Sunday 23 December 2018

காட்டுயானம் :

காட்டுயானம் ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது. இது 160 நாள் பயிர்.

தனித்துவம் :

காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.

ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* நீரிழிவு நோய்க்கும் (Diabetis) நல்ல பலன் அளிக்கக்கூடியது.

* புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.

* ஆண்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.

* பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.

* விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

* பசியைத் தாமதப்படுத்தும்.

* இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment