Saturday 11 March 2017

செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது அவசியமா?


ஆடுகளுக்கு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் அடர் தீவனம் அளிப்பது அவசியம்

1. போதிய அளவிற்கு தரமான தீவனப் பயிர்கள் கிடைக்காத நிலைமை.

2. கருவுற்றிருக்கும் காலத்தின் கடைசி பகுதி மற்றும் பால் கொடுக்கும் காலத்தின் முற்பகுதி ஆகிய சமயங்களில் அதிகமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அளிக்க அடர் தீவனம் அளித்தல் அவசியம்.

மேய்ச்சலுடன் எந்த வகை தீவனங்களை செம்மறி/வெள்ளாடுகளுக்கு கூடுதலாகத் தர வேண்டும்?

மேய்ச்சலுடன் ஆடுகளுக்கு கூடுதலாக அளிக்கக் கூடிய தீவனங்கள் :

i) கடலைக்கொடி
ii) மர இலைகள்
iii) பயறுவகைத் தீவனப் பயிர்கள்
iv) அடர் தீவனங்கள்

சாகுபடி செய்யக்கூடிய தீவனப் பயிர்கள் யாவை?
அவற்றின் விதை/கரணைகள் எங்கு கிடைக்கும்?

a) தீவனப் பயிர்கள் :

1. தானிய வகை தீவனப் பயிர்கள் : கோ- 27 தீவனப்பயிர், கோ-10 தீவனப்பயிர், தீவன மக்காச்சோளம், தீவனக் கம்பு (கோ-8), நேப்பியர் & கம்பு ஒட்டுப்புல்- கோ-1, கோ-2, கோ-3, கினிப்புல், ஹமில் புல், கொழுக்கட்டைப்புல், சுடான் புல், பாராப் புல், கர்னால் புல்.

2. பயறுவகைத் தீவனப்பயிர்கள்:காராமணி (கோ-5), வேலிமசால், முயல் மசால், குதிரை மசால், சணப்பை கலப்ப கோனியம்.

b) தீவன மரங்கள் :

வெல்வேலம், கருவேலம், குடைவேலம், பெருமரம், வாகை, பலா, வேம்பு, மந்தாரை, இலவம், வேடத்தான், தூங்குமூஞ்சி, முல்லு முருங்கை, ஆலமரம், அரசமரம், வேலிக்காட்டாமணக்கு, அச்சன், கொடுக்காப்புளி, ஒதியன், சவுண்டல், மா, முருங்கை, வேலிக்கருவேல், புங்கம், அகத்தி, புளி, பூவரசு, இலந்தை.

புல் கரணைகள் கிடைக்குமிடம் :

விலங்கின அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் அஞ்சல்-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

விதைகள் கிடைக்குமிடம் :

1. மாநில விதைப்பண்ணை, படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.

2. மண்டல தீவனப்பயிர் ஆராய்ச்சி மற்றும் செயல் விளக்க மையம்
அலமாதி,
திருவள்ளுர் மாவட்டம்-600 052.

3. தாவர மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.

4. வேளாண் தொழில் நுட்பத் தகவல் மையம்,
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் (அஞ்சல்)-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment