Sunday 11 February 2018


கிருஷ்ணகிரியில் முதல் முறையாக கோதுமை சாகுபடி அமோகம் :


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதல் முறையாக பயிரிடப்பட்டுள்ள கோதுமை, செழிப்பாக வளர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர், பச்சையப்பன் கூறியதாவது:கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நெல், சிறுதானியங்கள், பயிறுவகை பயிர்கள், எண்ெணைய் வித்துக்கள் ஆகியவை, 22 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.வரும்காலத்தில், பனியை தாங்கி வளரும் மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்ய, வேளாண் துறை மூலம் முடிவெடுக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோதுமை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளை அணுகி, சாகுபடிக்கு தேவையான கோதுமை விதைகள் பெறப்பட்டன. அவை, விவாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொத்தபேட்டா உள்ளிட்ட ஐந்து கிராமங்களில், ஒரே நாளில் விதைப்பு மேற்கொள்ளப்பட்டது. மழையளவு குறைந்த போதிலும், பனித்துளிகளை கோதுமைப்பயிர்கள் உள்வாங்கி, மிகவும் செழிப்பாக வளர்ந்துள்ளன.இந்த கோதுமையை, அறுவடைக்கு பின், இயந்திரம் மூலம் ரவையாக மாற்றிக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கோதுமை சாகுபடி செய்த கொத்தபேட்டாவை சேர்ந்த விவசாயி காமராஜ் கூறியதாவது :

பல ஆண்டுகளாக, நெல் மற்றும் ராகி பயிர் செய்து வருகிறேன். மழை குறைவு காரணமாக, மாற்றுப்பயிராக என்ன பயிர் செய்யலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் கேட்டபோது, கோதுமை விதையை, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருந்து வரவழைத்து, வழங்கினார்.கடந்த நவ., 15ல், கோதுமையை பயிர் செய்தேன். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், கோதுமை பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளது. இன்னும், 15 நாளில் அறுவடைக்கு தயாராகி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் முதல்முறையாக கோதுமை பயிரிட்டுள்ளதால், இதைப்பற்றி தெரிந்து கொள்ள, தினமும் காமராஜின் வயலுக்கு விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete