Monday 13 November 2017


மடிநோய் / மடிவீக்க நோய் :


1. மடி நோய் என்றால் என்ன ?
2. எதனால் வருகிறது ?
3. தடுப்பு முறைகள்
4. மடி நோயால் வரும் நஷ்டங்கள்

மடி நோய் என்றால் என்ன ?

மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய்
கிருமிகளின் தாக்குதலால் மடிவீக்க நோய் வருகிறது.

எப்படி பரவுகிறது ?

- சுத்தமின்மை
¨ சுத்தமில்லாத கட்டுத்தரை /தொழுவம்,
¨ சுத்தமில்லாத கறவையாளர் கைகள்
¨ சுத்தமில்லாத மடி / காம்பு ஆகியவற்றின் மூலமாக மடி நோய் வரும்.

எதனால் வருகிறது ?

பால் கறந்த பின் மடி காம்பின் துவாரம் ஒரு மணி நேரம் வரை திறந்து இருக்கும் , அச்சமயத்தில் பசு கிழே அமர்ந்தால் கிருமிகள் காம்பு துவாரம் மூலமாக கிருமிகள் உட்புகுந்து மடி நோய் வரும்.

காரணிகள் :

* பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்

* பாக்டீரியா , வைரஸ் ,பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்.

தடுப்பு முறைகள் :

சுத்தமான பால் உற்பத்தியின் மூலம் மடிநோயை தவிர்க்கலாம்.

சுத்தமான கட்டுத்தரை / கொட்டகை :

¨ ஒருநாளுக்கு இருமுறை கட்டுதரையை சுத்தம் செய்யவேண்டும்.

¨ மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுதரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் .

¨ கட்டுதரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தலாம்.

சுத்தமான கறவைமாடு :

¨ கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இருநாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தலாம் .

¨ கறவை மாடுகளின் கால் / தொடை /மடி/காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும்.

¨ சுத்தமானநீர் (அ) வெந்நீர் (அ) Kmno4 பயன்படுத்தலாம்.

சுத்தமான கறவையாளர் கைகள் :

* பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்.

* கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்.

* KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சுத்தமான மடி/காம்பு :

¨ பால் கறப்பதற்கு முன்னர் மடி/ கம்புகளை சுத்தமான வெந்நீர்/ KMno4 / SAAF KIT பயன்படுத்தி கழுவலாம்.

¨ பால் கறந்த பின் காம்புகளை KMno4 / SAAF KIT நனையும் படி செய்யவும்.

குறிப்பு : பால் கறந்த பின்னர் ஒரு மணி நேரம் வரை கறவை மாட்டை அமராமல் பார்த்து கொள்வது அவசியம் . தீவினம் அளிப்பதன் மூலம் இதை நடைமுறை படுத்தலாம். மேலும் மேற்குறிய தடுப்பு முறைகளை தினம் பின்பற்றினால் மடி நோயினை 95 % கட்டு படுத்தலாம்.

மடி நோயால் வரும் நஷ்டங்கள் :

* மடி நோய் பால் உற்பத்தியை குறைக்கும்.

* மடி நோய் தாக்குதலால் ஒரு காம்பு முழுவதும் வீணாகும் வாய்ப்புள்ளது.

* 10 லீ கறந்த பசு 7-8 லீ கறக்கும் நிலை வரலாம்.

* அந்த மடி நோயால் பாதிக்கப்பட்ட பசு தன் இயல்பான பால் உற்பத்தி நிலைக்கு திரும்ப வருவது கடினமாகிவிடும்.

* குறைந்த பட்சம் 100 மில்லி ஒரு நாளைக்கு குறைந்தால் கூட, சராசரி 30 லீ பால் (கறவை காலத்தில்) நஷ்டமாகும்.

* இதன் மூலம் விவசாயிக்கு 2000 - 3000 ரூபாய் மறைமுகமான இழப்பு ஏற்படலாம்.

* மடி நோய் சிகிச்சை, பால் உற்பத்தி குறைவு , தீவின செலவு என பல வகைகளில் நஷ்டம் ஏற்படும் வாய்புள்ளது.

* சரியான நேரத்தில் மடி நோயை குணப்படுத்தவில்லை என்றால் பால் உற்பத்தியின் அளவு பழைய நிலைக்கு திரும்புவது கடினமாகிவிடும்.

* அதனால் இந்த மடி நோய் வராமல் தடுப்பதே சிறந்த வழியாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete