Tuesday 10 April 2018

தூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள் :

1. தூய்மையான பால் உற்பத்தி
2. கறவை முறை
3. உபகரணங்களின் சுகாதாரம்
4. சுற்றுப்புறத் தூய்மை
5. கேள்வி பதில்கள்

தூய்மையான பால் உற்பத்தி :

சுத்தமான பால் என்பது ஆரோக்கியமான பசுவிடமிருந்து பெறப்பட்ட நல்ல மணமுடைய மாசுபடாத சுகாதாரமான. நுண்ணுயிரிகளின் அளவுகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பால் ஆகும். நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் காக்கவும் தரமான பால் பொருள்கள் தயாரிக்கவும் சுகாதாரமான பாலை உற்பத்தி செய்வது அவசியம் கடமையாக உள்ளது.

சுகாதாரமான முறையில் பாலை உற்பத்தி செய்ய வேண்டுமெனில், பாலில் நுண்ணுயிரிகளின் அளவு கூடாதிருக்க வேண்டும். இதற்கு கறவை மாடு, பால் கறவை யாளர், பால் கறக்கும் பாத்திரம், சுற்றுப்புறம் பயன்படுத்தும் நீர் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும்.

முதல் பாலை கறந்து தனியே வேறுபாத்திரத்தில் சேகாpத்து அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருக்கும்.

ஒடுங்கிய வாய் உள்ள பாத்திரமே பால் கறப்பதற்கு உகந்தது.அகன்ற வாயுள்ள பாத்திரம் பயன்படுத்துப்படுவதில்லை. ஏனெனில் அதில் அதிக அளவு பாக்டீரியாக்கள் சேர வாய்ப்புண்டு.பாலின் ஒரு முக்கியமான பண்பு அதனருகில் எந்தப் பொருள் இருந்தாலும் அதன் வாசனையை ஏற்றுக் கொள்ளும். பால் கறக்கும் போது வெங்காயம், பூண்டு உரித்தாலும் அதன் வாசனை பாலுக்கு வரும்.

பால் கறக்கும் போது தீவனம் அளிக்க கூடாது. ஏனெனில் தூசி பாலில் சேர வாய்ப்புண்டு. தீவனங்களில் ஏதேனும் வாசனை இருந்தால் பாலுக்கு வந்து விடும். பால் மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் பூச்சிமருந்து, கடின உலோகங்கள் சோந்திருந்தால் அதன் கழிவுகள் பாலுடன் வரும். பால் காளானால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலுள்ள அப்ளோடாக்சின் நச்சு பாலில் வெளிவரும்.

பால் கறவையில் உள்ள மாடுகள் நோயுற்றிருந்தால், அப்போது சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்துகளும் பாலில் வெளிரும் மருந்துவர்களின் ஆலோசனைப்படி 48, 72 மணி நேரம் கழித்து (மருந்தின் தன்மை பொறுத்து) கறக்கப்படும் பாலே பயன்பாட்டிற்கு உகந்தது.

கறவை மாடு நோய் நொடியற்ற கறவை மாடாக இருக்க வேண்டும். பால் கறப்பதற்கு முன் மடிநோய் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. நோய்கண்ட, சிகிச்சை பெறும் மாடுகளின் பாலை உபயோகப்படுத்தக் கூடாது, மற்ற பாலுடன் சேர்க்கக் கூடாது. கறவை மாடுகளை நன்றாக குளிப்பாட்டி எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மடி. காம்புக் பகுதியிலுள்ள உரோமங்களை அவ்வப்பொழுது வெட்டி விட வேண்டும்.

பால் கறப்பவர் விரல்களின் நகங்களை அவ்வப்பொழுது வெட்டி விட வேண்டும். நன்றாக கைகழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும். பால் கறக்கும் போது இருமுதல், தும்முதல் கூடாது. கால வரை முறைப்படி உடல் நலப் பரிசோதனை செய்து கொள்ளவதோடு பால் கறப்பவர் நோய்த்தாக்கம் இன்றி ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கறவை முறை :

பால் கறப்பதற்கு முன் கிருமி நாசினி கலந்த நீரைக் கொண்டு மடியை முறையாக கழுவ வேண்டும். மடியை நன்றாக கழுவி சுத்தமான துணியில் துடைத்த பின்னரே பால் கறக்க வேண்டும். முழுக்கை முறையில் பால் கறக்க வேண்டும் முதலில் கறக்கும் பாலை சிறிது கீழே விட்டுவிட வேண்டும். பாலை மடியிலிருந்து முழுவதும் கறக்க வேண்டும் பின்பு பாலை வடிகட்டி உடனே 50 செ வெப்பநிலைக்கு குளிர வைக்க வேண்டும்.

உபகரணங்களின் சுகாதாரம் :

பாத்திரங்களைக் கழுவ சுத்தமான தண்ணீர் வசதி இருக்க வேண்டும். பால் கறக்கும் பாத்திரங்களை கிருமிநாசினி கலந்த நீரால் நன்றாக கழுவி காயவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். பாலை பல்வேறு பாத்திரங்களில் மாற்றக் கூடாது.

சுற்றுப்புறத் தூய்மை :

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், மாடுகளின் கழிவுகளை அவ்வப்பொழுது அகற்ற வேண்டும், கழிவு நீர் தேங்காமல் இருக்க வேண்டும், மாட்டுத் தொழுவங்களில் வெள்ளை அடித்து சுத்தமாக வைப்பதால் ஈ. பூச்சித் தொல்லையைக் குறைக்கலாம்

புதிய உத்திகள் சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துதல், சமுதாய கறவை மாடுகள் கொட்டகை அமைத்தல், சமுதாய (பொது) பால் கறக்கும் கூடம் (தானியங்கிபால் கறப்பான், இருசக்கர வாகனம்) அதிககொள்ளளவு குளிரூட்டல் இயந்திரம், நோய் பரிசோதித்தல், சான்றளித்தல், பால் தரத்திற்குண்டான கொள்முதல் விலை அளித்தல் (பால் கொழுப்பு. சுத்தமான பால் உற்பத்தி முதலியன) முறைகளைப் பின்பற்றினால் தூய்மையான பாலை உற்பத்தி செய்து நுகர்வோரை சென்றடைய வழிவகை செய்யலாம்.

கேள்வி பதில்கள் :

1. கறவைமாடுகளில் பால் கறவைக்கான சரியான முறை என்ன?

முழு கைகளையும் பயன்படுத்தும் முறையே சரியான முறையாகும்

2. கறவைமாடுகளில் பால் கற்பபதில் தவறான முறை எது?

கை விரல்களை கொண்ண் அழுத்தத்துடன் கறத்தல் முறை தவறானது ஆகும்.

3. சாதாரண அறை வெப்பநிலையில் பால் எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும்?

சுமார் 6-8 மணி நேரம் வரை பால் கெடாமல் இருக்கும்

4. பால் சேமிப்பு முறைகள் எவை?

பால் குளிரூட்டும் அமைப்புகளை கொண்டு சுமார் 4 டிகிரி செல்சியஸ் (சென்டிகிரட்) அளவில் பாலை குளிரூட்டல் செய்யலாம். கையினால் பால் கறப்பதற்கான முறை காணொளியாக : https://youtu.be/ZXTJFtq46co

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment