Wednesday 26 December 2018

காட்டுப் பொன்னி அரிசி :

பாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் வயதுடையது. நெல்லும் அரிசியும் சிவப்பு நிறத்தில் இருக்கும், மோட்டா ரகம். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.

தனித்துவம் :

காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட (Inter cropping) சிறந்த ரகம். மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. 140 நாள் வயதுடைய இவ்வகை நெல்லும் அரிசியும், சிவப்பு நிறத்தில் உள்ள மோட்டா (தடித்த) ரகமாகும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், ஒரு மாதம் வரையிலும் தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்.

ஏக்கருக்கு சுமார் 20 மூட்டைவரை (75 கிலோ) மகசூல் கிடைக்கக்கூடிய இந்நெல் இரகம். இடுபொருளான அடியுரம், மேலுரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவைகள் தேவையற்றதாக உள்ள இவ்வகை நெற்பயிருக்கு, பூச்சி தாக்குதல், மற்றும் களை தொந்தரவு போன்றவை இல்லை என கருதப்படுகிறது. அறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் கூடி, நுண்ணுயிரின் வளம் பெருகுவதாகவும், மேலும் மண்புழு (Earth worm) எண்ணிக்கை அதிகரித்து மகசூல் (Yield) பெருக்குவதாகவும் கூறப்படுகிறது.

காட்டுப் பொன்னி உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* காட்டுப் பொன்னியின் அரிசியில் நார்ச்சத்து (fiber), புரதச்சத்து (Protein), மற்றும் கால்சியம் (Calcium)அதிகம் உள்ளது .இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும் எனப்படுகிறது.

* மேலும் நெற்பயிரின் வைக்கோலைத் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி (Immune power) அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment