Thursday 8 November 2018

கர்ண புறா :

கர்ண புறா என்பது பந்தயங்களில்

பயன்படுத்தப்படும் ஒரு வகை புறா இதன் கண்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் இதை வெள்ளிக்கண் என்பார்கள் , இது இயல்பாகவே கர்ணம் அடித்து பறக்ககுடியவை இவற்றை நன்கு பயிற்ச்சி கொடுபதன் மூலம் பந்தயங்களில் பறக்க விடலாம்.

பந்தய விதி முறைகள் :

* கர்ணபுறா பறக்க விட்டஉடன் மேலே எழுந்து கர்ணம் அடிக்க வேண்டும்

* அப்படியே தொடர்ந்து 5 மணி நேரம் பறக்க வேண்டும்

* 5 மணி நேரத்திற்கு 1 நிமிடம் குறைந்தாலும் அவுட் ல் சேர்கப்படும்

* அதேபோல் கீழே இறங்கும் போதும் கர்ணம் அடித்து இறங்க வேண்டும்

* புறாவின் உரிமையாளர் இரண்டு இடம் காண்பிக்க வேண்டும்

* அதில் ஒரு இடத்தில் புறா வந்து உட்கார வேண்டும் , வேறு இடத்தில் உட்கார்ந்தால் அவுட்ல் சேர்க்கப்படும்

* புறா வீட்டின் அருகாமையிலோ அல்லது தொலைவிலோ பறந்துகொண்டு இருக்கலாம்

* அப்படி தொலைவில் பறந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை புறா வீட்டின் அருகமாயில் வந்து செல்வதை காண்பிக்க வேண்டும்

* அப்படி காண்பிக்காமல் விட்டால் அவுட் ல் சேர்கப்படும் .

* இதில் புறா பறந்த நேரம் மற்றும் அடித்த கர்ணம் ஆகியவறை வைத்து பரிசுகள் வழங்கபடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஹோமர் புறா பந்தயம் :

* புறாக்களில் வேகமாக மற்றும் அதிக தூரம் பறக்கும் திறமை ஹோமர் புறாக்களுக்கு உண்டு

* இவற்றின் முக அமைப்பு அலகின் நுனியில் இருந்து தலை வரை நேர் கோடு போல் சமமாக இருக்கும்

* இதன் கண்களின் நிறம் சிகப்பு , பழுப்பு , வெள்ளை ,மஞ்சள் ஆகியவை கலந்து இருக்கும்

* இதன் கண்ணின் நிற அமைப்பை வைத்து அதன் திறமையை கணக்கிடுவர்

* ஒவ்வொரு ஊரிலும் இதற்கான கிளப் கள் இருக்கும்

* இவ்வகை புறாக்கள் குஞ்சு பருவத்தில் இருக்கும்போதே உரிமையாளர் பெயர் பொறித்த வளையமும் அந்த கிளப் ன் வளையமும் அதன் கால்களில் மாட்டி விடபடுகின்றன

* அது பறக்க ஆரம்பிக்கும்போது (இந்த பருவத்தை பட்டா என்பார்கள் ) முதலில் வீட்டின் அருகில் இருந்து பறக்க விடுவார்கள் அது தன் கூட்டை வந்தடையும்

* பின்பு நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக தூரத்தை அதிகப்படுத்தி பயிற்ச்சி கொடுப்பார்கள்

* இப்படியே 10km , 20km , 50km ,100km, 250km என பயிற்ச்சி கொடுப்பார்கள்

* பிறகு பந்தயத்திற்கு தயாராண புறாக்களை பந்தயத்தின் பொழுது கிளப் ல் ஒப்படைப்பார்கள்

* அதன் கால்களில் கிளப் ல் இருந்து பேண்டு அணிவிக்கபடும் அதன் உள் பகுதியில் ரகசிய எண் பொறிக்கப்பட்டிறுக்கும்

* பிறகு அந்த புறாக்களை பந்தய தூரத்திற்கு தகுந்த ஊர்களில் சென்று பறக்கவிட்டு விடுவார்கள்

* அந்த புறாக்கள் அங்கிருந்து வளர்த்தவர்வீட்டு கூண்டிற்கு வந்தடையும் புறாவின் உரிமையாளர் அதன் காலில் உள்ள பேண்டில் இருக்கும் இரகசிய எண்ணை கிளப்பிற்கு சொல்ல வேண்டும்

* அந்த நேரத்தை வைத்து எந்த புறா முதலில் வந்ததோ அதை வைத்து பரிசுகள் வழங்கப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அலங்கார புறாக்கள்: (Fancy Pigeon)
அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமக விரும்பி வளர்கின்றனர் அவைகளின் வகைகள் பின்வருமாறு..

ஃபேன் டைல் (மயில் புறா) Fantail pigeon :

புறாகளில் ஃபேன் டைல் மிகவும் அழகானவை அவற்றின் வால் தான் அழகு அது எப்போதும் மயில் தோகை விரிப்பது விரித்துகொண்டு இருக்கும் அதனால் தான் இவற்றை மயில் புறா என்பார்கள்.
ஃபேன் டைல் புறாவில் சில வகைகள் உள்ளன அவை :

1. இந்தியன் ஃபேன் டைல்
2. அமெரிக்கன் ஃபேன் டைல்
3. சில்கி ஃபேன் டைல்
4. கரகந்து ஃபேன் டைல்

இந்தியன் ஃபேன் டைல் :

இவற்றிற்க்கு தலையில் ஸ்பைக் போன்ற அமைப்பு இருக்கும் மேலும் கால்களில் பாம்ஸ் என்று சொல்லுவார்கள் (கால் விரல்களில் உள்ள இறக்கைகள்) அது இருக்கும் மேலும் இவை கழுத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும்.

அமெரிக்கன் ஃபேன் டைல் :

இவற்றின் வால் இறகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மேலும் இவற்றிக்கு பெரும்பாலும் பாம்ஸ் காணப்படுவதில்லை அதே போன்று ஸ்பைக்காணப்படுவதில்லை.

சில்கி ஃபேன் டைல் :

இவற்றின் இறகுகள் பிரிபிரியாய் (silky) இருக்கும் ஆகவே இவற்றை சில்கி ஃபேன் டைல் என்பர்

கரகந்து ஃபேன் டைல் :

இவற்றின் வால் இறகுகள் பெரிதாக இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.

ஜாகோபின் புறா : (Jacobin pigeon)

இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் கழுத்தை சுற்றி உள்ள இறகுகள் தான் மேலும் இதன் தலை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் .

கன்னியாஸ்திரி புறா :

கன்னியாஸ்திரி புறாக்கள் ஜாகோபின் புறாக்களை போன்றே இருக்கும் ஆனால் தலையை சுற்றியுள்ள இறகுகள் சற்று குறைவாக இருக்கும்.

சிராஜீ புறா :

சிராஜீ புறாவின் சிறப்பு என்னவென்றால் அதன் கண்களின் கீழே இருந்து வயிறு வரைக்கும் வெள்ளை நிறத்தில் இருக்கும், தலை மற்றும் இறக்கைகள் வேறு நிறத்தில் இருக்கும் இதன் கால்களில் பாம்ஸ் இருக்கும் இந்த புறாவை பெங்குன்யின் புறா என்றும் கூறுவார்கள்.

முஸ்கி புறா :

இவற்றின் சிறப்பு என்னவென்றால் இதன் தலை பெரும்பாலும் வெள்ளை நிறத்திலும் மற்றும் வெள்ளை கலந்த நிறத்திலும் இருக்கும் இதன் தலையில் ஸ்பைக் இருக்கும் இது தன் கழுத்தை எப்போதும் ஆட்டிக்கொண்டே இருக்கும் அதனால் இதை நெக் ஷேக்கர் என்றும் கூறுவார்கள்.

பிரில் பேக் புறா : (Fril Back Pigeon)

இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் இறக்கைகளில் உள்ள இறகுகள் சுருள் சுருளாய் இருக்கும் மேலும் இதற்கு கால்களில் பாம்ஸ் இருக்கும் அதிலும் சுருள்கள் இருக்கும்.

படாங்கு புறா :

இவற்றின் சிறப்பு அதன் மூக்கின் மேல் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு பெரியதாய் இருக்கும் மேலும் இதன் கண்களை சுற்றி சிகப்பு வலயங்கள் காணப்படும்.

கேரியர் புறா :

இந்த புறாக்கள் படாங்கு புறாக்களை போலவே இருக்கும் அனால் சற்று பெரியதாய் ஒல்லியாய் இருக்கும்.

கிங் புறா :

இவ்வகை புறாக்கள் பார்பதற்கு கோழி போன்ற வடிவில் இருக்கும் இது ஒரு அமெரிக்க புறா இனம் ஆகும்.

கட்ட மூக்கு ஹோமர் :

இவற்றின் சிறப்பு என்னவென்றால் இதன் அலகு சிறியதாய் இருக்கும் இவ்வகை புறாக்களும் ஹோமர் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment