Wednesday 26 December 2018

கருங்குறுவை அரிசி :

கருங்குறுவை தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, தமிழ்நாடு, கருநாடகம், மற்றும் கேரள மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

தனித்துவம் :

கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, டிசம்பர் 15 - மார்ச்சு 14, மற்றும் சூன் 1 - ஆகத்து 31 வரையான மாதகாலம் சிறந்த சாகுபடி காலமாக உள்ள இந்த நெல் இரகம், 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. தமிழகத்தில் டிசம்பர் - சனவரியில் தொடங்கும் நவரைப் பருவத்திலும், சூன் - சூலையில் தொடங்கும் குறுவைப் பருவத்திலும் நடவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.

சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக், இந்த கருங்குறுவையின் அரிசிப் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன், நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது. கருங்குறுவை நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் பூமியில் கிடந்தாலும், மக்கிப்போகாமல் ஒரு ஆண்டுக்குப் பிறகும் முளைக்கும் திறன் உடையது.

கருங்குறுவை அரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள் :

* கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, அதன் வீரியம் அதிகரிப்பதுடன் ‘கிரியா’ சக்தியின் ஊக்கியாகவும் செயல்படுகிறது.

* நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசிக் கஞ்சியை குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் குணமடைவதாக கூறப்படுகிறது.

* கருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால், மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை) (lehyam) செய்யப்படுகிறது, அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் (Filariasis) குணப்படுத்தும் பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.

* கருங்குறுவையின் அரிசியில் “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றவைகளைப் போக்கும் சக்தி உடையது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும் அருமருந்தாக உருவாகிறது.இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா) மட்டுப்படுவதாக கூறப்படுகிறது.

* மிகவும் இனிப்புச்(Sweet) சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த (Bile) வெப்பத்தையும் போக்கக் கூடியதாகவும், மனித உடலுக்குச் சுகத்தைக் கொடுக்க வல்லதாகவும் உள்ளது.
* இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு (Dysentry) போன்றவைகளைப் போக்கும்.
* இரவில் நீரூற்றிய சோற்றைப் பழையது என்பார்கள். இந்தப் பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடுச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் ஒளி உண்டாகும் என்றும், மற்றும் வெறிநோய் (Insanity) முற்றிலும் நீங்கும் எனவும் கருதப்படுகிறது.

* பழையச் சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

* “மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும் பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார். “
* மேற்கூறிய பாடலின் பொருளானது, மணக்கத்தை அரிசி, வாலான் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும் புண்ணையும் சிறுநஞ்சுகளையும் நீக்கும்.

* கருங்குறுவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப்போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது.

* இதன் நெல் தானியமணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

* அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment