Saturday 18 March 2017

மகசூலைக் கூட்டும் மகரந்தச் சேர்க்கை !


தேனீ வளர்ப்பு தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த தண்டாயு தபாணி. ”10 வயசுல இருந்தே தேனீக்கள் மேல எனக்கு ஆர்வம். பொ ழுதுபோக்கா தெரிஞ்சுக்கிட்ட விஷயந்தான் இப்ப எனக்கு சோறு போடுது. தேனீ வளர்ப்புல நான் கத்துக்கிட்ட விஷயங்கள மத்தவங்க ளுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஆயிரத்துக் கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். பயிர்களுக்கு இடையில ஊடுபயிர் சாகுபடி செய்ற மாதிரி தேனீ வளர்ப்பையும் செஞ்சா… மகசூலையும் கூட்டி, தனி வருமானத்தை யும் கொடுக்கிற வள்ளல்கள்தான், தேனீக்கள்.

உதாரணமா, சூரியகாந்திச் செடியில மகரந்தச் சேர்க்கை க்காக ஒவ் வொரு பூவையும் காகிதம் அல்லது துணியை வெச்சு உரசி விட்டு, மகரந்தத் தைக் காத்துல பரவ விடுவாங் க. ஆனா, அந்தத் தோட்டத்துல தேனீக்களை வளத்தா இந்த வேலையை நாம செய்ய வே ண்டியதில்லை. அதை தேனீக் கள் செஞ்சுடும். இதனால, உட ல் உழைப்பும் நேரமும் நமக்கு மிச்சம். மகசூல் அதிகரிக்கிற தோட தேன் மூலமா கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஆரம்பத்து லயே அதிகளவுல முதலீடு செய்யாம… 10 பெட்டிகளை மட்டும் வாங் கி, ஆரம்பிக்கணும். கொஞ்சம் தொழில்நுட்பங்களை அனுபவ ரீதியா தெரிஞ்சுக்கிட்டா… இந்த பெட்டிகள்ல இருந்து நாமளே அடுத்தடுத்த ப் பெட்டிகளை உருவாக்கிக்க முடியும். விவசாயிகள் மட்டும்தானு இல்லை. நகரத்துல இருக்கறவங்ககூட தேனீக்களை வளர்த்து வரு மானம் பாக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார், தண்டாயுதபாணி.

தொடர்புக்கு :
தண்டாயுதபாணி, செல்போன்: 94433-41679

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment