Tuesday 25 December 2018

கிச்சலி சம்பா அரிசி :

கிச்சலி சம்பா அல்லது கிச்சடி சம்பா இது நூற்று முப்பத்து ஐந்து நாளில் அறுவடைக்கு வரக்கூடிய இவ்வகை நெற்பயிர்கள், நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது.

தனித்துவம் :

கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. வெண்ணிறமாகக் காணப்படுகிறது பலனளிக்காத வெள்ளை (white), மற்றும் சன்ன (மெலிந்த) (Thin) இரக அரிசியை விரும்பிச் சாப்பிட நாம் பழகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரோக்கியத்துக்கு சத்து மிகுந்த மோட்டா (தடித்த) இரக அரிசியைத் தவிர்த்து, மெருகேற்றல் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நிற நெல்லில், மற்றும் வெள்ளை அரிசியுடைய இந்த நெல் இரகம், மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியில் பயிரிடப்படுகிறது. மழை வெள்ளத்திலும் ஓரளவு தாக்குப்பிடித்து, சாயும் தன்மை கொண்டதாக இருப்பினும் அறுவடைக்கும், நெல்லுக்கும் எவ்வொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கிச்சிலி சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி (Immune power) அதிகரிப்பதாகவும்.

* மேலும், இதன் சோற்றைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் (Body Wealth), உடல் பலமும் (Body Strength) உண்டாகும்.

* இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாகக் கூறப்படுகிறது.

* அதுமட்டுமின்றி, அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி இரகமாக உள்ள இது, சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது.

* இது, சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment