Monday 31 December 2018

உடன்குடி கருப்பட்டி :

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி (Palm Jaggery) சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில் (Thiruchendur) இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் (Palm trees) அடர்ந்த சாலையில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம். இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி (Palm Jaggery) என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும் எதிலும் சர்க்கரை என்றாகிவிட்ட சூழலில் கருப்பட்டி தேடி செல்வது என்பது கேலிகூத்து என்றுதான் நினைத்தேன், ஆனால் மக்கள் இன்றும் இதன் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்தது . இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும் (Medicinal Ingredient), சர்க்கரைக்கு மாற்றாகவும் (Sugar Supplement) பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா?

கருப்பட்டி பயன்கள் :

* பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் (Palm Jaggery), உளுந்தையும் (Black Gram) சேர்த்து உளுந்தங்களி (Ullanthankali) செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

* சீரகத்தை (Cumin Seeds) வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன்(Dry Ginger Palm Jaggery) சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

* ஓமத்தை (Oregano) கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை (Gastric Problems) நீங்கும்.

* குப்பைமேனிக் கீரையுடன் (Indian Nettle) கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல் (Dry cough), நாள்பட்ட சளித்தொல்லை (Common Cold) நீங்கும்.

* ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

* காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும்(Diabetic Patients) கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

* இதில் சுண்ணாம்புச் சத்தும்(Calcium), நோய் எதிர்ப்பு (Immune Power) சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

* பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் (sweet toddy) இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் (Palm Jaggery) என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

* கருப்பட்டியுடன் நன்கு விளைந்த தேங்காயை (Coconut) சேர்த்து உண்ணும் பொழுது உடல் வலிமை பெரும்…. கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்யும்.

* வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

* கருப்பட்டியில் சுண்ணாம்பைக்(Slaked Lime) கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

* கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து (Blood Purification) உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.

* மேனி பளபளப்பு பெறும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும் (Teeth) , எலும்புகளும் (Bones) உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

சுக்கு கருப்பட்டி (Dry Ginger Palm Jaggery) :

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு (Uterus) மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும்.

கருப்பட்டி காபி :

சாதாரணமாக சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தி பால் சேர்க்காமல் டீ (Black Tea) அல்லது காபியை (Black Coffee) உட்கொள்ளலாம். கருப்பட்டி காபி கடைகள் அங்காங்கே உள்ளன. வீட்டில் நாம் எளிய முறையில் தயார் செய்து உட்கொள்ளலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment