Wednesday 19 December 2018

குடவாழை அரிசி :

குடவாழை என்றழைக்கப்படும் இந்நெல் இரகம், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது.

அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும் குடலை சுத்தப்படுத்துவதாலும் இதற்குக் “குடைவாழை” என்று பெயர்.

தனித்துவம் :

நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழமையான அரிசி வகையாகும். நூற்றி முப்பது நாள் வயதுடைய இந்த நெல் ரகம், மோட்டா ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி. உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற இரகமாகும். தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .

இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது.

கிடை அவசியம் :

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நெல் இரகம், விதைபிற்கு பின் ஒரு முறை மழை பெய்துவிட்டால் போதும், மூன்று நாட்களில் விதை முளைத்து நிலத்தின் மேல் பச்சைப் போர்வை போற்றியது போல் காட்சியளிக்கும். மிக வேகமாகவும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கியும் வளரும் தன்மை கொண்ட இந்த இரகத்துக்குக் கோடையில் ஆடு, மாடு கிடை அமைத்து நிலத்தை வளப்படுத்துவது அவசியம்.

குடவாழை உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* உடலுக்குத் தெம்பு தந்து மருந்தாகும் குடைவாழை.

* உடல் பலம் & தேக பளபளப்பு (Body Strength & Skin Glow) உண்டாகும்.

* அஜீரணத்தை (Indigestion) போக்கும்.

* தோல் வியாதிகளை(Skin Diseases) நீக்கும்.

* சர்க்கரை நோய் (Diabetes) வராமல் தடுக்கும்.

* குடல் (Intestinal) சுத்தமாகும்.

* வயிறு (Stomach) பிரச்னை குணமாகும்.

* மலத்தை இழகச் செய்து மலச்சிக்கல் (Constipation) இன்றி பாதுகாக்கும்.

* புரதம் (Protein), நார் (Fiber), தாது (Minerals) மற்றும் உப்புச்சத்து (Salt) இந்த அரிசியில் அதிகம் உள்ளது, சர்க்கரை (Sugar level) அளவை குறைத்து உடலை உற்சாகமாக (Active) வைக்க உதவுகிறது.

* அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் (அரிசி) இரகமான இது, பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். காலை, மதியத்துக்கு இடையே ஒரே வேளை பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை தரக்கூடியது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment