதிய அணைக்கட்டுகளால் விவசாய நிலம் பெருகியதாலும், வீடுகள், தொழிற்சாலைகள் கட்ட இடம் வாங்கப்பட்டதாலும், விவசாய வேலைகளுக்கு எந்திரங்கள் வந்துவிட்டதாலும் இந்த மாட்டினங்கள் மேல் கவனம் குறைந்து அவை மறைய ஆரம்பித்துவிட்டன.

இந்திய மாட்டினங்கள் வலுவானவை. நோய் நொடி எளிதில் அண்டாது. மருத்துவச் செலவு மிகக்குறைவு. கடுமையான காலநிலையைத் தாங்கி, எளிமையான இரையை உண்டு, உடல் நலத்துடன் வாழும் சக்தி உடையவை. ஆனால் நம் நாட்டில் எடுக்கப்பட்ட வெண்புரட்சி (White Revolution) என்ற முயற்சியில் பல வெளிநாட்டு மாட்டினங்களை வாங்கி உள்ளூர் மாடுகளோடு கலந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கினார்கள். பல மாட்டினங்கள் நலிய ஆரம்பித்தன. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டே..!

ஊருக்குத் திரும்பி சில நாட்களுக்கு எனது நினைவில் வாசா இருந்தார். இந்த மகத்தான மனிதருக்கு என் மரியாதையைச் செலுத்த வேண்டும் என்று அவர் போலவே மீசை வளர்க்க ஆரம்பித்தேன், அந்தச் செழுமை வரவில்லை என்றாலும்..!

நன்றி : ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

குள்ளக்கார் அரிசி :

தனித்துவம் :

பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ளது. மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.

ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும்.

குள்ளக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant), துத்தநாகம் (Zinc), இரும்புச் சத்துக்கள் (Iron) நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் (Cholesterol) கரைக்கிறது.

* நரம்புக்கு (Nerves) வலு சேர்க்கும்.

* உடலுக்கு வலிமை (Body strength) சேர்க்கும்.

* மூளை (Brain) சுறுசுறுப்பாகும்.

* குழந்தைகளின் (Child growth) வளர்ச்சிக்கு உதவும்.

* செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.

* உடல் எடை குறைக்க (Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.

* இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.

குள்ளக்கார் அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி :

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடிய பாரம்பர்ய அரிசியில் செய்யப்படும் இனிப்பு தோசை ரெசிபி இது.

பாரம்பர்ய அரிசிகளின் சுவையே தனி. அதன் சத்துகளோ ஏராளம். குழந்தைகளுக்கு சத்தான உணவுத் தரவேண்டியது பெற்றோரின் கடமை. அவ்வகையில் எப்போதும் செய்யும் தோசைக்கு பதிலாக பாரம்பர்ய அரிசியில் செய்யப்பட்ட குள்ளக்கார் அரிசி தோசை குட்டீஸ் ஸ்பெஷல்தான்.

குள்ளக்கார் இனிப்பு தோசை :

தேவையானவை :

குள்ளக்கார் அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – ¼ கப்
அறிந்த பேரீச்சம் பழம் – 20
பொடித்தப் பனங்கற்கண்டு – 10 ஸ்பூன்
ஊறவைத்த உலர் திராட்சை – 25
தேன் – 5 ஸ்பூன்
வறுத்து பொடித்த முந்திரி – 20
பசு நெய் – தேவையான அளவு

செய்முறை :

* குள்ளக்கார் அரிசி, பருப்பை தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊற வைத்த அரிசி, பருப்பை நன்றாக அரைக்கவும்.

* தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 10 மணி நேரம் மாவைப் புளிக்க விடவும்.

* மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு முன் பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து மாவைக் கலக்கவும்.

* பேரீச்சம் பழத்தைக் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய் விடவும். வெந்ததும் தோசை மேல் கலந்து வைத்த நட்ஸ் கலவையை ஒரு பாதியில் பரப்பவும்.

* அதில் அரை ஸ்பூன் தேன் விட்டு மறு பாதி தோசையை மூடி விடவும்.

* சூடாக சாப்பிடவும் ருசியாக இருக்கும். அதுபோல ஆறினாலும் ருசியாக இருக்கும்.

* இந்த குட்டீஸ்கான இனிப்பு தோசை குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாறிப் போகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday, 23 December 2018

காட்டுயானம் :

காட்டுயானம் ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது. இது 160 நாள் பயிர்.

தனித்துவம் :

காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.

ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* நீரிழிவு நோய்க்கும் (Diabetis) நல்ல பலன் அளிக்கக்கூடியது.

* புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.

* ஆண்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.

* பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.

* விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

* பசியைத் தாமதப்படுத்தும்.

* இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
உலக விவசாயிகள் தினம் - 2018

இன்று விவசாயிகள் தினம்! அதை ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டம்!

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 18 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.

பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

அதேசமயம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். புது டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக,டிசம்பர் 23-ம் ததேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் துயரங்கள் மறைய வேண்டும்!

விவசாயிகள் தினம் குறித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்திடம் பேசியபோது, "வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் கஷ்டபடும் விவசாயிகளை ஏதாவது ஒருநாள் மட்டும் நினைத்துவிட்டு இருந்துவிடக் கூடாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவின்போதும் விவசாயிகளை நினைக்க வேண்டும். அவர்களுடைய கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, விவசாய சமூகங்களுக்கு இயன்ற உதவிகளை அளிப்பது நல்லது. இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோன்ற துயரங்கள் எல்லாம் மறைந்து, விவசாயிகள் என்றைக்கு நிம்மதியாக அவர்களது தொழிலை செய்கிறார்களோ... அதுவே உண்மையான விவசாயிகள் தினமாக இருக்கும்" என்றார்.

முன்னோடி இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரனிடம் பேசியபோது, "இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. அதன்பிறகு குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட சட்டம் கொண்டுவரப்பட்டது. 'ஜமீன்' என்றால் இந்தியில் 'பூமி' என்று அர்த்தம். ஜமீன்தாருக்கு ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் சொந்தமானவையாக இருந்தது. அந்த நிலத்தில் உழுபவர்கள் ஜமீன்தாருக்கு வரியை கட்ட வேண்டும். ஆனால், நிலத்தின்மீது எந்த உரிமையையும் கோர முடியாது என்ற நிலை இருந்தது. காலப்போக்கில் சட்டங்கள் வந்தபிறகு நிலங்கள் ஓரளவுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பெரும்பான்மையான நிலங்கள் இன்னும் நில உடைமையாளர்களிடம் இருந்து வருகிறது. இதன்பிறகு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு முழுமையான நிலங்கள் கைக்கு வரவில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏதெதுக்கோ தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் காலக்கட்டத்தில், விவசாயிகளுக்கும் தினங்கள் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது" என்றார்.

தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி உழவர் தினம்!

1970-1973ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கான மின்சாரக் கட்டணம் 1 பைசா உயர்த்தப்பட்டதற்காக விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்களில் சாலையில் மாடுகள் மற்றும் வண்டிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது மாட்டுவண்டி போராட்டம் என அழைக்கப்பட்டது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. ஆயிரக்கணக்கான மாடுகள், வண்டிகள் தமிழ்நாடு முழுவதும் சாலையில் கட்டி விடப்பட்டன. இந்த போராட்டத்தில் 62 விவசாயிகள் காவல்துறையால் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி பலியானார்கள்.

திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, ஆத்தூர், விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் விவசாயிகள் சுடப்பட்டனர். அதில் 3 பெண்களும் இறந்தனர். அந்த விவசாயிகள் ரத்தம் சிந்தியதால்தான், கட்டணமில்லாமல் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை அனுபவித்து வருகிறோம். கடன் தள்ளுபடி, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காகவும், விவசாய சங்கத்தினர் ஜூலை 5-ம் நாளை 'உழவர் தின'மாக அனுசரிக்கின்றனர். அன்றைக்கு ஒரே விவசாய சங்கம் மட்டும்தான் இருந்தது. அது 13 சங்கங்களாக பிரிந்து, இப்போது 13 இடங்களில் உழவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த போராட்டங்களை தலைமைத் தாங்கி நடத்தியவர் விவசாய போராளியும், விவசாய சங்கங்களுக்கு முன்னோடியுமான நாராயணசாமி நாயுடு ஆவார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி இவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
மைசூர் மல்லி அரிசி :

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.

மைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.

இந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட.

நோய் எதிர்ப்பு சக்தி :

இந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.

மன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday, 22 December 2018

நாட்டு சர்க்கரை :

நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காலங்களை வென்ற ஊத்துக்குளி’ நெய், ‘சேலம்’ மாம்பழம், ‘பண்ருட்டி’ பலா, ‘மணப்பாறை’ முறுக்கு… என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, ‘கவுந்தப்பாடி’ நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக நுழைகிறது, சர்க்கரைப் பாகின் நறுமணம். கரும்பை ஆலையிலிட்டு அரவை செய்வது, அரைத்தக் கரும்புப்பாலைக் கொப்பரையில் கொதிக்க வைப்பது…… மரத்துல் செய்த செக்கு மாதிரியான ஆலையில் கரும்பை நசுக்கி, பெரிய பெரிய மண் மொடாக்களில் நிரப்பி வைப்பார்கள். பிறகு, காது வைத்த பெரிய செப்புக் கொப்பரைகளில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சுவாங்க. பாகு பதத்திற்க்கு வந்ததும் ஆறவைத்து ‘தேய்ப்பு முட்டி’ என்று சொல்லும் மர முட்டிகளை வைத்து, கட்டிகளை உடைத்து, தேய்ச்சுப் பொடியாக்குவாங்க.

மறந்து போன பழக்கம் :

* ”தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாட்டுச் சர்க்கரைச் சந்தை என்றால், அது கவுந்தப்பாடிதான். முகலாயர் ஆட்சிக்கு முன்ன இருந்தே இங்க சர்க்கரைத் தயாரிப்பு நடந்திட்டிருக்கு.
* பழனி பஞ்சாமிர்தத்தில் கலக்குற நாட்டுச் சர்க்கரை, இங்க இருந்துதான் போகுது. சீசன் காலத்துல, வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு வெளியூர்களுக்குப் போகும்.
* கொஞ்ச வருடத்திற்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்குச் சாப்பாட்டு இலையில் சர்க்கரைப், பழம் வைக்கும் வழக்கம் இருந்தது.

* அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த ‘பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது”.

இதுல கலப்படம் இல்லை ! :

* ”நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது.

* சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க. ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது.

* வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்… வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்”

மருத்துவ பயன்கள் :
* கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
* இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.

* நாட்டுச் சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் நாட்டுச் சர்க்கரை தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

100 கிராம் நாட்டு சர்க்கரையில் அடங்கியுள்ள சத்துக்கள் :

சக்தி - 383 கலோரிகள்
ஈரப்பதம் - 3.9 கிராம்
புரதம் - 0.4 கிராம்
தாதுக்கள் - 0.6 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
இரும்பு - 2.64 மில்லி கிராம்
எரியம் (phosphorus) - 40 மில்லி கிராம்
சுண்ணம் (calcium) - 80 மில்லி கிராம்
மாவுச்சத்து (carbohydrates) - 95 கிராம்

மதிப்புக் கூட்டினால் ஏக்கருக்கு லட்ச ரூபாய் !
* பொதுவாக 50 டன் கரும்பிலிருந்து 5 முதல் 6 டன் நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி பண்ணலாம். 60 கிலோ மூட்டை ஆயிரத்து ஐநூறு ரூபாய்ல இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. இந்தக் கணக்கை வைத்து பார்த்தால்… ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் கிடைக்கும்.
* கரும்பு வெட்டிலிருந்து விற்பனை வரை எல்லா செலவும் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் போனாலும்… ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நிச்சயம் லாபமா கிடைக்கும். இந்த நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செழிப்பாக இருக்கணும் என்றால், அரசாங்கம் அஸ்கா சர்க்கரை உற்பத்தி பண்றதுல செலுத்துற கவனத்தில், கொஞ்சமாவது நாட்டுச் சர்க்கரை பக்கமும் திரும்பினால்தான் கவுந்தப்பாடி சர்க்கரை… தலைமுறைகள் தாண்டியும் இனிக்கும்”

வெள்ளைச் சர்க்கரை (சீனி ) மெல்லக்கொல்லும் வெள்ளை நஞ்சு! :

* நாம் தினமும் உண்ணும் சர்க்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சர்க்கரையைப் பயன்படுத்துகிறோம்.

* இந்த வெள்ளைச் சர்க்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.

* சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம். பிறக்கும் போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் இளம் வயதில் மாரடைப்பால் இறந்து போவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருதற்கு மிக முக்கியமான காரணம் வெள்ளைச்சர்க்கரை என பல்வேறு மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்திய நிலையில் வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள இரசாயன பொருட்கள் :

* கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் நம் வீட்டு கழிப்பறைக்கு பயன்படுத்தும் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
* பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

* இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

* 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

* அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
* சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

* மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
* இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
* தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும்.
* உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக ‘இன்சுலின்’ வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் ‘இன்சுலினுக்கும்’ நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.
* ‘கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக ‘சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படும். அந்த சமயத்தில் வெள்ளைச்சக்கரையை தவிர்ப்பது நல்லது.

* வளர்ச்சி என்ற பெயரில் தொழில் நுட்பம் கொண்டுவந்ததுதான் வெள்ளைச் சர்க்கரை. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடை செய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால் இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலகின் சர்க்கரை நோயில் நம்மை முதலிடத்தில் தள்ளியமைக்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் இடுப்புவலிக்கும், இன்னும் பல கான்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளை சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.
* நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னரான விஜய ராகவ நாயக்கர் எழுதிய இரகுனாதப்யுதய நூலில் உள்ள இனிப்பு பட்டியலைப் பார்த்தால் ” அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு(பாசந்தி), பன்னீர்பாயாசம், சீரகப்பாயாசம், குளிர் பாயாசம், திரட்டுப்பால், சீகரணி, தேங்காய்பால்” என லாலாக்கடையில் கிடைக்காத பெரிய பட்டியல் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது தெரிகிறது.
* இனிப்புக்கள் அத்தனையும் அப்போது பனைவெல்லத்திலும், தேனிலும் தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை சர்க்கரையில்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளை சர்க்கரை தொழில் நுட்ப உதவியால் ஒட்டு மொத்தமாய் திணிக்கப்பட்டுவிட்டது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday, 20 December 2018

வரப்புக் குடைஞ்சான் :

பெயர் காரணம் :

வரப்புக் குடைஞ்சான் (Varappu Kudainchan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘சத்திரகுடி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதகாலப் பயிராகும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ முதல், 1200 கிலோ வரையில் மகசூல் தரக்கூடியது.

நெற்பயிர்களின்  வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

பொதுவாக இந்நெல் இரகம் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது. மேலும் இதே பின் சம்பா பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீண்டகால வகை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

மானாவாரி நிலம் எனப்படும் புன்செய் நிலப்பரப்பில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வரப்புக் குடைஞ்சான், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.

தனித்துவம் :

* வரப்புக்குடைஞ்சான்னு ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

* மானாவாரி நிலம் எனப்படும் புன்செய் நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய வரப்புக் குடைஞ்சான், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.

* வரப்புக் குடைஞ்சான் நெல்லின் மேல் தோல் கருப்பு நிறமாகவும், அதன் அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

வரப்புக் குடைஞ்சான் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* இரத்தசோகை (Anemia) வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.

* மலச்சிக்கலிருந்து (Constipation) விடுபட முடியும்.

* உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

* நரம்புகள் (Nerves) வலுப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm