Thursday 9 March 2017

செம்மறி மற்றும் வெள்ளாடுகளை இனவிருத்தி செய்ய சிறந்த தருணம் எது?


ஆடுகளில் இனவிருத்தி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் மூன்று இனச்சேர்க்கைக் காலங்கள் உள்ளன. அவை :

மார்ச் முதல் ஏப்ரல் வரை
ஜீன், ஜூலை வரை
செப்டம்பர் முதல் அக்டோபர் வரை

சமவெளிப் பகுதிகளில் ஜீன், ஜூலை மாதத்தில் செய்யப்படும் இனச்சேர்க்கையில் ஆடுகள் சினையாதல் அதிகரித்துக் காணப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாத இனச்சேர்க்கையில் ஆடுகள் சினையாதல் அதிகரித்துக் காணப்படுகிறது.

வயது குறைந்த (அதாவது ஒரு வருடத்திற்கும் குறைந்த வயதுடைய) ஆடுகளை இனவிருத்தி செய்தால் குட்டிகள் வளர்ச்சி குன்றி பிறப்பதுடன் அதிக குட்டிகள் இறப்பதற்கும் காரணமாகின்றது.

பெட்டை ஆடுகளை போதிய உடல் எடை அடையும் காலம் வரை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. அவற்றை இனச்சேர்க்கைக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு நன்கு தழைத்த மேய்ச்சல் நிலத்தில் மேயச் செய்தோ அல்லது அதிக தீவனம் அளித்தோ தயார் செய்ய வேண்டும்.

பொதுவாக வெள்ளாடுகள் ஆண்டு முழுதும் சினைக்கு வரும் பண்புடையன. இருப்பினும் பருவமழையும் அதன் காரணமாக கிடைக்கும் நன்கு தழைத்த தீவனப் புற்களும் அவை சினைக்கு வருவதில் குறிப்பிடத்தக்க காரணிகளாக விளங்குகின்றன.

ஆடுகள் அதிகமாகக் குட்டி ஈனக் கூடிய காலங்கள் பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை  ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலங்களில் பிறந்த குட்டிகள் உயிரிழப்பின்றி நன்கு வளரக்கூடியதாக உள்ளன. ஆகவே ஆடுகள் இனச்சேர்க்கை செய்யும் காலத்தை அதற்கேற்ப மாற்றியமைப்பது நல்லது (அதாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை) கிடா ஆடுகளை பெட்டை ஆடுகளிலிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். இனச்சேர்க்கை சமயங்களில் மட்டும் சேர்த்து விட வேண்டும். கிடா ஆடுகளை பெட்டை ஆடுகளுடன் இரவில் சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.

faizalpetsfarm.blogspot.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment