Tuesday 21 March 2017

அடுக்குத் தேனீக்கள் !


அடுக்குத் தேனீக்களை வளர்க்கும் முறைகளைப் பற்றி, திருவண் ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த தேனீ வளர்ப்புப் பயிற்சியாளர் பரமானந்தம் சொன்ன தகவல்கள்…

”அடுக்குத் தேனீக்கள் அடங்கியப் பெட்டிகள், பலரிடமும் விலை க்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்ல து பெட்டியைத் தயார் செய்துகொண்டு… கரையான் புற்று, மரப்பொ ந்து, பாறை இடுக்குகள் ஆகிய இடங்களில் இருக்கும் அடுக்குத் தேனீ க்களை எடுத்து, பெட்டியில் வைத்தும் வளர்க்கலாம். நாம் சேகரித்து வரும் தேன் அடையை, தேன் பெட்டியிலிருக்கும் சட்டத் தில் வாழைநார் கொண்டு முதலில் கட்ட வேண்டும். பிறகு, வெள் ளை நிற துணியைப் பயன்படுத்தி, ராணித் தேனீ உள்ள தேனீக் கூட்டத்தைச் சேகரித்து வந்து, பெட்டியில் வைக்க வேண்டும் (வேறு நிற துணிகளைப் பயன்படுத்தினால், தேனீக்கள் ஓடிவிடும்). ராணித் தேனீயைப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், வேலைக்காரத் தேனீக்க ள் வந்து சேர்ந்துவிடும். ராணித் தேனீயைப் பெட்டியின் கீழ்ப்பகுதி யில் இருக்கும் குஞ்சுகளின் அறையில் வைத்து விடலாம்.

தேன் அடை வைக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களில் சட்டங்க ளில் மெழுகு பிடித்து வளர்ந் து விடும். குஞ்சுகளின் அறை நிரம்பிய பிறகு, முட்டைகள் குறைவாக இருக்கும் ஒரு அடையை எடுத்து, இரண்டாக வெட்டி, தேன் அறையில் உள் ள இரண்டு சட்டங்களில் கட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் மற்ற சட்டங்களிலும் தேனீக்கள் அடையை உருவாக்கிவிடும். பூக்களின் சீசனைப் பொரு த்து… 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் அரை கிலோ முதல் 3 கிலோ வரை தேன் எடுக்க முடியும்.

ஏக்கருக்கு 75 தேனீப் பெட்டிகள் !

பொதுவாக, இந்தியத் தேனீ க்கள் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் சென்று தேன் சேகரிக்கும் குணமு டையவை. இவற்றை 10 அடி க்கு ஒரு பெட்டி வீதம் வைத் து வளர்க்கலாம். தென்னை, பாக்கு மரத்தோப்புகளாக இருந்தால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5 பெட்டி முதல் 75 பெட் டிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை அதிகரி க்கும். தேனீப் பெட்டிகளை நிழல் பகுதியில் வைப்பது நல்லது. தென் னை மற்றும் பாக்கு மட்டைகளை பெட்டிமீது வைக்க வேண்டும். இத ன் மூலம் மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோ டு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

மாதம் 2 அறுவடை !

தேன் சேகரிப்பதற்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைபோக்கியில் காய்ந்த தென்னை நாரினைத் தீயிட்டுக் கொளுத்தி, புகையை தேன் அடை மீது ஊதி விட்டால்… தேனீக்கள் விலகி விடும். பிறகு, தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரி க்கப்பட்ட டிரம்மில் அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும்.

மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது !

அடையில் இருந்து சேகரித்த தேனை சூடுபடுத்தா விட்டால், இரண்டு மூன்று மாதங்களில் புளித்து விடும். அதனால், வாய் அகன்ற பாத்தி ரத்தில் தண்ணீரை வைத்து சூடாக்கி, அதனுள் சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி சூடாக்க வேண்டும். கொதிக்க வைத்த தேனில், மேல் பகுதியில் இருக்கும் நுரையை எடுத்துவிட்டு, சுத்தமான துணியில் வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தே வையில்லாதக் கழிவுகள் தங்கிவிடும். பிறகு, தேனை ஆறவைத்து… கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றலாம். இது 3 ஆண்டுகளுக்குக் கெட்டுப்போகாது. எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் தேனை வைக்ககூடாது” என்றார், பரமானந்தம்.

தொடர்புக்கு,
பரமானந்தம்,
செல்போன்: 94888-50363.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment