Sunday 30 December 2018

வெள்ளைப்பொன்னி அரிசி :

வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிலிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும்.

120 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி, ஜூலை மாதம் முதல், ஆகஸ்ட் மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான பின் சம்பா (தாளடி) பருவத்திலும், சாகுபடி செய்ய தகுந்த நெல் இராகமாகும்.

பெயர் காரணம் :

சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட சோறாகின்றது. இதனால் விவசாயிகள் இந்த ரகத்தை முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி என்று அழைக்கின்றனர்.

தனித்துவம் :

தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று…தமிழகத்தில் பச்சரிசி தரும் நெற்களில் வெள்ளைப் பொன்னி ஒரு சிறந்த நெல் வகையாகும்…இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது.  இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. வெள்ளைப் பொன்னி ரகம் இக்காரணத்தால் சாகுபடி செய்யப்படுகின்றது. அரவையில் குருணை விழுந்தாலும் வெள்ளைப் பொன்னி தொடர்ந்து சாகுபடியில் உள்ளது. இந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர். நாற்றின் வேர்கள் களர் தன்மையைத் தாங்கி நாற்று பச்சைகட்டி விடுகின்றது.

வெள்ளைப் பொன்னி பயன்கள் :

* சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் வைக்கோலும் (Straw)போடப்படுகிறது.

* உடல் வலிமை (Strength) பெரும்.

* உடல் சுறுசுறுப்பாக (Active) இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment