Wednesday 22 November 2017

கன்று ஈனும் தருணமும் கறவை மாடுகளில் கையாள வேண்டிய முக்கிய உத்திகளும் :

1. பராமரிப்பு
2. மாடுகள் கன்று ஈனும் தருணத்தில் ஏற்படும் அறிகுறிகள்
3. கன்று ஈன்றவுடன் செய்ய வேண்டியவை
4. கன்றின் செயல்பாடுகள்
5. நோய் மேலாண்மை

பராமரிப்பு :

பண்ணை மாடுகளில் பேறு காலம் என்பது மறுபிறவி எடுப்பது போன்றதாகும். இந்தச் சமயத்தில்தான் அதிகமாகக் கன்று இறப்பும் சில சமயங்களில் தாய்ப் பசுவின் இறப்பும் ஏற்படுகின்றன. மேலும் கன்று ஈன்ற மாடுகளைச் சிறப்பாகப் பராமரிப்பதன் மூலம் பிற்காலத்தில் மலட்டுத்தன்மை சினைப்படுத்தும் பொழுதும் மற்றும் கன்று ஈனும் பொழுதும் ஏற்படும் கோளாறுகளைத் தவிர்க்க இயலும். எனவே வேளாண் பெருமக்கள் மாடுகளைக் கன்று ஈனும் பின்னரும் சிறந்த முறையில் பராமரிப்பதும் மிகவும் அவசியமாகும்.

பொதுவாகப் பசு மாடுகளில் சினைக்காலம் என்பது சராசரியாக 280 நாட்களாளும். சினைக்கால முடிவில் மாடுகள் கன்று ஈனுவதற்கு முன்பாகச் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் இவ்வறிகுறிகளை தெரிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமாகிறது. இதன் மூலம் கன்று ஈனும் தருணத்தைச் சரியாகக் கணித்து அவற்றை கவனத்துடன் பராமரிக்க இயலும்.

மாடுகள் கன்று ஈனும் தருணத்தில் ஏற்படும் அறிகுறிகள் :

* மாடுகள் கன்று ஈனும் தருணத்தில் அவற்றின் பின்புற மற்றும் மேற்புறத் தொடைப் பகுதிகளில் காணப்படும் சதை மற்றும் சதைக் கச்சைகளில் தளர்வுகள் தோன்றும் இதனைக் கிராமங்களில் விவசாயப் பெருமக்கள் தட்டு உடைதல் அல்லது தண்டு உடைதல் அல்லது குழி விழுதல் என்பார்கள். இவ்வாறு தளர்வு ஏற்பட்ட 24 மணி நேரத்திலிருந்து மாடுகள் கன்றை ஈனும்.

* கன்று ஈனும் மாட்டின் அறையில் வெளிப்புறப் பெண் உறுப்பின் உதடுகள் வீங்கியும் பெரிதாகவும் மிகுந்த இளக்கத்துடனும் காணப்படும். கன்று ஈனும் தருணத்தில் இத்தளர்ச்சியானது 2 முதல் 6 மடங்கு வரை காணப்படும்.

* பொதுவாகக் கிடேரிகளில் சினையான நான்காம் அல்லது ஐந்தாம் மாதத்திலிருந்து மடி விட ஆரம்பித்துவிடும். ஆனால் ஏற்கனவே கன்று ஈனுவதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் மடிவிட ஆரம்பிக்கும். கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாகச் பாலானது சீம்பாலாக மாற்றமடையும்

* மாட்டின் பெண்ணின வெளிப்புறு உறுப்பிலிருந்து சளி போன்ற திரவ ஒழுக்கானது சில மாடுகளில் ஏழாம் மாதச் சினையிலிருந்தே தோன்றும். இருப்பினும் கன்று ஈனும் காலத்தை நெருங்கும் போது இதன் அளவு அதிகமாகக் காணப்படும்.

* கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக மாடுகள் அமைதியில்லாமல் மற்றும் தீவனம் உட்கொள்ளாமல் இருக்கும். மேலும் அவை அடிக்கடி படுத்தும் எழுந்து கொண்டும் தரையை வயிற்றை காலால் உதைத்து கொண்டும் இருக்கும்.

* கன்று ஈனும் அறிகுறிகள் தென்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து தனியாகப் பிரித்து வைத்து தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

* கன்று ஈனும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும் தரையைப் பெருக்கி சுத்தம் செய்து சுத்தமான வைக்கோலைப் பரப்பி வைக்க வேண்டும். இதன் மூல் தாய்க்கும் சேய்க்கும் இதமான சூழ்நிலைகள் ஏற்படுவதோடு மட்டு மல்லாமல் கன்று ஈனுதலும் அமைதியாக நிதழ வழிவகை செய்கிறது.

* பிறப்பிறுப்பின் வழியாகப் பனிக்குடம் என்று சொல்லப்படும் சவ்வு மூடிய நீர்ப்பை வெளிவரத் தொடங்குவதே கன்று பிறப்பதற்கான முதல் அறிகுறியாகும். இந்த நீர்ப்பை உடைந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் கன்று பிறந்துவிடும். இந்த நிர்ப்பையானது நீல நிறத்தில் தென்படும். இந்நீர்ப்யியல் திரவமானது வைக்கோல் நிறத்தில் இருக்கும். அவ்வாறு கன்று ஈனாமல் தாமதமாகுமேயானால் உடனடியாக அருகில் உ;ள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

கன்று பிறக்கும் போது இரு முன்னங்கால்களை நீட்டி அதன் மீது முக்குப் பகுதி முன்னால் நோக்கி இருக்கும்படி தலையை வைத்து அது வெளியே வரும். சில மாடுகளில் இதைப் பார்த்து விவசாயிகள் பயப்படத் தேவையில்லை. இந்த நிலையிலும் கன்று தானாகவே ஈன்றப்பட்டு விடும். சில சமயங்களில் கன்று கருப்பையில் இயற்கைக்கு மாறாகத் திரும்பியோ புரண்டோ தலைகீழாகவோ இருக்கலாம். அவ்வாறு இருக்கும் போது கன்று ஈனுதல் மிகவும் கடினம். அத்தருணங்களில் அருகிள் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியுடன் கன்றின் நிலையை நோக்கி கன்று ஈன வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகள் முறையாக பயிற்சி பெறாதவர்களைக் கொண்டோ அல்லது தாங்களாகவோ கன்றை வெளியே இழுக்க முயற்சி செய்யக்கூடாது.

கன்று ஈன்றவுடன் செய்ய வேண்டியவை :

கன்று பிறந்தவுடன் அதன் வாயிலும் முக்கிலும் படிந்துள்ள சவ்வு மற்றும் சளி போன்ற திரவத்தைச் சுத்தமான துணியைக் கொண்டோ அல்லது வைக்கோலைக் கொண்டோ துடைத்து உடனே சுத்தம் செய்ய வேண்டும் கன்றை மாட்டின் அருகில் படுக்க வைத்து நாவினால் அதன் உடலைத் தடவிவிட அனுமதிக்க வேண்டும். சில சமயங்களில் தாய்ப் பசுக்கள் அவ்வாறு செய்யாவிடில் வைக்கோல் கொண்டு கன்றின் உடலை நன்றாகத் துடைக்க வேண்டும்.

சில சமயங்களில் கன்று ஈனத் தாமதமாகும் போது நஞ்சுக்கொடிக் நீரைக் கன்று குடிப்பதாலும் மற்றும் மூக்கீனுள் புவுவதாலும் கன்றுக்குட்டி மூச்சுவிடத் திணறும். சமயங்களில் இதன் பின்னங்கால்களைப் பிடித்து கொண்டு தலைகீழாக ஒரிரு நிமிடங்கள் சுற்றவோ அல்லது தொங்கவிடவோ வேண்டும். இப்படிச் செய்வதால் அந்தத் திரவம் கன்றின் வாய் மற்றும் முக்கிலிருந்து வெளி வருவதுடன் மார்புப் பகுதி விரிவடைந்து நுரையீரல்கள் எளிதில் விரிந்து சுருங்குவதற்கத் தூண்டுகோலாக அமையும்.

கன்றுக்குட்டி நன்றாக மூச்சு விடத் தொடங்கிச் சாதாரண நிலைக்குத் திரும்பியவுடன் தொப்புள் கொடியை உடலிலிருந்து 2.5 செ.மீ அளிவல் விட்டுத் துண்டித்து சுத்தமான பஞ்சினால் டிஞ்சர் அயோடினைக் கொண்டு தடவி விட வேண்டும். இதனால் தொப்புள் வழியாக நோய்க்கிருமிகள் உள்ளே சென்று அதனால் ஏற்படக்கூடிய தொப்புள் அழற்சி மற்றும் மூட்டி வீக்கம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும்.

மாடுகள் கன்று ஈன்றவுடன் அதன் தொடை மற்றும் வெளிப்புறப் பெண் உறுப்புகளை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு நன்றாகக் கழுவி விடுதல் வேண்டும். இல்லையெனில் கன்று ஈனும் பொழுதும் ஈன்ற பிறகும் கருப்பையில் இருந்து வெளிவரும் திரவம் மாட்டின் தொடை வால் மற்றும் மடிகளில் படிந்து கிருமிகள் வளரவும் மற்றும் ஈக்கள் முட்டைவிட்டுப் புழுக்கள் வைக்கவும் ஏதுவாகிவிடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றின் செயல்பாடுகள் :

நல்ல உடல் நலமுள்ள கன்றாக இருந்தால் பிறந்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே தானாக எழுந்த நின்று விடும். அப்படி இல்லை எனில் கன்று எழுவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

கன்று பிறந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு குடலின் உறிஞ்சும் தன்மை குறைந்துவிடும். எனவே அதற்கு பிறகு சீம்பாலை அருந்தக் கொடுத்தால் அதில் உள்ள நோய் எதிர்ப்பு காரணிகள் முழுமையாகக் கன்றிற்குக் கிடைக்காமல் போய்விடும். இச்சிம்பாலை அருந்தும் போது கன்றின் குடல் பகுதிகள் தூண்டப்பட்டு செரிமானச் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

கன்று ஈன்ற 8 முதல் 12 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடியானது தானாகவே வெளியேறும். மேலும் வெளியேறிய நஞ்சுக்கொடியை பசு தின்று விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தின்று விடுமேயானால் ஒவ்வாமை மற்றும் பால் அளவு குறைவு போன்றவை ஏற்படும். சில சமயங்களில் நஞ்சுக்கொடி தானாக வெளிவராமல் கர்ப்பப்பையிலேயே தங்கிவிடும். இதனை நஞ்சுக்கொடி தங்குதல் என்பர். அப்படி தங்கிவிட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை ஆணுகி நஞ்சுக் கொடியை வெளியே எடுக்க வழிவகை செய்ய வேண்டும். மாறாக முறையற்ற வகையில் நஞ்சுக்கொடியைக் குச்சிகளில் கட்டி இழுப்பது அல்லது கல்லில் கட்டித் தொங்கவிடுவது போன்ற முறைகளில் எடுக்க முயன்றல் பசுக்கள் நோய் வாய்ப்படும் நிலை ஏற்படும்.

நோய் மேலாண்மை :

கன்று ஈன்ற மாடுகளுக்கு நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். மேலும் தீவனத்தின் அளவைக் கன்று ஈன்ற முதல் மூன்று வாரங்களுக்கு பால் உற்பத்திக்கு ஏற்பத் தொடர்ந்து தேவையான அளவு அதிகரித்துக் கொடுத்தல் வேண்டும்.

அதிக அளவில் பால் சுரக்கும் பசு மாடுகளுக்கு கன்று ஈன்ற சில நாட்களில் பால் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது கால்சியம் சத்து இரத்த்த்தில் குறைவதால் ஏற்படுவதாகும். பொதுவாக இந்தப் பால் காய்ச்சலானது அதிக அளவு பால் கறக்கக் கூடிய மாடுகளைத் தான் பாதிக்கும். பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட கன்று ஈன்ற மாடுகள் அதிகளவில் இந்தக் காய்ச்சலால் அவதிப்படுகின்றன. ஆனால் தற்போது முதல் ஈத்திலேயே சில மாடுகளில் இக்காய்ச்சல் ஏற்படுகின்றது. பால் காய்ச்சல் வந்த மாடுகளுக்கு கால்சியம் போரோ குளுகோனேட் என்ற மருந்தினை 300 முதல் 500 மிலி வரை கால்நடை மருத்துவரின் உதவியோடு இரத்தத்தில் செலுத்துதல் வேண்டும். மேலும் நாள்தோறும் 50 முதல் 100 மில்லி வரை கால்சியம் மிகுந்த டானிக்குகளைக் கொடுப்பதன் மூலம் இரத்தத்தில் கால்சியம் அளவை சீராக வைத்திருக்க முடியும்.

பொதுவாக மாடுகள் கன்று ஈன்ற பிறகு 15 முதல் 20 நாட்களுக்கு அவற்றின் கருப்பையில் இருந்து கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இக்கழிவானது நின்றுவிடும். ஆனால் கருப்பையில் நோய்கிருமிகள் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இந்த திரவம் துர்நாற்றமுடையதாக வெளியேறும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மாடுகளைக் கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்துதல் அவசியம்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விவசாயப் பெருமக்கள் தங்களது மாடுகளைப் பேணிப் பாதுகாத்தால் கன்று ஈன்ற இரண்டு மாதங்களில் அவை சினைத் தருணத்திற்கு வருவகை காணலாம். அப்போது சினையூட்டல் செய்தால் ஆண்டுக்கு ஒரு கன்று என்ற முறையில் கன்றைப் பெறுவதுடன் பண்ணையை இலாபகரமாக நடத்திச் செல்ல இயலும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete