Saturday 31 March 2018

எருமை வளர்ப்பு பாகம் - 2

1. தீவனப் பராமரிப்பு
2. கறவை எருமைகளின் தீவனப் பராமரிப்பு

தீவனப் பராமரிப்பு :

எருமைகள் அசை போடும் கால்நடை இனத்தைச் சார்ந்தவை. இவை நார்ச்சத்து மிகுந்த பொருட்கள் உண்பதால் தான் இதன் பால் அதிக சத்துள்ளதாக விளங்குகிறது. எருமையின் வயிறு செல்லுலோஸ் போன்ற கடினமான உணவுகளையும் செரிக்க வல்லது. எருமை மாடுகள் முதலில் உணவை விழுங்கிவிடுகின்றன. பின்பு மீண்டும் வாய்க்கு எடுத்து வந்து அசை போட்டு பின்பு உள்ளே அனுப்பிச் செரித்துக் கொள்கின்றன. எனவேதான் எருமைகளால் நன்கு செரிக்க முடிகின்றது.

உணவானது விழுங்கியவுடன் முன்வயிற்றுப் பகுதிக்கு சென்றுவிடுகிறது. அங்கே பிராண வாயு (ஆக்சிஜன்) இருப்பதில்லை. அங்குள்ள பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைகள் போன்றவை இந்த உணவைத் தங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்காக உடைத்துப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த உணவு வாயினால் அசை போட்டு அரைக்கப்பட்டு எவ்வளவு நேரம் வயிற்றில் செரிக்கப்படுகிறது என்பது அதன் அளவு, வடிவத்தைப் பொறுத்தது. எருமைகள், பசுமாடுகளை விட மெதுவாகவே செரித்த பொருளை, நன்கு உறிஞ்சிப் பயன்படுத்திக் கொள்கின்றன. அமில காரத்தன்மை 6-7 வரை இருக்கும். இது உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து வேறுபடலாம்.

உணவானது செரிக்கப்பட்டு, புரதம், கார்போஹைட்ரேட் தாதுக்கள், கொழுப்பு மற்றும் நீர்ச்சத்தாக மாற்றுகின்றன. மேலும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள், பியூட்ரிக் அமிலங்கள், அம்மோனியாவுடன் சேர்ந்து வயிற்றில் உறிஞ்சப்படுகின்றன. இவை இரத்தத்துடன் கலந்து தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிறைய உலர் தீவனமும், குறைந்த அடர்த் தீவனமும் கொடுத்தல் வேண்டும்.

புரதம் :

புரதமானது வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளால் வளர்சிதை மாற்றங்களுக்காக அமினோ அமிலங்களாக மாற்றப்பட்டு செரிக்கப்படுகிறது. இந்த நுண்ணுயிர்ப் புரதமானது வாயு நொதிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வயிற்றில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலமாக கல்லீரலுக்கு கடத்தப்படும் அம்மோனியா, யூரியாவாக மாற்றப்படுகிறது. ஏதேனும் புரதப் பற்றாக்குறை ஏற்பட்டால் யூரியா, நுண்ணுயிரிகளால் புரதமற்ற நைட்ரஜனாக எடுத்துக் கொள்ளப்பட்டு புரதத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நைட்ரஜன் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

நுண்ணுயிர்த் தாக்குதலைத் தாங்கும் வகையில் புரதம் இருக்கவேண்டும். இது மாற்றுவழிப் புரதம் எனப்படும். இந்தப் புரதமானது சிறுகுடல், பின்வயிற்றுப் பகுத போன்ற நொதிகள் உள்ள பகுதியில் மட்டுமே செரிக்கப்படுகிறது. இவ்வகைப் புரதங்கள் சில அடர் தீவனமாகவும் கிடைக்கிறது. நிறைய பால் உற்பத்தி செய்யும் எருமைகளுக்கு இதை வழங்கலாம்.

கார்போஹைட்ரேட் :

இவை எருமைகளில் முக்கிய சக்திக்கு ஆதாரம் ஆகும். கார்போஹைட்ரேட், சர்க்கரைகள் ஸ்டார்ச் மற்றும் நார்ப் பொருட்களிலிருந்து கிடைப்பவை. நார்ச்சத்தில் உள்ள செல்லுலோஸ், லிக்னின் போன்றவை செல் சுவரின் பாகங்கள் ஆகும். ஸ்டார்ச் ஆனது வாயு நொதிகளால் செரித்துவிடும். சாதாரண விலங்குகளை விட அசை போடும் மிருகங்கள் நார்ப் பொருட்களை செரிக்க அதிக நேரம் எடுக்கின்றன. எனினும் மர நார்ப்பொருட்கள் செரிக்கப்படாது. எருமைகளில் செரிக்கும் திறன் பிற கால்நடைகளை விட, 5-8 சதவிகிதம் அதிகம்.

கொழுப்பு :

எருமைகளுக்கு கொழுப்பு அதிகமாக தேவைப்படுவதில்லை. தீவனங்களில் இருந்தாலும் இது நுண்ணுயிரிகளால் அழிக்கப்படுகிறது. கரையாத கொழுப்பு அமிலங்களும் ஹைட்ரோலைஸ்டு மூலம் கரையும் அமிலங்களாக மாற்றப்படுகிறது. எனவே தான் அசை போடும் மிருகங்களில் உடல் எடையின் கொழுப்பும் பால் கொழுப்பும் ஒரே அளவு அமைந்துள்ளன. செரிக்காமல் முன் வயிற்றில் விடப்பட்ட கொழுப்புகளும் கீழ் குடலில் செரித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இது பாலின் தன்மையை மாற்றி விடும். தேவையற்ற கொழுப்பானது குடலில் உள்ள நுண்ணுயிர்களை குறைப்பதால் நார்ப்பொருட்களின் செரிமானம் தடைபடுகிறது. எனவே தேவையான சத்து கிடைக்காமல் போகலாம்.

ஊட்டச்சத்து தேவை :

நல்ல இலாபம் பெற கால்நடை வளர்ப்பில் கால்கடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். தவறான தீவனத்தால் நோய்த் தொற்று, உற்பத்திக் குறைவு போன்ற பொருளாதார இழப்புகள் நேரிடலாம். எருமைக்குத் தேவையான உணவை சரியாகத் தெரிந்து வைத்திருந்தால் தீவனப் பராமரிப்புச் செலவைக்குறைக்க இயலும். இல்லையெனில் நிறைய தீவன சேதாரம் ஆகும். எருமைகளுக்கும் பெரும்பாலும் கால்நடைகளைப் போன்றே தீவனத் தேவை இருப்பதால் மாடுகளுக்கும் கொடுக்கப்பட்ட அட்டவணையை உபயோகிக்கலாம்.

ஆற்றல் / சக்தி :

கார்போஹைட்ரேட் நிறைந்த நார்ச் சத்துப்பொருள்கள், ஸ்டார்ச் மற்றும் சிறிது கொழுப்பு போன்றவையே ஆற்றல் அழிப்பவை. இதில் எருமைகளுக்கு உலர் தீவனங்களே மலிவான சிறந்த தீவனமாகும். பரிமாண ஆற்றல் மூலம் எருமைகளின் உணவு விகிதத்தைக் கணக்கிடலாம். பரிமாண ஆற்றல் என்பது கால்நடைகள் வளர்ச்சி, பராமரிப்பு, பால் உற்பத்தி போன்றவற்றிற்குத் தேவையான ஆற்றலாகும். மொத்த ஆற்றலில் பெரும்பகுதி மீத்தேன் மூலமாகவும், உஷ்ணத்தை ஒழுங்குபடுத்துதலிலும் ஆற்றல் வீணாகிறது.

ஆற்றலானது கலோரி மூலம் அளிக்கப்படுகிறது. கலோரி + 4.18 ஜீல் பொதுவாக மெகா கலோரி அல்லது மெகா ஜீல் (1 மெகா கலோரி + 1 மில்லியன் கலோரி ஜீல்) மற்றொரு அளவை “மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எனப்படும். இது கார்போஹைட்ரேட், கொழுப்பை அளவிட பயன்படுகிறது. இவை கி.கி (அ) கிராம் அலகில் அளவிடப்படுகின்றன.

உணவின் ஆற்றல் அளவு பாதுகாக்கப்பட்ட கொழுப்பை சேர்ப்பதால் செரித்தலை குடலுக்குக் கொண்டு வருவதன் மூலம் அதிகரிக்கப்படுகிறது. அவ்வாறு குசம்பப்பூ எண்ணெய் 1 கி.கி பயன்படுத்தினால் ஊட்டச்சத்து அதிகரிக்கப்படுகிறது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

புரதம் :

வளர்ச்சி, திசு புதுப்பித்தல், பால் உற்பத்தி போன்றவற்றிற்கும் புரதம் தேவைப்படுகிறது. பயறு வகைத் தாவரங்கள், தானியங்கள், எண்ணெய் வித்துப் புண்ணாக்குகள் புரதச் சத்து மிகுந்தவை. புரதம் பண்படாத புரதம் கி.கி (அ) கிராமில் அளக்கப்படுகிறது.

வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் :

தாது உப்புக்கள் உடலின் பல வேலைகளுக்குத் தேவைப்படுகின்றன. முக்கியத் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் இவை நரம்புச் செயல்பாட்டிற்கு அவசியமானவை. உடலின் வளர்சிதை மாற்றத்தின் ஆற்றலுக்கு பாஸ்பரஸ் இன்றியமையாதது. ஏடிபி எனப்படும் அடினைன் டிரை பாஸ்பேட், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை 2 சதவிகிதம் என்ற விகிதத்தில் தேவைப்படுகிறது. கால்சியம் சிறுகுடலில் இருந்து செரிக்கப்பட்ட சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.

உப்பு, சோடியம், பொட்டாசியம் குளோரைடுடன் இணைந்துள்ளன. தீவனத்தில் உள்ள இந்நுண்ணுயிர்ச்சத்துக்கள் உடல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும்.

வைட்டமின் இவை முழு உடல் செயல்பாடுகளுக்கு அவசியம். வைட்டமின்கள் நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுகின்றன. வைட்டமின் பி, சி, கே மற்றும் டி போன்றவை அதிகளவு தேவைப்படுவதில்லை. வைட்டமின் பி நுண்ணுயிரிகள் (முன் வயிற்றில் இருப்பது) லாலும், கே குடல் உயிரிகளாலும் சி திசுக்களிலும் உருவாக்கப்படுகிறது. புறஊதாக்கதிர்கள் கால்நடைகளின் தோலில்படும் போது வைட்டமின் டி உருவாகிறது. வைட்டமின் ஏ மற்றும் இ, விலங்குகளால் தயாரித்துக் கொள்ள இயலாது. பதப்படுத்திய தீவனங்கள், பசும்புற்கள், இலைகள், கேரட், பயறுகள் போன்றவை வைட்டமின் ஏ வைப் பெற்றுள்ளன.

தாது / வைட்டமின் கலவை :

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை பொடியாகவோ அல்லது கால்நடைகள் நக்கிச் சாப்பிடுமாறு கல் வடிவிலோ தாதுக் கலவையை அளிக்கலாம். இந்த விட்டமின்கள் சூரிய ஒளியில் நேரடியாக வைக்கப்படும் பொழுது பாதிக்கப்படும். எனவே இதை கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.

நீர் :

உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிற்கும், பால் உற்பத்தி, இரத்தப் பிளாஸ்மாக்களை பராமரிக்கவும் நீர் இன்றியமையாத தேவை ஆகும். உடல் வெப்பம் பராமரிப்பு கால்நடை அருந்தும் நீரைப் பொறுத்தது. 3 வழிகளில் கால்நடைகளுக்கு நீர் கிடைக்கின்றது.

குடிநீர் :

* தீவனத்தில் உள்ள நீர் (பசும்புல்)

* செரிமானத்திலிருந்து கிடைக்கும் நீர்

* குடிநீரானது எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் நீர் சிறிதளவே இருக்கும். பதப்படுத்தப்பட்ட பசுமையான தீவனங்களில் நீரின் அளவு அதிகமாக (70 சதவிகிதம்) இருக்கும்.

* எருமையின் நீர்த்தேவையானது கீழ்வருவனவற்றைச் சார்ந்தது

உணவு :

* தட்பவெப்பநிலை (ஈரப்பதம், வெப்பநிலை)
உடல் செயல்கள் (வளர்ச்சி, சினைத் தருணம், பால் உற்பத்தி)

* மாடுகளை விட எருமைகள் பொதுவாக அதிக நீர் அருந்துகின்றன. அருந்தும் நீரளவு குறையும் போது, உலர்த்தீவனம் எடுக்கும் அளவும் குறைவதால் பால் உற்பத்தி குறையும்.

* நீர்ன் உப்புத்தன்மை எருமைக் கறவை மாடுகளில் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. நீரில் உப்பின் அளவு லிட்டருக்கு 5 கி வரை இருக்கலாம். இது அதிகமானால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

தீவனம் :

* எருமையின் முக்கியத் தீவனங்கள் (புற்கள்) பயறுவகைத் தாவரங்கள் மற்றும் வைக்கோல் தீவனமானது நேரடியாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றோ அல்லது புற்களை வெட்டி எடுத்து வந்து அளித்தல், வைக்கோல், பதப்படுத்தப்பட்ட தீவனமாக அளிக்கலாம். மேலும் உலர் தீவனங்கள், தானியங்கள், அடர் தீவனமாகவும், எண்ணெய் வித்துப்பயிர்களின் புண்ணாக்கு, கரும்பின் தோகை போன்றவற்றையும் அளிக்கலாம். தானியங்கள், அடர் தீவனங்கள் வளர்ச்சி, சினை மற்றும் பால் உற்பத்தி போன்றவற்றிற்காக மட்டுமே இருக்கவேண்டும். அதே போல் நார்ச்சத்தற்ற தீவனங்களைத் தொடர்ந்து அளித்து வருவதால் அதன் செரிப்புத் தன்மை மாறி பசியின்மை, எடை இழப்பு மற்றும் பால் அளவு குறைதல் போன்ற விளைவுகள் நேரும்.

* உலர்த்தீவனமானது நல்ல தரத்துடன் ஊட்டசத்துள்ளதாகவும் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும்.

உலர்தீவன வகைகள் :

பலவகை புற்கள் இவ்வகையில் அடங்கும். (லுயூசர்ன்) குதிரைமசால், கொழுக்கட்டைப்புல், மருத்துவப் பயறு வகைகள் போன்றவை நைட்ரஜனை வேர்களில் நிலைப்படுத்துகின்றன. அதாவது இவை பாக்டீரியாக்களின் உதவியால் நைட்ரஜனை தயாரித்துக் கொள்வதால், மண்ணிலுள்ள நைட்ரஜனைச் சார்ந்திருப்பதில்லை. இவ்வகைத் தாவரங்கள் புற்களை விட அதிக புரதத்தைப் பெற்றுள்ளன. குதிரை மசால் போன்ற தாவரங்களின் பால் உற்பத்திக்குத் தேவையான கால்சியம், வைட்டமின் மற்றும் கரோட்டீனைப் பெற்றுள்ளன.

அதே போல் இலை தழைகள் கொண்ட மரங்களான லுயூகேனியா, கிளைரிசிடியா, செஸ்பேனியா போன்றவையும் சிறந்த தீவனப் பயிர்கள் ஆகும். மேலும் இந்த பயறு வகைத் தாவரங்கள் எதிர் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் செரிக்கும் திறனைக் குறைப்பதால் குறைந்த அளவே உட்கொள்ளும். எனவே மரவகைத் தீவனங்களின் இலைகளை பறித்து 50 சதவிகிதம் அளவு மட்டுமே எடுத்து மற்ற தீவனங்களுடன் கலந்து கொடுக்கவேண்டும். மரக்கிளைகளை 6-10 வாரங்களுக்கு ஒரு முறை வெட்டி விடுதல் நன்று.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அறுவடை செய்யப்பட்ட உலர் தீவனங்கள் :

தாவர வளர்ச்சியின் ஆரம்பத்தில் புரதம், சர்க்கரை (ஆற்றல்) அதிகமாகவும் லிக்னின் அளவு குறைவாகவும் இருக்கும். அத்தாவரம் முதிர்ச்சி அடைய அடைய லிக்னின் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் புரதம் குறைவாகவும் இருக்கும். அப்படி இருக்கும் பயிர்களே தரமான தீவனங்கள் ஆகும்.

மேய்ச்சலுக்கு விடும் போது கால்நடைகள் புற்களை தரை வரை அதிகளவு மேய்ந்து விடக்கூடாது. ஏனெனில் மிகக் கீழே மேய்ந்து விட்டால் பின்பு மறுபடி புற்கள் வளர்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

மேலும் மண் அரிப்பிற்கும் அது வழிகோலும். அதே சமயம் சரியாக மேயாவிட்டாலும் மறுமுறை மேய்ச்சலுக்கு முன் புற்கள் வெகு விரைவில் உயரமாக வளர்ந்து விடும். நன்கு வளர்ந்து முதிர்ந்த புற்களில் புரத அளவு குறைவாகவே இருக்கும். மேலும் செரித்தலும் கடினம்.

உலர்த்தீவன நேர்த்தி :

தீவனப் பயிர்களைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து, சிறு கட்டிகளாக உருட்டி உருவமைத்துக் கொடுத்தால் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்கும். இதன் தரத்தை உயர்த்த காரம் அல்லது அம்மோனியாவுடன் நேர்த்தி செய்யலாம். அம்மோனியா கலந்த, துண்டுகளாக்கப்பட்ட வைக்கோல் சில சமயங்களில் பால் குறைந்த மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

அடர் தீவனங்கள் :

அடர் தீவனம் என்பது சிறிதளவு தீவனத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடர்ந்துள்ளதைக் குறிக்கும். நம் நாட்டில் அடர் தீவனம் என்பது எண்ணெய் வித்துப் பயிர்களின் புண்ணாக்கு ஆகும். எண்ணெய் பிழியப்பட்டபின் உள்ள சக்கையைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர். இதில் புரதம் அதிகளவு உள்ளது.

பிற தீவனங்களான யூரியா, கரும்புச் சக்கை போன்றவையும் நுண்ணுயிரிகளுக்கு நைட்ரஜன் ஆதாரமாகப் பயன்படுகின்றன. கரும்பு புளித்துப் போவதால் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கு நல்ல ஆற்றலைத் தருகிறது. பல அடர் தீவனங்கள் தயார் செய்யப்பட்டு உடனடி பயன்பாட்டிற்காக விற்கப்படுகின்றன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

தானிய வகைகள் :

பார்லி, கோதுமை, ஓட்ஸ், சோளம், கம்புச் சோளம் போன்றவை. எருமைக்கு சிறந்த தீனி. இவற்றை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

தன்னிச்சையான உணவூட்டம் :

தன்னிச்சையான உணவூட்டம் என்பது ஒரு நாளொன்றுக்கு எருமை உட்கொள்ளும் தீவனம் ஆகும். இது உடல் எடை சதவீதம் அல்லது உலர் எடை கி.கிராமில் அளவிடப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள், பசும்புல், உலர் தீவனம் போன்ற தீவனங்கள் சரியான அளவு உணவு அளிக்கப்பட்டபின், அதில் எந்த அளவு எருமை உட்கொள்கிறதோ அது அதன் ஒரு நாள் உணவூட்டமாகக் கணக்கிடப்படுகிறது.

இளம் எருமையின் ஒரு நாள் தீவனம் அதன் உடல் எடையில் 2.2-2.5 சதவிகிதம் ஆகும். அது சிறிதளவு வைக்கோல், அதிக அளவு பசும்புல் மற்றும் அடர்தீவனங்கள் அடங்கியதாக இருக்கவேண்டும். எருமைகள் அதன் உடல் எடையில் 3 சதவிகிதம் வரை உணவு எடுத்துக் கொள்ளும். தீவனத்தில் வைக்கோல் அதிக அளவு இருப்பதும் புரதம் 6 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் எருமையின் உணவூட்டம் குறையும்.

கறவை எருமைகளின் தீவனப் பராமரிப்பு :

கறவை எருமைகளுக்கு சிறந்த தீவனம் அளிக்கவேண்டும். ஏனெனில் பால் உற்பத்தி என்பது அதிக ஆற்றலை செலவழிக்கும் செயலாகும். அதுவும் முதல் மாத கறவைகள் சரியாகத் தீவனம் எடுக்காவிடில் உடல் எடை குறையும். எருமைகளின் கொழுப்பே பாலாக மாறுகிறது. எனவே புரதம் ஆற்றல், வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியான விகிதத்தில் கலந்து தூய சுவை மிகுந்த தீவனம் அளிப்பதே பால் உற்பத்தி, உடல் எடை, ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிக்க சிறந்த வழியாகும். அட்டவணை 6ல் கறவை எருமைகளுக்குத் தேவையான தீவனத் தேவை பட்டியலிடப்பட்டுள்ளது.

வழக்கமாக பயிர் செய்யும் காலங்களில் மற்றும் மழைக்காலங்களில், தீவனங்கள் அதிகமாக இருக்கும். அதுவே வறண்ட காலங்களில் தீவனம் சரியாகக் கிடைக்காது. எனவே கிடைக்கும் காலங்களில் தீவனத்தை வைக்கோல், தட்டு போன்று பதப்படுத்திப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பால் கறக்கும் கறவை எருமைகளுக்கான தீவனத் தேவை கணக்கீடு :

எருமைகளுக்கென தனித்தீவனப் பட்டியல் ஏதும் இல்லை. எனினும் கீழ்க்கண்ட அட்டவணை 1ல் கறவை எருமைகளுக்கான தீவன அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையானது மாடுகளின் தீவன அட்டவணையை 3ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. எருமையின் தீவன அளவை நிர்ணயிக்க அதன் உடல் எடை மிக முக்கியம். வாரத்தில் மூன்று முறை எருமையின் எடையை அளந்து சராசரி எடையைக் காணுதல் வேண்டும். இதே போல் பால் உற்பத்தி அளவு மற்றும் பாலின் கொழுப்புச் சத்தை 3 முறை பார்த்து சராசரி காணவேண்டும். இவ்வாறு கண்ட உடல் எடை, பால் அளவு, கொழுப்புச் சத்து போன்றவற்றின் அடிப்படையில் தீவன அளவு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எருமையானது மிக அதிக எடையுடன் காணப்பட்டால் கீழ்க்காணும் அட்டவணை அளவில் 10 சதவிகிதம் குறைத்தும், மிகக் குறைந்த எடையுடன் காணப்பட்டால் 10 சதவிகிதம் தீவனம் அதிகமாகவும் வழங்கலாம்.

இவை தவிர சுற்றுப்புறங்களில் வளர்க்கப்படும் பயிர்களையும் தீவனங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு பண்ணையில் வளர்க்கும் தீவனப்பயிர்கள் உலர் எடை அளவு, ஆற்றல், புரதம், போன்றவை மற்றும் கால்சியம், பாஸ்பரஸை ஆய்வகத்தில் ஆய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும்.



Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
எருமை வளர்ப்பு பாகம் - 1

1. அறிமுகம்
2. எருமை மாட்டு இனங்கள்
3. இந்தியாவின் எருமை மாட்டு இனங்கள்

அறிமுகம் :

எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன. அதில் 30 மி. டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது. ஆள் திறன் மற்றும் செலவு குறைவு. எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு இறைச்சிக்கென வளர்க்கப்படும் போது கிடைக்கும் (350 – 450 கி.கி எடை) இறைச்சியானது அதிக இலாபம் தரக்கூடியது.

எருமை மாட்டு இனங்கள் :

முர்ரா :

தோற்றம் : இது அதிகமாக பஞ்சாப், டெல்லியில் காணப்படுகிறது.

சிறப்பியல்புகள் :

* இந்த இனம் பரவலாக ரோடக், ஹீசார் போன்ற ஹரியானாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.

* பாலில் 7 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ளது.

* இதன் உடல் நன்கு பெருத்து, கொம்பு வளைந்து தலை கழுத்துப் பகுதிகள் நீண்டும் மடி பெரியதாகவும் காணப்படும்.

* முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்கள் நல்ல பராமரிப்பில் இது 36-40 மாதத்திலேயே கன்று ஈனும் திறனுடையது.

* அடுத்தடுத்த கன்று இடைவெளி 450-500 நாட்கள்
இது சிறிது குளிர் மிகுந்த கடலோரப் பகுதிகளில் நன்கு வளரும். எனினும் இதன் அதிக உற்பத்திக்காக நாடு முழுவதும் விரும்பி வளர்க்கப்படுகிறது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சுர்தி :

தோற்றம் : குஜராத்

சிறப்புப் பண்புகள் :

* கைரா, பரோடா மாவட்டங்களில் (குஜராத்தைச் சேர்ந்தவை) அதிகம் காணப்படுகிறது.

* இதன் உடல் நல்ல அமைப்புடன் சராசரி எடையுள்ளது.

* கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும்.

* கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும்.

* இவ்வினங்கள் கறுப்பு (அ) காவி கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.

* சராசரி பால் அளவு 1700 கி.கி

* முதல் கன்று ஈனும் வயது 40-50 மாதங்கள். அடுத்தடுத்துள்ள கன்றுகள் 400-500 நாட்கள் இடைவெளியில் கன்று ஈனும். இதன் காளைகள் எளிய வேலைகளுக்கு ஏற்றது.

ஜாப்ரா பாதி :

தோற்றம் :

* குஜராத்தின் கத்தைவார் மாவட்டம்

* இதன் சராசரி பால் அளவு 1800-2700 கிகி

* இதன் பாலில் கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் எருமை மாட்டு இனங்கள் :

1. இனம் : ஜாப்ராபாதி

தோற்றம் : குஜராத்

காணப்படும் மாவட்டங்கள் : கத்தைவார், ஹான்ரேலி, ஜாப்ராபாதி

பரவியுள்ள இடங்கள் : செளராய் ராவின் இனப்பெருக்க இடங்கள்

பயன்பாடு : கறவை

2. இனம் : முர்ரா

தோற்றம் : ஹரியானா, பஞ்சாப்

காணப்படும் மாவட்டங்கள் : ரோடக், ஹிஸ்ஸாக், கர்னல், ஜின்ட், கர்கியான், உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகள், நாபா மற்றும் பாட்டியாலா

பரவியுள்ள இடங்கள் : ரோடக், டெல்ஹி, ஜகன்ளார், மகிம், ஹிசார், பிவானி, ஹன்சி, நங்கோலி.

பயன்பாடு : கறவை

3. இனம் : சுர்தி

தோற்றம் : குஜராத்

காணப்படும் மாவட்டங்கள் : கேடா, வடோடரா

பரவியுள்ள இடங்கள் : குஜராத் முழுதிலும்

பயன்பாடு : கறவை

எருமை மாடுத் தெரிவுகள் :

* இந்தியாவில் முர்ரா, மஹ்சானா போன்ற பண்ணைக்கு ஏற்ற அதிக பால் தரும் இனங்கள் காணப்படுகின்றன.

* வெண்ணெய், நெய் போன்றவை தயாரிக்க எருமை மாட்டின் பால் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் பசுவின் பாலை விட எருமைப் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

* எருமை மாடுகள் நீண்ட நாட்கள் கழித்தே கன்றை ஈனும். 16-18 மாத இடைவெளியில் கன்றுகள் ஈனும் எருமைக் காளைகளுக்கு மதிப்பு குறைவே.

* இது அதிக நார்ச்சத்துள்ள பயிர் கழிவுகளை தீவனமாக எடுத்துக் கொள்வதால் பராமரிப்புச் செலவு குறைவே.

* எருமைகள் எப்போதும் குளிர்ந்து நிலையில் இருக்கவேண்டும். எனவே அடிக்கடி கழுவுதல், நீரில் உலவ விடுதல் அவசியம்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm