Saturday 25 November 2017

மழைக்காலங்களில் செம்மறி ஆடுகளில் உண்டாகும் புழுப்புண் நோய்கள் :

1. நோக்கம்
2. புழுப்புண் எப்படி உருவாகிறது
3. சிகிச்சை முறைகள்
4. பண்ணை மேலாண்மை முறை
5. கேள்வி பதில்

நோக்கம் :

ஆடுகள் பல்வேறு வகையான நோய்களால் தாக்கப்படுகின்றன. இவற்றில் மழைக்காலங்களில் உண்டாகும் புழுப்புண்கள், முக்கியமான நோயாகும். செம்மறி ஆட்டுப் பண்ணையாளர்கள் இந்நோயைப் பற்றித் தெரிந்துகொண்டு அதனைத் தடுப்பது மிகவும் அவசியம்.

புழுப்புண் எப்படி உருவாகிறது :

* இந்நோயானது பல்வேறு நிற வகையான இனத்தைச் சேர்ந்த வண்ண வண்ண ஈக்களில் இளம் புழுக்களின் தாக்கத்தினால் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.

* இக்காலங்களில் ஆடுகளின் உரோமங்கள் அதிக நேரம் ஈரப் பசையுடன் இருந்தாலோ, உரோமமானது சிறுநீர் மற்றும் சாணத்துடன் பாதிக்கப்பட்டிருந்தாலோ மற்றும் ஆடுகள் ஏதாவது அடிபட்டு உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலோ, இப்புண்கள் புழுப் புண்களை உருவாக்கக்கூடிய ஈக்களைக் கவரும். இந்த மாதிரியான சூழ்நிலையில், முதல்நிலைப் புழுப்புண்களை உருவாக்கக்கூடிய ஈக்களினால் முதலாவதாகத் தாக்கப்பட்டு முட்டையிடுவதற்கு ஏதுவாக அமையும். இதிலிருந்து வரும் இளம் புழுப்புண்கள் தோலில் உள்ள திசுக்களை உண்பதனால் திசுக்களைப் பாதிக்கும். ஆகையால், இப் புழுப்புண்கள் இரண்டாம் நிலைப் புழுப்புண்களை உருவாக்கக்கூடிய ஈக்களினால் மீண்டும் தாக்கப்பட்டு மேலும் தீவிரமடையும். கடைசியாக இந்தப் புண்கள் குணமாகும் தருணத்தில் மூன்றாம் நிலை ஈக்களால் தாக்கப்பட்டுத் தீவிரமடையும். இந்த ஈக்களின் தாக்கமானது கிடாவாக இருந்தால், ஆசனவாயின் அருகிலும், பெட்டை ஆட்டின யோனியையும் அதிகமாகத் தாக்கும். இதனை மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். அதாவது, மூக்கு தாடை மற்றும் காதுகளில்கூட இந்நோய் உண்டாகும்.

* நோயின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட ஆடுகள் தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டிருப்பதனுடன், பாதிக்கப்பட்ட இடத்தைக் கடித்துக்கொண்டிருக்கும். புண்கள் வால் பகுதியில் உருவாகியிருந்தால், வாலை ஆட்டிக்கொண்டு இருப்பதனுடன், பின்னங்கால்களை உதைத்துக்கொண்டு காணப்படும். இந்தப் புழுப்புண்களில் இளம் புழுக்கள் இங்கு மங்கும் ஊர்வதனால், இடர்ப்பாடுகள் ஏற்படும். புழுக்களின் குடைச்சலால் தீவனம் உண்ணாமல் இருப்பதனால் மெலிந்து போகும். இந்தப்புழுக்களிலிருந்து துர்நாற்றமுடைய திரவக் கசிவு வழிந்துகொண்டிருக்கும். இந்நோய்க்குச் புழுப்புண் குறித்த காலத்தில் அளிக்காதபோது, நிலையில் மேலும் சிகிச்சை முற்றிய பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு இரத்தத்தில் நச்சு கலந்து ஆடுகள் இறக்கவும் நேரிடும்.

* பொருளாதார இழப்பு : இதன் மூலம் பொருளாதார இழப்பு என்னவென்றால் இறைச்சி மற்றும் தோல் உற்பத்தி பாதிக்கப்படும். இதனொடு மட்டுமல்லாமல் உரோமத்தின் மதிப்பும் குறைந்து ஆடு வளர்ப்போர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.

சிகிச்சை முறைகள் :

* ஆடுகள் மேற்கூறிய அறிகுறிகளுடன் காணப்பட்டால், உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகிச் சிசிச்சை அளித்திடல் வேண்டும்.

* ஆடு வளர்ப்போர் பாதிக்கப்பட்ட புழுப்புண்களில் தாமாகவே மண்ணெண்ணெய் மற்றும் டிஞ்சர் போன்றவற்றை ஊற்றக்கூடாது.

* முதலாவதாகப் புழுப்புண்கள் உண்டான இடத்தைச் சுற்றியுள்ள உரோமங்களைக் கத்தரிக்க வேண்டும். புழுப்புண்களில் உள்ள புழுக்களை இடுக்கியால் எடுத்து ஒரு பாலித்தீன் பையில் போட்டு நன்கு சூரிய வெளிச்சத்தில் வைத்தால் இந்தப் புழுக்கள் இறந்துவிடும். இதனால் மேலும் இதிலிருந்து ஈக்கள் உருவாவதனைத் தடுக்கலாம். வேப்ப எண்ணெயைத் தடவ வேண்டும்.

* கற்பூரத்தை வேப்ப எண்ணெயுடன் கலந்து புண்களில் வைக்கலாம்.

* டர்ஃபன்டைன் எண்ணெயைப் புழுக்களில் ஊற்றினால் புழுக்கள் வெளியே வந்துவிடும். புழுக்களை அகற்றிய பின் புண்ணுக்குப் போடும் களிம்பு மருந்தைப் பயன்படுத்தலாம்.

* பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி ஈக்களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்.

பண்ணை மேலாண்மை முறை :

பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிலிருந்து பிரித்துச் சிகிச்சை அளித்திடல் வேண்டும். வயதான மற்றும் அடிக்கடி இந்த மாதிரியான தாக்கம் உள்ள ஆடுகளை மழைக்காலங்களில் கண்காணித்துப் புண்கள் ஏற்படும்போது வேப்ப எண்ணெயைத் தடவி இதனைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். இனவிருத்திக்காகப் பயன்படுத்தும் ஆடுகளில், ஆசனவாயின் மேல்பகுதியில் அதிகத் தோல் சுருக்கங்கள் இருக்கக்கூடாது. உரோமத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகளில் புழுப்புண் தாக்கத்திலிருந்து தடுப்பதற்குக் கீழ்க்காணும் பண்ணைப் பராமரிப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும். வாலைச் சுற்றியுள்ள மற்றும் பின்னங் கால்களுக்கிடையிலுள்ள அதிக உரோமங்களை நீக்குதல் வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை உரோமத்தைக் கத்தரித்தல் வேண்டும். மேற்கூறிய முறைகளை மேற்கொள்வதன் மூலம் ஆடுகளை இந்த ஈக்களின் தாக்கத்திலிருந்து குறைத்து, அவற்றிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்ற பலனை அடைய முடியும்.

கேள்வி பதில் ;

1. ஆடுகளில் என்னென்ன வகையான குடற்புழுக்கள் காணப்படும்?

தட்டைப்புழு, நாடாப்புழு மற்றும் உருண்டைப்புழு

2. உருண்டைப்புழுக்கள் எவ்வாறு ஆடுகளுக்கு பரவுகின்றன?

உருண்டைப்புழுக்கள் பரவுவதற்கு நத்தையோ அல்லது உண்ணியோ தேவையில்லை. நேரடியாகப் புல்லோடு சேர்ந்து ஆட்டுக்குள் போய்விடும்.

3. உருண்டைப்புழுக்களின் தாக்கம் எந்தெந்த மாதங்களில் அதிகமாகக் காணப்படும்?

உருண்டைப்புழுக்களின் தாக்கம் மழைக்கால மாதங்களான புரட்டாசியிலிருந்து மாசி மாதம் வரைக்கும் அதிகமாகக் காணப்படும்.

4. உருண்டைப்புழுக்கள் எந்த வயது ஆடுகளை அதிகமாக தாக்குகின்றன?

பொதுவாக உருண்டைப்புழுக்கள் ஒரு வயதுக்கு குறைவாக உள்ள ஆடுகளை அதிகமாக தாக்கும். ஏனென்றால் இளம் வயது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete