Monday 27 March 2017

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!


இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும்.

விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 25 ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய பயோ உரத்தை பரிந்துரைக்கப்படும் அளவு, சொட்டு நீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவைப்படாது. பூச்சிகள் தென்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட பயோ பூச்சி விரட்டிகளைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறை வேளாண்மையில் பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை. வளர் பருவத்தில் தெளிக்கப்படும் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment