Tuesday 13 February 2018

2 ஆயிரம் பனைமரங்கள் இலக்கு! அசத்தும் மேலூர் இளைஞர்கள்!
விவசாயம் செழித்துகிடந்த மதுரை மேலூர் பகுதியில், கிரானைட் எனும் ஆபத்துகள் வந்த பின் விவசாயம் பின்னுக்கு தள்ளப்பட்டது . விவசாயம் காக்கப்படவேண்டும் என அப்பகுதிக்கு வர இருந்த ரயில்வே திட்டங்களை கூட அப்பகுதி மக்கள் எதிர்த்தனர் . மேலூர் சுற்றுப்பகுதியில் கிரானைட் குவாரிகள் சூழ்ந்ததால் விவசாயம் குறைந்தது வறட்சியின் கையோ ஓங்க தொடங்கியுள்ளது . இந்த புரிதலை ஏற்றுக்கொண்ட அப்பகுதி இளைஞர்கள் மேலூர் இளையதளைமுறை என்ற அமைப்பை உருவாக்கி மரங்களை நட்டு வருகின்றனர் இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஹிருது பிரபு அவர்களிடம் பேசினோம், "நாங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பில் இருந்தே இயற்கையை காப்பாற்ற வேண்டும் என நினைத்தது சின்னச்சின்ன இயற்கை சார்ந்த செயல்பாடுகளை செய்துவந்தோம். தற்போது அது பெறும் சக்தியாக உருவாகி பல இளைஞர்கள் பணியாற்ற களம் இறங்கியுள்ளனர். பாசன கால்வாய்களை சுத்தம் செய்வது , கருவேல மரங்கள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அழிப்பது, பொது இடங்களை சுத்தம் செய்வது என்று சமூக பணிகளை செய்துவருகிறோம்.

தற்போது, இரண்டாயிரம் பனைமரங்களை மேலூர் பகுதியில் நட உள்ளோம் பாரம்பரிய மரமான பனையை வளர்த்து எங்கள் பகுதி நீர் ஆதாரத்தையும், விவசாயத்தை மீட்டெடுக்க உள்ளோம் . மழை காலம் என்பதால் தற்போது பணியை விரைவு படுத்தியுள்ளோம் இன்று இராசினாபட்டி கிராமத்தில் உள்ள பிறார்குடி கண்மாயில் 90 பனைவிதைகளை நட்டுள்ளோம் தொடர்ச்சியாக பல இடங்களில் பனைவிதைகளை சேகரித்து நடவுள்ளோம். இதில், எங்களுக்கு பெரிய அளவு பணம் காசுகள் தேவையில்லை எளிமையான முறையில் விஸ்வரூப வெற்றியை காணுவோம், எங்கள் மேலூர் இளையதலைமுறை அமைப்பில் எந்த ஒரு ஜாதி, மத ,கட்சி அடையாளமின்றி ஒரு நல்ல நோக்கை மட்டும் மையப்படுத்தி செயல்பட்டு வருகிறோம் ஆர்வமுள்ளவர்களை கண்டிப்பாக எங்கள் பணியில் சேர்த்துக்கொண்டு சேவையாற்றுவோம்" என்றார் .

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete