Monday 23 April 2018

கன்றுகளுக்கான கொட்டகை :

1. கன்றுக்கொட்டகையின் அடிப்படை அம்சங்கள்
2. கன்றுக்கொட்டகைகளின் வீடமைப்பு வகைகள்
3. காளை மாடுகளுக்கான கொட்டகை
4. காளை மாட்டுக் கொட்டகையினை வடிவமைக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய நுணுக்கங்கள்
5. இதர அமைப்புகள்
6. கதவமைப்பு
7. திறந்தவெளி

கன்றுக்கொட்டகைகளை வடிவமைக்கும்போது அவற்றிற்குத் தேவையான மருத்துவம் மற்றும் கன்றுகளின் இறப்பினைக் குறைத்து தரமான ஆரோக்கியமான கன்றுகளை பெறுவது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

கன்றுகொட்டகையானது கன்றுகள் மற்றும் கன்றுக்கொட்டகையில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு வசதியாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுக்கொட்டகையின் அடிப்படை அம்சங்கள் :

* உலர்வான படுக்கை அமைப்பு

* நல்ல காற்றோட்டம்

* கன்றுகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச காற்றோட்ட அளவு (கன அடிகளில்)

* வறட்சியற்ற சூழ்நிலை

* கன்றுகளுக்கு உலர்வான படுக்கை வசதி மிகவும் அவசியமாகும். ஏனெனில் இந்த வசதி இருந்தால் மட்டுமே கன்றுகளுக்கு, கொட்டகையின் தரையினால் ஏற்படும் வெப்ப இழப்பு குறைவதுடன் வைக்கோலின் உபயோகமும் குறையும்.

* முறையாக வடிவமைக்கப்பட்ட வடிகால் வசதி மற்றும் காற்றோட்ட வசதி போன்றவற்றால் கன்றுக் கொட்டகையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் குறைக்கப்படும்.

* நல்ல காற்றோட்ட வசதி உள்ள கன்றுக் கொட்டகையில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ற தீயவிளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்களும் வெளியேற்றப்படுகின்றன.

* ஒரு கன்றுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச காற்றோட்ட அளவான ஒரு கன அடி அளவு எல்லாக் கன்று கொட்டகைகளிலும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கபடுவதால் நோய் ஏற்படுத்தும் கிருமிகளின் அளவை கன்றுக்கொட்டகையில் குறைப்பதுடன், இதர நோய்க்கிருமிகளின் தாக்குதலும் குறைக்கப்படுகிறது.

* கன்றுக்கொட்டகையின் உயரம் மற்றும் இட வசதி போன்ற அம்சங்கள் கன்றுக்கொட்டகையில் கன்றுகளுக்கு மேலே காற்றோட்ட வசதியினை அதிகப்படுத்தி குளிர்காலத்தில் கன்றுகளுக்கு ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கின்றன.

* கன்றுக்கொட்டகை ஒரே சமயத்தில் கன்றுகளை வளர்த்து பிறகு அவற்றை மற்றொரு கொட்டகைக்கு ஒரே சமயத்தில் மாற்றுமாறு அமைக்கப்படுவதால், புதிதாக கன்றுகளை கொட்டகைக்குள் கட்டுவதற்கு முன்பாக கொட்டகையினை முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்படுகிறது.

* ஒவ்வொரு முறை புதிதாக கன்றுகளை கொட்டகையில் கட்டி பராமரிப்பதற்கும், பழைய கன்றுகளை கன்றுக் கொட்டகையிலிருந்து அடுத்த கொட்டகைக்கு மாற்றுவதற்கும் உள்ள கால இடைவெளி குறைந்தது மூன்று வாரங்களாக இருக்கவேண்டும்.

* ஒரே குழுவிலுள்ள கன்றுகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறைவாக இருக்கவேண்டும்.

* ஒரே பண்ணையிலிருந்து பெறப்பட்ட கன்றுகளை மட்டுமே ஒன்றாகக் கட்டி பராமரிக்கவேண்டும்.

கன்றுக்கொட்டகைகளின் வீடமைப்பு வகைகள் :

கன்றுக்கொட்டகை அமைப்பில் மூன்று வகைகள் :

அவையாவன :

* கறவைமாடுகளாக வளர்க்கப்படும் கன்றுகளுக்கான வீடமைப்பு.

* இறைச்சிக்காக வளர்க்கப்படும் கன்றுகளுக்கான வீடமைப்பு.

* பால் ஊட்டும் கன்றுகளுக்கான வீடமைப்பு.

பண்ணையில் வளர்க்கப்படும் பெரும்பாலான கன்றுகள் முதல் வகைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த வகை வீடமைப்பானது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகிறது.

கன்றுகள் தனித்தனியான கொட்டகைகளில் வளர்ப்பதா அல்லது மொத்தமாக ஒரே கொட்டகையில் கட்டி வளர்ப்பதா என்பதற்கு பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்தியாவில் பொதுவாக கன்றுகள் மொத்தமாக ஒரு கொட்டகையில் கட்டியோ அல்லது தாய் மாடுகளுடன் சேர்த்து கொட்டகையில் பராமரிக்கப்படுகின்றன. முறையாக வடிவமைக்கப்பட்ட பண்ணைகளிலும், இந்த சூழ்நிலை வேறுபடுகிறது

இந்தியாவில் 30-40% இளங்கன்றுகள் இறப்பு மேற்கூறிய கட்டிட வடிவமைப்பு அமைக்கப்படும் பண்ணைகளில் ஏற்படுகிறது. கன்றுகளுக்கென தனியாக கொட்டகைகளை வடிவமைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் தனியாக கன்றுகளுக்கு அமைக்கப்படும் கொட்டகைகளை சுத்தம் செய்வதும், கிருமி நீக்கம் செய்வதும் எளிதாகும். ஒவ்வொரு கன்றையும் தனியாகப்பிரிக்க தனித்தனிக் கொட்டகைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைப்பதால் கன்றுகள் அவற்றின் தொப்புளை நாவினால் நக்குவது குறைக்கப்படுவதுடன், இதர முறைகளின் மூலம் நோய் பரவுவதும் குறைக்கப்படுகிறது. ஆனால் மற்ற கொட்டகை அமைப்புகளில் கால்நடைகளுக்கு இடையேயான தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்படுகிறது. கன்றுகளின் ஒரு மாத வயது வரை அவற்றைத் தனிக் கொட்டகைகளில் கட்டி பராமரிப்பது நல்லது.

கன்றுகளின் மூன்று மாத வயதிற்குப் பிறகு, 3-5 மாத வயதான கன்றுகளை தனியாக ஒரு கொட்டகையிலும், 6 மாத வயதிற்குப் பிறகு அவற்றின் இனப்பெருக்க வயதை அடையும் வரை தனித்தனிக் கொட்டகைகளிலும் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஆறுமாத வயதிற்குப் பிறகு காளைக் கன்றுகள் இனப்பெருக்கத்திற்கோ அல்லது இறைச்சிக்கு வெட்டுவதற்காகவோ விற்கப்படுகின்றன.

எளிதாக மேலாண்மை செய்வதற்கு கன்றுக் கொட்டகையானது கறவை மாட்டுக்கொட்டகைக்கு அருகிலேயே அமைக்கப்படவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பல்வேறு வயதான கன்றுகளுக்கு ஏற்ற இட வசதி :

* கன்றுகளின் வயது மாதங்களில் : 0-3

மூடிய கொட்டகையில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இடவசதி : 1.0

கொட்டகையின் திறந்த பகுதியில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இட அளவு : 2

ஒரு கொட்டகையில் பராமரிக்ககப்படும் கன்றுகளின் எண்ணிக்கை : 24

* கன்றுகளின் வயது மாதங்களில் : 3-6

மூடிய கொட்டகையில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இடவசதி : 1.5

கொட்டகையின் திறந்த பகுதியில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இட அளவு : 3

ஒரு கொட்டகையில் பராமரிக்ககப்படும் கன்றுகளின் எண்ணிக்கை : 16

* கன்றுகளின் வயது மாதங்களில் : 6-12

மூடிய கொட்டகையில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இடவசதி : 2.0

கொட்டகையின் திறந்த பகுதியில் கன்றுகளுக்குத் தேவைப்படும் இட அளவு : 4

ஒரு கொட்டகையில் பராமரிக்ககப்படும் கன்றுகளின் எண்ணிக்கை : 12

காளை மாடுகளுக்கான கொட்டகை :

* காளைகள் ஒரு பண்ணையின் முக்கிய அம்சமாகும். ஏனெனில் கறவை மாட்டுப்பண்ணையில் உருவாக்கப்படும் கன்றுகளின் 50 சதவிகித மரபுப்பண்புகள் காளைகளிடமிருந்தே பெறப்படுகின்றன.

* வெப்பம் அதிகமுள்ள இடங்களில் முறையாக கொட்டகை அமைக்கப்படவில்லை எனில் காளை மாடுகளின் விந்து உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்.

* எனவே கறவை மாட்டுப்பண்ணையில் இனப்பபெருக்கத்திறனை அதிகரிக்க மேம்படுத்துவதற்கு காளை மாட்டுக் கொட்டகைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்.

* காளை மாடுகள் கொட்டகைகள் மற்றும் திறந்த வெளி அமைப்பிலும் பராமரிக்கப்படுகின்றன. காளை மாடுகள் தனித்தனிக் கொட்டகைகளில் பராமரிக்கப்பட வேண்டும் அல்லது அவற்றை இரண்டு வரிசைகளாக ஒரே கொட்டகையில் கட்டியும் பராமரிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

காளை மாட்டுக் கொட்டகைகளின் உபயோகம் :

* பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து காளைகளைப் பாதுகாக்கவும், அவற்றை எளிதில் கையாளவும் முறையான கொட்டகை அமைப்பு அவசியமாகும்.

* காளை மாடுகளுக்கு உடற்பயிற்சிக்காக.

* கறவை மாட்டுப் பண்ணையில் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்காக.

* காளை மாடுகளுக்குத் தேவைப்படும் இட அளவுகள் - மூடிய கொட்டகையில் ஒரு காளைக்கு 12 சதுர மீட்டரும், அவற்றிற்கு உடற்பயிற்சி செய்ய - திறந்த வெளிக் கொட்டகையில் 120 சதுர மீட்டரும் இடம் தேவைப்படும்.

* காளை மாட்டுக் கொட்டகையில் திறந்த வெளி அமைப்பு இல்லாதபட்சத்தில் அதற்கென தனியாக உடற்பயிற்சி கருவியும் அமைக்கப்பட வேண்டும்.

காளை மாட்டுக் கொட்டகையினை வடிவமைக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய நுணுக்கங்கள் :

சுவர் :

திறந்த வெளியுடன் அமைக்கப்பட்ட காளைக் கொட்டகையில் அதன் சுவர் 1.5 மீட்டர் உயரத்திற்கு அமைத்து அதன் மீது இரண்டு அல்லது மூன்று உருளை வடிவ இரும்பு தூண்களை நீளவாக்கில் 20-30 செமீ இடைவெளியில் பொருத்தவேண்டும்.

தரை :

* காளைக் கொட்டகையின் தரை முறையாக அமைக்கப்படவேண்டும். இவ்வாறு முறையாக தரை அமைக்கப்பட்டால் மட்டுமே காளைகளின் குளம்புகளில் பாதிப்பு ஏற்படாது.

* சொரசொரப்பான சிமெண்ட் காங்கிரீட் கொண்டு தரையை அமைக்கவேண்டும். தரையானது 1/40 முதல் 1/60 அளவிற்கு சாய்வாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சாய்வாக தரை அமைக்கப்பட்டால் கால்நடைகளின் சிறுநீர் மற்றும் சாணம் போன்ற கழிவுகள் கழிவு நீர் வாய்க்கால் மூலம் வெளியேறுவதற்கு வசதியாக இருக்கும்.

* வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் வெயில் காலத்தில் குளிராகவும், வெப்பத்தை கடத்தாத தன்மையுடையதாகவும் இருக்கவேண்டும்.

* விட்ரிஃபைட் கற்கள் மூலம் காளைக் கொட்டகையில் வழுக்காதவாறு தரை அமைக்கவேண்டும்.

கூரை :

* கேபிள் அல்லது மானிட்டர் கூரையின் வெளிப்புறம் 2.5 முதல் 3 மீட்டர் நீளம் வரை வெளியே நீட்டியிருக்குமாறும், அதன் ரிட்ஜ் உயரம் 3.2 முதல் 3.5 மீட்டர் வரை இருக்குமாறும் அமைக்க வேண்டும்.

* பொதுவாக வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் காளைக் கொட்டகையில் கூரை அமைக்கப் பயன்படும் பொருட்கள் வெப்பத்தைக் கடத்தாத வண்ணமும் கதகதப்பை அளிக்கும் வண்ணமும் இருக்கவேண்டும்.

* பொதுவாக ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் அல்லது துத்தநாக முலாம் பூசப்பட்ட இரும்பு அட்டைகள் காளை கொட்டகையின் கூரை அமைக்கப் பயன்படுகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இதர அமைப்புகள் :

தீவனத்தொட்டி :

* சிமெண்ட் காங்கிரீட்டினாலான 60 செமீ அகலமும், 40 செமீ ஆழமும், 50 செமீ உட்புறச்சுவர் உயரமும் உடைய தீவனத்தொட்டியனை காளை மாட்டுக் கொட்டகையின் உட்பகுதியில் அமைக்க வேண்டும்.

* காளை மாடுகளின் கொட்டகையில் தீவனத்தொட்டிக்கு மேல் காளைகள் தங்களின் தலையை மட்டும் உள்ளே விட்டு தீவனம் எடுக்கும்வகையில் உருளை வடிவ இரும்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும்.

தண்ணீர்த்தொட்டி :

* காளைக் கொட்டகையில் இருக்கும் தண்ணீர்த்தொட்டி 60-75 செமீ நீளத்தில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.

* காளைகளுக்கு தண்ணீர் அளிக்க பொதுவாக தானியங்கி தண்ணீர்த்தொட்டி அமைப்பதே நல்லது.

கதவமைப்பு :

* ஒவ்வொரு காளைக் கொட்டகையிலும் முக்கிய கதவானது 4 அடி அகலமும், 7 அடி உயரத்துடன் இருக்கவேண்டும். கதவின் மேற்பகுதி இரண்டு உறுதியான உருளை வடிவ இரும்பு ராடுகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படுவதால் காளைகள் திடீரென குதிப்பதை தடுக்கலாம்.

* காளைக் கொட்டகையில் தீவனம் எடுப்பதற்காகவும், திறந்தவெளிக்கு செல்வதற்காகவும், முக்கிய கதவுக்கு எதிர்புறத்தில் வெளியே செல்வதற்கு ஒரு வழி அமைக்க வேண்டும்.

திறந்தவெளி :

* ஒவ்வொரு காளைக்கும் 120 சதுரமீட்டர் அளவிற்கு ஒரு திறந்தவெளி அமைக்கவேண்டும். இந்த திறந்தவெளியைச் சுற்றிலும் 0.3 மீட்டர் உயரத்தில் சுவரும், சுவரின் மேற்புறத்தில் இரும்பினாலான உருளைகளும் 0.25 மீட்டர் இடைவெளியில் 1.2 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட வேண்டும்.

* திறந்த வெளியின் ஒரு புறத்தில் 1.2 மீட்டர் அகலத்தில் கதவு அமைக்கவேண்டும். திறந்த வெளியின் தரையானது சிமெண்ட் காங்கிரீட்டினால் தரை அமைத்து அதில் கோடுகள் போட்டு சொரசொரப்பான இருக்கவேண்டும். மேலும் கொட்டகையின் தரை வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* காளைக் கொட்டகையில் அமைக்கப்படும் திறந்தவெளியானது காளைகளுக்கு உடற்பயிற்சி அளிப்பதற்காகவும், காளைகளுக்கு தனியாக இருக்கும் உணர்வை தவிர்ப்பதற்காகவும் அமைக்கப்படுகிறது.

சர்வீஸ் கிரேட் :

* காளைக் கொட்டகையில் உள்ள திறந்தவெளியானது சர்வீஸ் கிரேட்டுக்கு செல்லுமாறு அமைக்கப்பட வேண்டும். அங்கு ஒரு தொங்கும் கதவு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கதவின் மூலம் காளை மாடுகளைப் பராமரிப்பவர்கள் எளிதாக காளைகளை சர்வீஸ் கிரேட் பகுதிக்கு ஓட்டிச்செல்ல முடியும்.

* விந்து சேகரிக்கும் திறந்த வெளிப்பகுதியும், விந்தினைப் பதப்படுத்தும் பரிசோதனைக்கூடமும் காளைக்கொட்டகைக்கு அருகில் அமைக்கப்படவேண்டும்.

* 50 மாடுகளுக்கு இனவிருத்தி செய்ய ஒரு காளை தேவைப்படும். செயற்கை முறை கருவூட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டால் காளைகளை பண்ணையில் பராமரிக்கத் தேவையில்லை.

* வெயில் அதிகமாக உள்ள தட்பவெப்ப நிலையிலிருந்து காளைகளைப் பாதுகாத்தல்.

* தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு காளை மாடுகளின் விந்தின் தரம் மாறுபடும். வெப்பம் அதிகமுள்ள நேரங்களில் விந்தின் தரம் குறையும்.

* நல்ல காற்றோட்டமுள்ள குளிர்ந்த கொட்டகையில் காளை மாடுகளைப் பராமரிக்கவேண்டும்.

* வெயில் அதிகமுள்ள நாட்களில் 2-3 முறை தண்ணீரை காளை மாடுகளின் மீது தெளிக்கவேண்டும்.

* அதிகாலை அல்லது மாலையில் வெயில் சாய்ந்த பிறகே காளைகளை உடற்பயிற்சிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* வேகமாக வளரும் மரக்கன்றுகளை காளை மாட்டுக்கொட்டகைக்கு அருகில் நடவேண்டும். இதனால் கிடைக்கும் இயற்கையான நிழல் மற்றும் காற்றோட்ட வசதியால் அதிகப்படியான வெப்பத்தின் தாக்குதல் குறைக்கப்படும்.

* காளைக்கொட்டகையின் கூரை மீது வைக்கோலை வேய்வதால் கொட்டகையின் உட்பகுதியில் வெப்பம் குறைக்கப்படும்.

* கூரையின் மேற்புறத்தில் வெளிர் நிறமுடைய அல்லது வெள்ளை நிற பெயிண்ட் பூசுவதால் வெப்பம் கொட்டகையின் உள்ளே கடத்தப்படாமல் தடுக்கப்படும்.

* கூரையின் உட்புறத்தில் கருப்பு அல்லது அடர் நிற பெயிண்ட் அடிக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment