Sunday 12 March 2017

தாயில்லாத அல்லது தாயினால் ஒதுக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டிகளை வளர்ப்பது எப்படி?


இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்ற செம்மறியாடுகள் போதுமான பால் அளிக்க இயலாததால் குட்டிகளை புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட அல்லது நோயுற்ற குட்டிகளை கண்டறிந்து பராமரிப்பது மிகவும் அவசியம். ஓரே நேரத்தில் நிறைய குட்டிகள் பிறந்திருக்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட குட்டிகளை கண்டறிவது மிகவும் கடினம். இத்தகைய குட்டிகள் மந்தையிலிருந்து விலகிக் காணப்படும், வளர்ச்சிகுன்றி சோர்வுடன் இருக்கும். இத்தகைய குட்டிகளை வெள்ளாட்டுப்பால் அல்லது பசும்பாலை கையினால் ஊட்டி பராமரிக்கலாம்.
பிறந்தவுடன் குட்டிகளுக்கு சீம்பால் அளிக்க இயலாவிட்டால் சுடவைத்த பாலில் விளக்கெண்ணை அல்லது பாராஃபின் கலந்து கொடுக்கலாம். குறைந்த பால் உற்பத்தி அல்லது தாயினால் சரிவர கவனிக்கப்படாத குட்டிகளுக்கு கீழ்கண்டபடி கூடுதல் பாலினை அளிக்கலாம். மீன் எண்ணெய் கலக்கப்பட்ட சுடவைத்த பாலை உடல் எடையில் பத்தில் ஒரு பங்கை அளிக்கலாம்.

முதல் 15 நாட்கள் : ஒரு நாளைக்கு 6 முறை
15 முதல் 30 நாட்கள் : ஒரு நாளைக்கு 4 முறை
1 முதல் 3 மாதம் வரை : ஒரு நாளைக்கு 2 முறை

faizalpetsfarm.blogspot.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment