Monday 24 December 2018

குள்ளக்கார் அரிசி :

தனித்துவம் :

பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ளது. மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.

ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும்.

குள்ளக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant), துத்தநாகம் (Zinc), இரும்புச் சத்துக்கள் (Iron) நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் (Cholesterol) கரைக்கிறது.

* நரம்புக்கு (Nerves) வலு சேர்க்கும்.

* உடலுக்கு வலிமை (Body strength) சேர்க்கும்.

* மூளை (Brain) சுறுசுறுப்பாகும்.

* குழந்தைகளின் (Child growth) வளர்ச்சிக்கு உதவும்.

* செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.

* உடல் எடை குறைக்க (Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.

* இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.

குள்ளக்கார் அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி :

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடிய பாரம்பர்ய அரிசியில் செய்யப்படும் இனிப்பு தோசை ரெசிபி இது.

பாரம்பர்ய அரிசிகளின் சுவையே தனி. அதன் சத்துகளோ ஏராளம். குழந்தைகளுக்கு சத்தான உணவுத் தரவேண்டியது பெற்றோரின் கடமை. அவ்வகையில் எப்போதும் செய்யும் தோசைக்கு பதிலாக பாரம்பர்ய அரிசியில் செய்யப்பட்ட குள்ளக்கார் அரிசி தோசை குட்டீஸ் ஸ்பெஷல்தான்.

குள்ளக்கார் இனிப்பு தோசை :

தேவையானவை :

குள்ளக்கார் அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – ¼ கப்
அறிந்த பேரீச்சம் பழம் – 20
பொடித்தப் பனங்கற்கண்டு – 10 ஸ்பூன்
ஊறவைத்த உலர் திராட்சை – 25
தேன் – 5 ஸ்பூன்
வறுத்து பொடித்த முந்திரி – 20
பசு நெய் – தேவையான அளவு

செய்முறை :

* குள்ளக்கார் அரிசி, பருப்பை தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊற வைத்த அரிசி, பருப்பை நன்றாக அரைக்கவும்.

* தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 10 மணி நேரம் மாவைப் புளிக்க விடவும்.

* மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு முன் பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து மாவைக் கலக்கவும்.

* பேரீச்சம் பழத்தைக் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய் விடவும். வெந்ததும் தோசை மேல் கலந்து வைத்த நட்ஸ் கலவையை ஒரு பாதியில் பரப்பவும்.

* அதில் அரை ஸ்பூன் தேன் விட்டு மறு பாதி தோசையை மூடி விடவும்.

* சூடாக சாப்பிடவும் ருசியாக இருக்கும். அதுபோல ஆறினாலும் ருசியாக இருக்கும்.

* இந்த குட்டீஸ்கான இனிப்பு தோசை குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாறிப் போகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment