Wednesday 7 February 2018

வெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு பாகம் - 6

வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள் :

1. வெள்ளாடு வளர்ப்பு
2. வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள்
3. வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள்
4. நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல்
5. இனவிருத்தியின் போது கவனித்தல்
6. கர்ப்பக்கால கவனிப்பு
7. சந்தைப்படுத்துதல்
8. கேள்வி பதில்கள்

வெள்ளாடு வளர்ப்பு :

நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள் மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள், வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும், பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. திருவிழாக் காலங்களில் கடவுள் முன், பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள் :

* வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.

* சிறிய உடலமைப்பு, மந்தமான இயல்பு கொண்டவையால், கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும், பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு.

* வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது.

* வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவை. வெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன.

* வறட்சி நிலவும் பகுதிகளில், வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.

* வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில், ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை.

* பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றது. இவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள், களைகள், பயிர்க் குப்பைகள், மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை.

* சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில், வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்து, சுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது.

* ஆடுகளை வெட்டி, இறைச்சிக்குப் பயன்படுத்துவதில், எந்த வித சமூகத்தின் எதிர்ப்போ (அ) தடையோ நம்நாட்டில் இல்லை.

* சுற்றுப்புற சூழலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு ஆடு வெட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல், இறைச்சியை கொண்டு செல்லுதல் , ஆகிய செயல்கள் நடைபெறுகிறது.

* வெள்ளாட்டு இறைச்சி குறைந்த கொழுப்பு கொண்டது. வெயில் காலங்களில் குறைந்த அளவு சக்தி அளிக்கும் உணவாக மக்கள் விரும்புகிறார்கள். சில சமயங்களில் அதிக மென்று உண்ணும் தன்மையை கொண்டு இருப்பதால் (ஆட்டு இறைச்சி செம்மறியாட்டு இறைச்சியை விட) மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.

* வெள்ளாட்டுப் பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது.

* வெள்ளாட்டுப் பால் சாப்பிடும் உணவு மற்றும் ஜீரணச் சக்தியை அதிகப்படுத்துகிறது. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் அலர்ஜி எதுவும் தராது. இதில் பூஞ்சைக்கு எதிராகவும்) பாக்டீரியாவுக்கு எதிராகவும் உள்ள நன்மைகள் இருப்பதால் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

* பகுதி வறண்ட நிலப்பகுதிகளில் செம்மறியாட்டை விட வெள்ளாடுகள் 2.5 அளவு அதகிமாக புற்களை உண்கின்றன.

* ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

* வெள்ளாடுகள் ஒரு நடமாடும் குளிர்ப்பதனப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் அதிகளவு பால் தருபவையாகவும், சேமித்து வைக்கவும் முடிகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள் :

கொட்டில் மேலாண்மை :

* தரையிலிருந்து சற்றே உயரமான, உலர்வான இடத்தில், கொட்டில் அமைக்கப்படும்.

* நீர் தேங்காத, சொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும்.

* தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில், தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும்.

* குளிர்வான ஹிமாலாய பகுதிகளில் கொட்டிலின் தரைப்பகுதி மரத்தினால் அமைப்பது நல்லது.

* கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

* ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும்.

* பெண் ஆடுகளை குழுவாக, ஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம்.

* வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும்.

* ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும்.

* எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

* அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது.

வெள்ளாட்டு இனங்களை தேர்வு செய்தல் மற்றும் அதன் மேலாண்மை :

* வங்கி கடன் கிடைத்தவுடனேயே நல்ல நிலைமையில் சிறப்பாக உள்ள இனங்களை வாங்க வேண்டும்.

* நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல உடற்கட்டுன் உள்ள வெள்ளாடுகளை கால்நடை மருத்துவர் / வங்கி தொழில்நுட்ப அலுவலர் ஆலோசனை பெற்று வாங்க வேண்டும்.

* நல்ல இனவிருத்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ள ஆடுகளை வாங்க வேண்டும்.

* புதிதாக வாங்கிய ஆடுகளை குறிப்பிட்ட அடையாளக் குறியிட வேண்டும்.

* புதிதாக வாங்கிய ஆடுகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும்.

* புதிதாக வாங்கிய ஆடுகளை தனியே 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின் கொட்டிலில் அடைக்க வேண்டும்.

* எதற்கும் பயன்படாத ஆடுகளை சரியாக கணித்து அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக ஆடுகள் வாங்கி கொட்டிலில் அடைக்க வேண்டும்.

* அதிக உற்பத்திக்காக ஆடுகளை 8-9 மாத இடைவெளியில் இனவிருத்தி செய்யலாம்.

* 6 வருடம் மற்றும் அதற்கு மேலாண வயதுடைய ஆடுகளை அகற்றிவிட வேண்டும்.

* வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

தீவன மேலாண்மை :

* மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை பராமரிக்க வேண்டும்.

* தங்களுடைய பண்ணையிலிருந்து (அ) சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனபயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும். நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும், பகுதி புற்கள் /இளம் பசும் இலைகளாகவும் அளிக்கலாம்.

* நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுது, அடர்தீவனங்களை மாற்றாக அளிக்கலாம்.

* 5 வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம். பின் குட்டிகளுக்கு ஆரம்ப உணவு அளிக்கலாம்.

* பயிறு வகையைச் சேர்ந்த பசும்தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம்.

* எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.

* இனப்பெருக்க காலத்தின் போது, பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும்.

* பரிந்துரைக்கப்பட்ட படி, ஊட்டச் சத்து தேவைகளை அளிப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல் :

* குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல், அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* ஏதாவது உடல்நிலை சாயில்லாதவாறு தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

* நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

* ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால், மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும்.

* ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும்.

* சுத்தமான, மாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும்.

* தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்.

இனவிருத்தியின் போது கவனித்தல் :

* 2 வருட காலங்களில் 3 குட்டிகளை இடுமாறு திட்டமிட்டப்படி சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும்.

* 25 பெண் ஆடுகளுக்கு ஒரு ஆண் ஆடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* இனவிருத்தி செய்ய முடியாத ஆடுகளைக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி அகற்றிவிட வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கர்ப்பக்கால கவனிப்பு :

கர்ப்பக்காலத்தின் முன்னேற்றக் காலத்தில், பெண் ஆடுகளை பிரசவிக்கும் கொட்டில் அல்லது கொட்டிலிலேயே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குட்டி பிறந்தவுடன் 2 நாட்களுக்கு, பெண் ஆடுகளுக்கு இளம் சூடான உமித்தூள் பரப்பி வைத்திருக்க வேண்டும்.

குட்டிகளை கவனித்தல் :

* புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும்.

* முதல் 2 மாதங்களுக்கு, குட்டிகளை மோசமான காலநிலைகளிலிருந்து பாதுகாத்து வைக்க வேண்டும்.

* முதல் 2 வாரங்களுக்கு குட்டிகளுக்கு கொம்பை அகற்ற வேண்டும்.

* நல்ல மட்டன் உற்பத்திக்காக ஆண் குட்டிகளுக்கு விறைநீக்கம் செய்ய வேண்டும்.

* பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

* 8 வாரம் இருக்கும் போது குட்டிகளை பால்குடி மறக்க செய்ய வேண்டும்.

சந்தைப்படுத்துதல் :

சதைப்புள்ள, குண்டான குட்டி ஆடுகள், அதனுடைய புழுக்கை, வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம், தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம். அதனால் ஆடு வெட்டுமிடம் வசதி, அல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவில் தேவைப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

கேள்வி பதில்கள் :

1. வெள்ளாடு வளர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

- வெள்ளாட்டை விற்பது எளிது. வெள்ளாட்டுப் பாலுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

2. வெள்ளாடு வளர்ப்பு பற்றிய பயிற்சியினை எங்கு பெறலாம்?

- VC&RI, நாமக்கல், MVC, சென்னை, உள்ளுர் உழவர் பயிற்சி மையங்கள், அரசு கால்நடை மருந்தகங்கள்

3. ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அளவில் எத்தனை வெள்ளாடுகள் வளர்க்கலாம்?

- 40 பெட்டை மற்றும் 2 கிடாக்கள்

4. புதிதாக பிறந்த வெள்ளாட்டுக் குட்டியின் பராமரிப்பு முறைகள் என்ன?

- தாய், சேய் இணைப்புத் திசு ஆடை அகற்றல், தொப்புள் கொடி வெட்டுதல், சீம்பால் புகட்டுதல்.

5. வெள்ளாட்டுக்குட்டியின் பராமரிப்பு முறைகள் என்ன?

- நன்கு பாலூட்டுதல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் அடர்தீவனம் கொடுத்தல்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete