Thursday 2 March 2017

பிறந்த ஆட்டுக்குட்டிகள் பராமரிப்பு :


1. ஆட்டுக்குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் நாசித்துவாரத்தில் ஏதேனும் அடைப்பிருந்தால் அதனை உடனடியாக நீக்கி அவை எளிதில் மூச்சுவிட வழிவகை செய்ய வேண்டும்.

2. தொப்புள் கொடியின் மீது டிங்சர் அயோடின் மருந்தினைத் தடவி அதனை நுண்கிருமிகள் தாக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. மூன்று அல்லது நான்கு குட்டிகள் ஈன்ற ஆடுகளில் எல்லாக் குட்டிகளுக்கும் போதிய பால் அளிக்க இயலாது. அத்தகைய சூழ்நிலையில் குட்டிகளுக்கு பால் புட்டிகளைக் கொண்டோ அல்லது பாத்திரத்தில் பாலை ஊற்றியோ குடிக்கச் செய்ய வேண்டும்.

4. வயதான பெட்டை ஆடுகள் பிறந்த தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதில் ஆர்வமின்றி காணப்படும். அச்சமயங்களில் அவற்றை மடக்கிப் பிடித்து குட்டிகள் சீம்பாலூட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

5. முதல் இரண்டு முதல் மூன்று வார வயதுடைய குட்டிகளுக்கு நாள்தோறும் 900 மில்லி முதல் 1 லிட்டர் வரை பால் கிடைக்கச் செய்ய வேண்டும். இதனை இரு வேலையாகக் கொடுக்கலாம். மூன்று முதல் நான்கு மாத வயதானக் குட்டிகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.

6. குட்டிகள் நன்கு ஓடி விளையாடும் வகையில் போதிய இடவசதி செய்து தரப்பட வேண்டும். மூன்று மாத வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து வளர்க்கலாம். ஆல்லது தாயுடன் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment