Tuesday 18 December 2018

மாப்பிள்ளை சம்பா :

மாப்பிள்ளை சம்பா 160-165 நாள் பயிர், 6 அடி வரை வளர கூடிய பயிர்.

பெயர் காரணம் :

பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா (Samba Groom) என்று பெயர் இட பெற்றது.

தனித்துவம் :

இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional) நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம் (Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity Power). இதில் புரதம் (Protein), நார்சத்து (Fiber) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது.

மாப்பிள்ளை சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes) நன்மை தரும்.

* உடலுக்கு வலுவைத் (Body strength) தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.

* அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் (Nerves) பலப்படும்.

* உடல் வலுவாகும் (Body Strength).

* உடலை பலபடுத்தும், ஆண்மை (Masculinity) கூடும்.

* குழந்தைகளின் மூளை திறன் அதிகரிக்கும்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம் :

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment