Tuesday 28 March 2017

சீமை வாத்து இனங்கள் :


கூஸ்வாத்து, பங்களாவாத்து என்றழைக்கப்படும் சீமைவாத்து ஒன்பது மாத வயதில் ஏழு முதல் ஒன்பதுகிலோ உடல் எடை அடையும் தன்மை பெற்றுள்ளது. கோழி மற்றும் வாத்துகளில் உள்ளது போல் அல்லாமல் சீமைவாத்துகளில் ஒருசில இனங்கள் மட்டுமே இன்று காணமுடிகின்றது. சீமைவாத்துக்களின் நிறத்தைக் கொண்டும், உடல் எடையைக் கொண்டும் அவை பல இரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒரு சில கிழே விவரிக்கப்பட்டுள்ளன. பலவகையான நிறங்கள் கொண்ட வாத்துகள் எம்டென் மற்றும் ட்வ்லுஸ் என்ற இனங்களின் கலப்பினமாக கருதப்படுகின்றன. இந்த வ்கை சீமைவாத்துகள் முட்டையிடும் பருவகாலத்தில் 30-40 முட்டைகளும், ஒரு ஆண்டு காலத்தில் 80-120 முட்டைகள் இடும் திறன் பெற்று உள்ளதாக அறிகிறோம். சீமைவாத்து தன் முட்டைகளைத் தானே அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றுள்ளன.

சீமைவாத்துகளின் முக்கிய இனங்கள் :

எம்டென் :

பத்தொன்பதாவது நூற்றாண்டில் எம்டென் வகை சீமைவாத்து ஜெர்மனி நாட்டிலிருந்து பல நாடுகளூக்கு எடுத்து சென்றூ வளர்க்கப்பட்டு வருகிறது.இந்த இரக சீமைவாத்து வெண்மை நிறமாக இருக்கும். வளர்ந்த ஆண் வாத்து 13.6 முதல் 15.4 கிலோ எடையும், பெண் வாத்து 9.1 -10 கிலோ எடையும் பெறுவதாக 1929ஆம் ஆண்டிலேயே கணக்கெடுத்திருக்கிறார்கள். முட்டையிடும் திறன் குறைவாகவே காணப்படுகிறது.

டெளலெளஸ் :

டெளலெளஸ் சீமைவாத்துக்கள் தாயகம் தெற்கு பிரான்ஸ் ஆகும். நிறம் பழுப்பு. ஆண்வாத்தின் எடை 12.7-13.6 கிலோ எடையும், பெண்வாத்தின் எடை 9.1-10 கிலோ கொண்டதக இருக்கும். முட்டை இடும் திறன் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

பில்கிரிம் :

இந்த இன வாத்துக்களின் தாயகம் பிட்டன் ஆகும். இவைகளைக் கிருத்துவ மத பாதிரிகள் பிரிட்டன் நாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு எடுத்து வந்ததாக அறியப்படுகின்றது. இவ்வகை வாத்துக்களுக்கு பில்கிரிம் என அமெரிக்க பெயரிட்டதாகவும் தெரிகிறது. ஆண்வாத்தின் ந்றம் வெண்மையாகவும் ஒருசில இறகுகள் பழுப்பு நிறத்துடன் காணப்படும். பெண்வாத்தின் கழுத்து மற்றும் வயிறு வெண்மையாகவும், இறக்கை பழுப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. ஆண்வாத்தின் கண் ஊதா நிறமாகவும், பெவாத்தின் கண் சிவப்பு டன் பிரெளன் நிறம் கலந்தவாறு இருக்கும். வளர்ந்த ஆண்வாத்தின் எடை 6.4 கிலோவாகவும், பெண்வாத்தின் எடை 5.9 கிலோவாகவும் இருக்கும். குஞ்சு பொரித்தவுடன் ஆண்வாத்துக்கள் வெண்மை நிறத்துடனும், பெண்வாத்துக்கள் பழுப்பு நிறத்துடனும் இருப்பதால் பால் இனத்தை பிரிப்பது இவ்வகையில் மிகவும் எளிதாக உள்ளது. ஆராய்ச்சியில் தீவிரம் காட்டாததாலும், இனவிருத்தி முறைகளை அதிகமாக கடைபிடிக்காததாலும் இவ்வகை வாத்துக்கள் தற்சமயம் அதிகமாக எந்த நாட்டிலும் வளர்ப்பதாக தெரியவில்லை. எனினும் இதன் கலப்பினங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

பஃப் :

இவ்வகை வாத்துக்கள் மிதமான எடை கொண்டவை. ஆண் வாத்தின் எடை 8.6கிலோவும், பெண்வாத்தின் எடை 7.2 கிலோவும் இருக்கும்.

சைனீஸ் :

சைனீஸ் வாத்தின் தாயகம் சைனா, சைபீரியா, மற்றும் வட இந்தியா ஆகும். இந்த ரக வாத்துக்களை நாப், ஸ்பானிஷ், பாலிஷ், மங்கோலி, சைபீரியன், கினி, மற்றும் ஸ்வான் கூஸ் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வகைவாத்துக்கள் ஒரு ஆண்டில் 140 முட்டைகள் இடும் திறன் உள்ளது. உடல் வெளிர் சிவப்பு நிறத்துடன் இறக்கைகளின் ஓரம் வெள்ளை னிறத்துடன் இருக்கும்.தலை, கழுத்து மற்றும் முதுகு அடர்பிரெளன் நிறத்துடன் காணப்படுகிறது. கால்கள், அலகு மற்றும் தலைக்குமிழ் ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும். ஆறு முதல் எட்டு வார வயதில் ஆண்வாத்து குஞ்சுகளின் தலைக்குமிழ் அளவில் பெரிதாக வளர்ந்து விடுவதைக் கொண்டு பாலினத்தைப் பிரித்து விடலாம்.ஆண் வாத்து 4.5கிலோ எடையும் பெண்வாத்து 3.5 கிலோஎடையும் கொண்டிருக்கும். இவ்வகை வாத்துக்கள் அதிக முட்டை இடும் திறன் படைத்தவை.

ரோமன் :

இவ்வகை வாத்துக்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் கொண்டவை. ஆண்வாத்தின் எடை 4.5-6.4 கிலோயும், பெண்வாத்தின் எடை 3.6-4.5 கிலோ எடையும் இருக்கும். இவ்வகை வாத்து அதிக முட்டையிடும் திறன் கொண்டவை.

ஆப்ரிகன் :

ஆப்ரிகன் இனம் டெளலெளஸ் மற்றும் சைனீஸ் கலப்பினமாகக் கருதப்படுகிறது. ஆன்வாத்தி எடை 9.1 கிலோயும் பெண்வாத்தின் எடை 8.2 கிலோ எடையும் கொண்டிருக்கும். பலவகை நிறங்களின் அமைப்பைக் கொண்டது. இந்த இரகம் அதிகமாக அமெரிக்காவில் காணப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் காணப்படும் சீமை வாத்து ஒரே இனத்தை சார்ந்ததாக இல்லை. மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட இனங்களின் கலப்பினங்களே பரவலாக வளர்க்கப்படுகிறது.இறைச்சிக்காக வளர்ப்பதைக்காட்டிலும், அழகுக்காகவே நம் நாட்டில் வளர்க்கப்படுக்ன்றன. இவைகிராமத்தில் தோட்டத்து காவலனாகவும் நகரங்களில் பங்களாவை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கப்படுகின்றன.ந நாட்டில் இதைப் பற்றி யாரும் ஆய்வு மேற்கொண்டதாக தெரியவில்லை.பெரியளவில் வர்த்தக ரீதியாக யாரும் வளர்த்தாகவும் தெரியவில்லை.

சீமை(கூஸ்) வாத்து வளர்ப்பு :

சீமை வாத்துக்கள் கறிக்காகவும், அழகுக்காகவும், புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், குறிப்பாக தோட்டங்களில் வளரும் களைகளை அழிக்கவும், காவலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இரைப்பை பசுந்தீவனத்தை நன்கு ஜீரணித்து உட்கிரகிக்கும் திறன் படைத்தவை. சீமை வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர்நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம். ஒரு ஏக்கர் நிலத்தில் 25ஜோடி வாத்துக்கள்வளர்க்கலாம்.கூரைகள் அல்லது ஓடுகள் மேய்யப்பட்ட கொட்டகைஅமைக்கப்படவேண்டும்.

தீவனப் பராமரிப்பு :

சீமைவாத்துக்களின் முக்கிய உணவு புரதச்சத்து நிறைந்த பசுந் தீவனமாகும். ஒரு சீமைவாத்திற்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் தீவனத்தின் அளவு புல்வகை பசுந்தீவனம் 300கிராம், அடர்தீவனம்100கிராம், கிளிஞ்சல் 5கிராம், தீவனத்துடன் தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.சாதாரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ நெல் தவிடு அத்துடன் 100கிராம் அடர் தீவனம் கொடுத்தால் போதுமானது. தவிட்டையும், அடர் தீவனத்தையும் தண்ணீரில் கலந்துக்கொடுக்க வேண்டும்.அல்லது மேய்ச்சலுடன் 100கிராம் அடர் தீவனத்தை நீரில் கலந்துக் கொடுக்க வேண்டும்.அடர் தீவனத்தை எப்போதும் தண்ணீரி பிசைந்து கொடுக்கவேண்டும். அடை காக்கும் காலங்களில் பெண் சீமை வாத்து மேய்ச்சலுக்கு செல்லாது.தினமும் அடையை விட்டு இறக்கி பசுந்தீவனமும், அடர் தீவனமும் கொடுக்கவேண்டும்.

நோய் பராமரிப்பு :

சீமைவாத்துக்களை பாதிக்கும் முக்கிய நோய் ராணிக்கெட் இந்நோய் கண்ட வாத்து பச்சை, மற்றும் வெள்ளை நிற கழிச்சல் கண்டு சில நாட்களில் இறந்து விடும்.இந் நோய் கண்ட பெண் வாத்துக்களின் முட்டை இடும் திறன் குறைந்து விடும். இந்நோய்யினை தடுக்க 7, 21ம் நாட்களில் லசோர்ட்ட தடுப்பு ஊசி போட வேண்டும்.வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் பற்றாக்குறையால் சீமைவாத்துக் குஞ்சிகளில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படும். அகையால் வாத்துக்குஞ்சிகளுக்கு செறிவூட்டப்பட்ட தீவனத்துடன் வைட்டமின் மற்றும் தாது உப்பு கலவை கலந்து கொடுக்க வேண்டும்.

இனப்பெருக்கம் :

சீமைவாத்தின் இன சேர்க்கை பெருபாலும் நீருக்குள் நடைபெற விரும்பும். ஆகையால் பண்ணைச் சுற்றி குளம் குட்டை இருப்பது அவசியம்.ஒரு தடவைக்கு 12 முட்டைவரை இடும்.வருடத்திற்கு 70 முட்டை வரை இடும்(பெரும்பாலும் அப்படி இடுவதில்லை). வைக்கோல் படப்புக்குள் சென்று முட்டை இடும் முட்டைகளை பெண் வாத்து மட்டும் அடைக்கும். ஆண் வாத்து படப்புக்கு வெளியே நின்று காவல் காக்கும்.30 நாட்கள் கழித்து குஞ்சி முட்டையிலிருந்து வெளிவரும்.முதல் மூன்று நாட்களுக்கு தீனி எதுவும் எடுத்துக் கொள்ளாது. பின்பு தானாக தீனி எடுத்துக்கொள்ளும்.தாய் வாத்து தன் குஞ்சை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தில் நீந்து செல்லும் காட்சி கண் கொள்ளகாட்சியாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment