Sunday, 30 December 2018

வெள்ளைப்பொன்னி அரிசி :

வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிலிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும்.

120 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி, ஜூலை மாதம் முதல், ஆகஸ்ட் மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான பின் சம்பா (தாளடி) பருவத்திலும், சாகுபடி செய்ய தகுந்த நெல் இராகமாகும்.

பெயர் காரணம் :

சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட சோறாகின்றது. இதனால் விவசாயிகள் இந்த ரகத்தை முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி என்று அழைக்கின்றனர்.

தனித்துவம் :

தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று…தமிழகத்தில் பச்சரிசி தரும் நெற்களில் வெள்ளைப் பொன்னி ஒரு சிறந்த நெல் வகையாகும்…இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது.  இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. வெள்ளைப் பொன்னி ரகம் இக்காரணத்தால் சாகுபடி செய்யப்படுகின்றது. அரவையில் குருணை விழுந்தாலும் வெள்ளைப் பொன்னி தொடர்ந்து சாகுபடியில் உள்ளது. இந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர். நாற்றின் வேர்கள் களர் தன்மையைத் தாங்கி நாற்று பச்சைகட்டி விடுகின்றது.

வெள்ளைப் பொன்னி பயன்கள் :

* சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் வைக்கோலும் (Straw)போடப்படுகிறது.

* உடல் வலிமை (Strength) பெரும்.

* உடல் சுறுசுறுப்பாக (Active) இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
சீரகச் சம்பா அரிசி :

பெயர் காரணம் : 

சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்  ரகங்களில் ஒன்றாகும்.  சீரகம் (Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தனித்துவம் :

“சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும்.  இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani) செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில் வேளாண்மைச் செய்யப்படுகிறது.

சீரகச் சம்பா பயன்கள் :

* எளிதாக செரிப்பதோடு (Easily Digestable), இரைப்பை (Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.

* வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும்.

* குடல்புண் (Ulcer), வயிற்றுப்புண் (Severe), வாய்ப்புண் (Mouth ulcer) குணமாகும்.

* கண் நரம்புகளுக்கு (Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்.

* இரத்தத்தை (Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
தேங்காய்ப்பூ சம்பா அரிசி :

பாரம்பரிய நெல் ரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் ரகம் இது.

தனித்துவம் :

தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் இரகமான இது, மேற்கு வங்க மாநிலத்தில் (West Bengal) இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் (Bangladesh) இடையேயான இந்திய எல்லையின் ஓரமாக இச்சா ஆறு பாயும் (Delta region) பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்க மொழியில் வேறுபெயரில் அழைக்கப்படும் இவ்வகை நெல், பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற இரகமாகவும் உள்ள இது, நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. கொஞ்சம் சாயும் தன்மையுடன் இருந்தாலும், அறுவடையில் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.பொதுவாக நெல் மணிகள், இதழ் இதழாக இருக்கும். ஆனால், தேங்காய்ப்பூ சம்பா கொத்துக் கொத்தாக இருக்கிறது. மஞ்சள் நிறத்தாலான இந்நெல், வெள்ளை அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமாகும்.

மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த தேங்காய்ப்பூ சம்பா, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சம்பா பட்டம் எனப்படும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும்.

நடவு செய்யவும், தெளிக்கவும் ஏற்றது. ஏக்கருக்கு இருபத்து ஐந்து கிலோ விதை போதுமானது. மகசூல் இருபத்தி இரண்டு மூட்டைவரை கிடைக்கும்.

தேங்காய்ப்பூ சம்பா பயன்கள் :

* தமிழகத்தில் பொரி (Puffed Rice) பயன்பாடு அதிகளவில் இருப்பதால், அதற்கான புதுப்புது இரகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் இரகங்களில் பொரிக்கு ஏற்ற இரகமாக, தேங்காய்ப்பூ சம்பா இருக்கிறது.

* எளிதில் ஜீரணம் (Easily Digestible) ஆக கூடிய உணவு.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday, 26 December 2018

காலா நமக் அரிசி :

காலா நமக் அல்லது காளாநமக் (Kalanamak) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.

பெயர் காரணம் :

‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று .இந்திய வடமொழியில் ‘காலா நமக்’ என பெயர் பெற்றுள்ளது, ‘காலா’ → “கருப்பு”, ‘நமக்’ → “உப்பு” (Black salt) கருப்பு நிற மேலுறையோடு (உமி) காணப்படுவதால் . இப்பெயர் பெற்றிருக்கும்.

தனித்துவம் :

இந்தியாவின் சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது, புத்தக் (Buddha) காலமான கி. மு 6 ஆம் நூற்றாண்டு (600 BC) முதலே சாகுபடிச் செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இயற்கை உணவுகளை (Natural Foods) 3 வகையாகப் பிரிக்கலாம். அவை சாத்வீகம் (Sathvik), சக்தி விரய உணவுகள், சக்தி விரயம் ஆகாத உணவுகள்.

‘காலா நமக்’ அரிசி சாத்வீக குணத்தை ஏற்படுத்தக் கூடியது. உலகெங்கும் உள்ள புத்தபிட்சுகள் ‘காலா நமக்’ நெல்லில் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர்.

‘காலா நமக்’ உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* சிறுநீரகம் பிரச்சினை (Kidney), இரத்தப் புற்று நோய் (Blood Cancer) , மூளை நரம்பு (Brain nerves) இயங்காமை, மற்றும் தோல் சம்பந்தப்பட்ட (Skin problems) நோய்களையும் எதிர்க்கும் திறனுடையதாகக் கருதப்படுகிறது.

* நீரிழிவு (Diabetes) மற்றும் இரத்த அழுத்தம் (BP) போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தவதாக கூறப்படுகிறது.

* கர்ப்பிணிகளுக்கு(Pregnant ladies) ஏற்ற உணவு.

* தாய்மார்களுக்கு(Mothers) ஏற்ற உணவு.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
குருவிக்கார் அரிசி :

குருவிக்கார் (Kuruvikar) பாரம்பரிய நெல் இரகங்களில் அதிக மகசூல் தரக்கூடிய நெல் இரகமாகும். இது பழுப்பு நிற அரிசியுடனான, மோட்டா (தடித்த) இரகமாகும். ஏனைய பாரம்பரிய நெல் இரகங்களைப் போலவே வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி வளரக்கூடிய குருவிக்கார் நெல், இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் எடுத்துக்கொண்டு வளரும் தன்மையுடையது. இவ்வகை நெற்பயிரில் சொரசொரப்புடனான கடினத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதலிலிருந்து காக்கப்படுவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.

தனித்துவம் :

குருவிக்கார் (Kuruvikar) இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும். குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும் (Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre) அதிகம்.

ஒரு ஏக்கருக்கு இருபத்தைந்து முதல் முப்பது மூட்டைவரையில் மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் இரகம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுவதோடு, தற்போது தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. பழுப்பு நிற அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமான குருவிக்கார், பெரும்பாலும் இட்லி, தோசை, இடியாப்பம், முறுக்குப் போன்ற பலகாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு விசேடங்களில் விருந்துக்கு இந்த இரக அரிசியை சம்பிரதாயமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இதன் அவல் மிக ருசியாகவும், இதனன் பழைய சாதம் நெடுநேரம் தாங்கக்கூடியதாக இருப்பதோடு, இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.

குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.

* பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள் (Recovery).

* குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் (Breast feeding) அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.

* கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு (Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.

* நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை (Energy) மீண்டும் பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
காட்டுப் பொன்னி அரிசி :

பாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் வயதுடையது. நெல்லும் அரிசியும் சிவப்பு நிறத்தில் இருக்கும், மோட்டா ரகம். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.

தனித்துவம் :

காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட (Inter cropping) சிறந்த ரகம். மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. 140 நாள் வயதுடைய இவ்வகை நெல்லும் அரிசியும், சிவப்பு நிறத்தில் உள்ள மோட்டா (தடித்த) ரகமாகும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், ஒரு மாதம் வரையிலும் தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்.

ஏக்கருக்கு சுமார் 20 மூட்டைவரை (75 கிலோ) மகசூல் கிடைக்கக்கூடிய இந்நெல் இரகம். இடுபொருளான அடியுரம், மேலுரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவைகள் தேவையற்றதாக உள்ள இவ்வகை நெற்பயிருக்கு, பூச்சி தாக்குதல், மற்றும் களை தொந்தரவு போன்றவை இல்லை என கருதப்படுகிறது. அறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் கூடி, நுண்ணுயிரின் வளம் பெருகுவதாகவும், மேலும் மண்புழு (Earth worm) எண்ணிக்கை அதிகரித்து மகசூல் (Yield) பெருக்குவதாகவும் கூறப்படுகிறது.

காட்டுப் பொன்னி உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* காட்டுப் பொன்னியின் அரிசியில் நார்ச்சத்து (fiber), புரதச்சத்து (Protein), மற்றும் கால்சியம் (Calcium)அதிகம் உள்ளது .இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும் எனப்படுகிறது.

* மேலும் நெற்பயிரின் வைக்கோலைத் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி (Immune power) அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
தூயமல்லி அரிசி :

அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது போல், நெல் மணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

அரிசி பளபளவென இருக்க வேண்டும். மிகவும் சன்னமாகவும் இருக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் வழக்கமாக விரும்புவார்கள். அரிசி சீக்கிரமே வேக வேண்டும். வெந்த அரிசி சாதம், மல்லிகைப் பூவைப் போல் இருக்க வேண்டும்.

இப்படி மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்ட தூயமல்லி, மக்களை பெரிதும் கவர்ந்தது. இப்படி எல்லா குணங்களும் கொண்டு பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது தூயமல்லி.

இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, அக்காலத்தில் உழவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவம் :

தூயமல்லிப் பாரம்பரிய (Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிகச் சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, அக்காலத்தில் உழவர்களிடையே போட்டிகளை நடத்திப் பரிசுகளும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நெல் வகை, பூச்சி மற்றும் நோயை எதிர்த்து வளரும் திறன் கொண்டது.

அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது போல், நெல் மணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தூயமல்லி பயன்கள் :

* மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து (Energy) மிகுந்து காணப்படுகிறது.

* அதிக நோய் எதிர்ப்புச் (Immune Power) சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்.

* இதன் நீராகாரம் இளநீர் (Tender Coconut) போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm