Saturday 18 November 2017

கன்று ஈனும் போது மாடுகள் மற்றும் கன்றுகள் பராமரிப்பு பாகம் - 3 :

1. கன்றுகளைத் தாய் மாட்டிடமிருந்து சீக்கிரமே பிரித்து முழுப்பாலையும் அளித்தல்
2. கன்றுகளுக்கு பாலுக்கு பதிலாக அளிக்கப்படும் உணவுப் பொருட்கள்
3. பகுதியளவு பால் மாற்றுப் பொருட்கள்
4. கன்றுகளுக்கான ஆரம்ப காலத் தீவனம்

கன்றுகளைத் தாய் மாட்டிடமிருந்து சீக்கிரமே பிரித்து முழுப்பாலையும் அளித்தல் :

* இம்முறையில் கன்றுகளை அவை பிறந்தவுடனேயே தாய் மாட்டிடமிருந்து பிரித்து, பாலூட்டும் ரப்பர் அல்லது வாளிகளிலிருந்து கன்றுகளை பால் குடிக்க பழக்கப்படுத்துவதாகும்.

* ஒவ்வொரு வாரமும் கன்றுகளின் உடல் எடையினைப் பார்த்து அதற்கேற்றவாறு அவைகளுக்கு பால் எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். கன்றுகளுக்கு பரிந்துரைக்கப்படும் தீவன அட்டவணை – I ஐப் பின்பற்றலாம். (கன்றுகளின் வயதுக்கேற்றவாறு)

* கால அட்டவணைப்படி கன்றுகளை விவசாயிகள் எடை போட முடியாமல் போனால், கன்றுகள் பிறந்த போது உள்ள உடல் எடைக்கேற்றவாறு அவைகளுக்கு உணவினை அளிக்கலாம். கன்றுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தீவன அட்டவணை- II ஐப் பின்பற்ற வேண்டும். (உடல் எடைக்கேற்றவாறு)

* கன்றுகளின் 1, 2, 3, 4, 5 ஆம் வார வயதுகளில் அவற்றின் பிறந்த போது உள்ள உடல் எடையில் 8,9, 10, 8 மற்றும் 5 சதவிகிதம் என்ற அளவில் தீவனத்தை அளிக்க வேண்டும்.

* கன்று பிறக்கும் போது உள்ள உடல் எடையினை பார்க்க முடியாத விவசாயிகள் தோராயமாக கன்றுகளின் உடல் அளவினைப் பொருத்து சிறிய, பெரிய மற்றும் நடுத்தர உடல் அளவுடைய கன்றுகள் எனப்பிரித்து பிரிவு 2, 4, 6 தீவன அட்டவணையினைப் பின்பற்றி தீவனமளிக்க வேண்டும்.

முழுப்பால் மற்றும் கன்றுத் தீவனம் அளித்து கன்றுகளுக்கு குறைந்த செலவில் தீவனமளித்து வளர்த்தல் :

* குறைந்த செலவில் கன்றுகளை வளர்க்க முழுப்பாலுடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், மற்றும் கன்றுகளின் ஆரம்ப காலத் தீவனத்தைச் சேர்த்து அளிக்க வேண்டும்.

* கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் சக்தி குறைவாக இருக்கும்.

* பாலுடன் கன்றுகளுக்கு தானியக் கலவை, சுக்ரோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், வெல்லம், எண்ணெய் மற்றும் கொழுப்பு போன்றவற்றையும் சேர்த்து அளிக்கலாம்.

* கன்றுகளின் 4-6 வார வயதிற்கு முன்னால் அவற்றின் உடலால் சுக்ரோஸ் சர்க்கரையினை உபயோகிக்க முடியாமல் போகலாம். இதனால் கன்றுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.

* வெல்லம் விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு உணவுப்பொருளாகும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை, கொழுப்பு நீக்கப்படாத பாலுக்கு பதிலாக கன்றுகளின் 5ம் நாள் வயதிலிருந்து கொடுக்கலாம். வெல்லத்தை கன்றுகளின் இரண்டாம் வார வயதில் கொடுப்பதால் கொழுப்பு நீக்கப்படாத பாலை கொடுக்கும் போது கிடைக்கும் உடல் வளர்ச்சி இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுகளுக்கான தீவனமளிக்கும் அட்டவணை – I :

(i) கன்றுகளின் வயது வாரங்களில் - 4 முதல் 7

முழுப்பால் - உடல் எடையில் 10%

பயறு வகை வைக்கோல் - தேவைக்கேற்ப

கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனம் -
தேவைக்கேற்ப

(ii) கன்றுகளின் வயது வாரங்களில் - 2-8வது வாரம்

முழுப்பால் - உடல் எடையில் 10%

பயறு வகை வைக்கோல் - தேவைக்கேற்ப

கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனம் - தேவைக்கேற்ப

(iii) கன்றுகளின் வயது வாரங்களில் - 9 வது வாரம்

முழுப்பால் - உடல் எடையில் 10% – 2 கிலோ

பயறு வகை வைக்கோல் - தேவைக்கேற்ப

கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனம் - தேவைக்கேற்ப

(iv) கன்றுகளின் வயது வாரங்களில் - 10ம் வாரம்

முழுப்பால் - 10% உடல் எடையில் 10% – 4 கிலோ

பயறு வகை வைக்கோல் - தேவைக்கேற்ப

கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனம் - தேவைக்கேற்ப

கன்றுகளுக்கு பாலுக்கு பதிலாக அளிக்கப்படும் உணவுப் பொருட்கள் :

* பாலுக்கு பதிலாக கன்றுகளுக்கு அளிக்கப்படும் உணவுப் பொருட்களில் கொழுப்பு நீக்கிய பால் பவுடர், கொழுப்பு அல்லது தாவரக்கொழுப்பு போன்றவற்றுடன் மோர் பவுடர், வே பவுடர் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

* சிறிதளவு குளுக்கோஸ், சோயாபீன் மாவு, தானிய மாவு, வைட்டமின்கள், தாது உப்புக் கலவை போன்றவையும் சேர்க்கப்பட வேண்டும்.

* நல்ல தரமான உணவுப்பொருட்களை பாலுக்கு பதிலாக உபயோகித்தால் கன்றுகளுக்கு சீம்பாலை அளித்தபிறகு கொழுப்பு நீக்கப்படாத பாலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

* நல்ல, தரமான பாலுக்கு மாற்றாக உபயோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் குணநலன்கள் இதில் குறைந்தது 50% தெளிப்பான் மூலம் உலர்த்தப்பட்ட கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் இருக்கும்.

* நிலைப்படுத்தப்பட்ட உயர்தர கொழுப்பு 10-15%, முக்கியமாக லார்ட் எனப்படும் விலங்கு கொழுப்பை நன்றாக அரைத்து, கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் அல்லது மோருடன் கலந்து பிறகு தெளிப்பான் மூலம் உலர வைக்கப்பட்ட பால் பவுடருடன் சேர்ந்து கன்றுகளுக்கு கொடுக்கலாம்.

* பால் மாற்றுப் பொருளுடன் வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி 12 கலந்து கொடுக்கலாம்.
பால் மாற்றுப் பொருளுடன் எதிர் உயிரி மருந்துகளை வளர்ச்சி ஊக்கிகளாகக் கொடுக்கலாம்.

* இதில் 22-25% தரமான புரதம் இருக்கவேண்டும்.

* பால் மாற்றுப் பொருளில் ஸ்டார்ச் அல்லது நார்ச்சத்து இருக்கக்கூடாது.

* தானியங்கி தீவன இயந்திரம் மூலம் அளிக்கும்போது சீராக விழ வேண்டும்.

* தண்ணீரில் உடனே கரையக்கூடியதாக இருக்க வேண்டும்.

* பால் மாற்றுப் பொருளுடன் சரியான அளவு வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து கன்றுகளுக்கு கொடுக்க வேண்டும். இதனுடன் அதிகப்படியான தண்ணீரையோ அல்லது குறைவான அளவு தண்ணீரையோ கலந்தால் கன்றுகளுக்கு சீரணக்கோளாறுகள் ஏற்படும்.

* பால் மாற்றுப் பொருள் ஒரு பங்கும் (ஒரு கிலோ) தண்ணீர் (லிட்டர்) எட்டு லிட்டரும் கலந்தது சரியான கலவையாகும்.

* தரமான பால் மாற்றுப் பொருளில் தெளிப்பது மூலம் உலர வைக்கப்பட்ட கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் 50 பங்கும், உலர வைக்கப்பட்ட வே பவுடர் 10 பங்கும், பால் அற்ற இதர உணவுப் பொருட்கள் 40 பங்கும் இருக்கவேண்டும்.

ஓஹியோ பணியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட பால் மாற்றுப்பொருளின் உள்ளடக்கம் பின்வருமாறு :

பொருள் - அளவு (கிலோக்களில்) :

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் - 70 கிலோ

உலர்ந்த வே பவுடர் - 18 கிலோ

லெசித்தின் - 2 கிலோ

விலங்கு கொழுப்பு - 10 கிலோ

டை கால்சியம் பாஸ்பேட் - 1.7 கிலோ

தாமிர சல்ஃபேட், இரும்பு சல்பேட், மாங்கனீஸ் சல்பேட், எதிர் உயிரி மருந்துகள் - Traces

பகுதியளவு பால் மாற்றுப் பொருட்கள் :

* முழுப்பால் மாற்றுப் பொருளுக்கும், பகுதியளவு பால் மாற்றுப் பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், பகுதியளவு பால் மாற்றுப்பொருளில் அதிக அளவு பாலோ அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரோ இருக்காது.

* பகுதியளவு பால் மாற்றுப் பொருளுக்கான ஒரு உதாரணம் பின்வருமாறு,

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உள்ளடக்கம் - அளவு :

கோதுமை - 10

லின் சீட் தூள் - 40

பால் - 23

தேங்காய் எண்ணெய் - 10

பியூட்டிரிக் அமிலம் - 0.3

சிட்ரிக் அமிலம் - 1.5

தாது உப்புக் கலவை - 3.0

எதிர் உயிரி மருந்துகள் - 0.2

மொத்தம் - 100

கன்றுகளுக்கான ஆரம்ப காலத் தீவனம் :

* இது கன்றுகளுக்கு அவற்றின் முதல் நாள் அளிக்கப்படும் அடர்தீவனமாகும்.
கன்றுகள் அவற்றின் இரண்டாம் வார வயதிலிருந்து சிறிதளவு அடர் தீவனத்தை உண்ண ஆரம்பிக்கும்.

* அடர் தீவனத்தை கன்றுகள் உண்ணப் பழக்க கீழ்க்காணும் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

* அடர்தீவனத்தை முதலில் கன்றுகளுக்குப் பால் வைக்கும் வாளியிலேயே வைக்கவேண்டும். பால் குடித்தவுடன் அந்த வாளியிலேயே சிறிதளவு தீவனத்தை வைக்கவேண்டும். இவ்வாறு வைப்பதால் கன்றுகள் அடர் தீவனத்தை முகர்ந்து நக்க ஆரம்பிக்கும். பிறகு அடர் தீவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவேண்டும்.

* சிறிதளவு அடர் தீவனத்தை கன்றுகளின் நாக்கிலும், உதடுகளிலும் தேய்த்து விடுவதாலும் கன்றுகள் அடர் தீவனத்தை உண்ணத் தூண்டப்படும்.

* கன்றுகளுக்கு அளிக்கப்படும் அடர் தீவனம் ருசி மிகுந்ததாக இருக்க வேண்டும்.

* அடர் தீவனத்தில் அதிக அளவு எரிசக்தியும் (75% மொத்த சீரணிக்கும் சத்துகள்), 14-16% சீரணமாகக் கூடிய புரதமும் இருக்கவேண்டும்.

* கன்றுகளுக்குத் தேவையான அளவு அடர் தீவனத்தை அவை ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ உண்ணும் வரை கொடுக்கவேண்டும். கன்றுகள் 1-1.5 கிலோ தீவனத்தை உண்ண ஆரம்பித்த பிறகு, அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தின் அளவை கட்டுப்படுத்தலாம்.

* கன்றுகள் ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ தீவனத்தை அவற்றின் 2.5 முதல் மூன்று மாத வயதில் எடுக்க ஆரம்பிக்கும்.

* கன்றுகள் ஒரு நாளைக்கு 0.4 முதல் 0.5 கிலோ அடர் தீவனத்தை எடுக்க ஆரம்பிக்கும்போது அவற்றுக்கு பால் அளிப்பதை அவற்றின் இனத்திற்கேற்றவாறு நிறுத்திவிட வேண்டும்.

* பல்வேறு விதமான ஆரம்ப கால கன்றுத் தீவனங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

* அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் தீவன மூலப்பொருட்கள், மற்றும் அவற்றின் விலையினைப் பொருத்து ஆரம்ப காலக் கன்று தீவனத்தின் மூலப்பொருட்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஆரம்ப காலக் கன்று தீவனத்தின் உள்ளடக்கம் :

உட்பொருட்கள் - அளவு

மக்காச்சோளம் - 42

கடலைப் பிண்ணாக்கு- 35

கோதுமைத் தவிடு அல்லது அரிசித் தவிடு - 10

மீன் தூள் - 10

தாது உப்புக் கலவை - 2

உப்பு - 1

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete