Monday 16 April 2018

கால்நடைப் பண்ணையினை வடிவமைக்கும் போது கவனிக்க வேண்டியவை :

1. பண்ணைவடிவமைப்பு
2. கட்டிடங்களின் வடிவமைப்பு
3. கூரைகளின் வடிவம்

கறவை மாடுகள், பன்றிகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் போன்ற ஒவ்வொரு கால்நடை இனத்திற்கும் தனித்தனியான வடிவமைப்புடன் கூடிய கட்டிடங்கள் தேவைப்படும். எனவே கட்டிட வடிவமைப்பு கால்நடைகளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு கால்நடைகளுக்கும் வெவ்வேறு விதமான உற்பத்தி மற்றும் மேலாண்மை முறைகளும் தேவைப்படும். எனவே கால்நடைப் பண்ணையை வடிவமைப்பதற்கு முன்பு கீழ்க்கண்ட காரணிகளை நினைவில் கொள்ளவேண்டும்.

பண்ணைவடிவமைப்பு :

* பண்ணையில் நன்றாக வேலை செய்வதற்கேற்றவாறு அது ஒரு சிறிய மாதிரி வடிவமைக்கப்பட வேண்டும்.

* இவ்வாறு சிறிய மாதிரியை வடிவமைப்பதால், பல்வேறு விதமான கால்நடைகளுக்குத் தேவைப்படும் இடவசதி,தீவனத்தொட்டிகளின் அளவு போன்ற பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

கட்டிடங்களின் வடிவமைப்பு :

* எல்லாவிதமான கால்நடைகளுக்கும் பொருந்தும் வகையில் பண்ணையில் கட்டிடங்களை வடிவமைக்கவேண்டும்.

* கட்டிடங்களின் வெளிப்புற அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பது போன்று அமைக்கபடவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கூரைகளின் வடிவம் :

* அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப பண்ணை கட்டிடங்களின் கூரை அமைப்பு இருக்கவேண்டும். கேபிள் கூரை வடிவமைப்பில் கூரையில் காற்றோட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்படும் கூரை அமைப்பு வெப்பம் அதிகமுள்ள பகுதிகளுக்கு ஏற்றது.

* குறைந்த அகலமுடைய கட்டிடங்களுக்கு மானிட்டர் கூரை ஏற்றதாகும்.

* கட்டிடங்களின் வரையறுக்கப்பட்ட அகலம்

* ஒரு வரிசை மாட்டுக்கொட்டகையின் வரையறுக்கப்பட்ட நீளம் 3.85 முதல் 4.25 மீட்டர்களும், இரண்டு வரிசை மாட்டுக்கொட்டகையின் நீளம் 7.90 முதல் 8.70 மீட்டர்கள் வரை இருக்கவேண்டும்.

* பண்ணைக்கொட்டகையின் வரையறுக்கப்பட்ட உயரம்.

* பண்ணையில் கூரை அமைக்கப் பயன்படும் பொருட்களுக்கேற்பவும், தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் கொட்டகையின் உயரம் வேறுபடும்.

* கட்டிடங்களின் நீளம்

* பண்ணைக் கட்டிடங்களின் நீளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து கட்டிடத்தின் நீளம் வேறுபடும்.

* பண்ணையிலுள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து பண்ணைக் கொட்டகையின் நீளம் கணக்கிடப்படுகிறது.

* உதாரணமாக, பண்ணையில் 15-20 கறவை மாடுகள் ஒற்றை வரிசையிலும், 20-50 மாடுகள் இரட்டை வரிசையில் கட்டி பராமரிக்கப்பட வேண்டுமென்றாலும், 50 மாடுகளுக்கு மேல் பராமரிக்கப்பட வேண்டுமென்றால் தனியாக கொட்டகை அமைக்கப்படவேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment