Tuesday 17 April 2018

ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி?

ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும்.

இந்த செடியும், பார்தேனியும் போன்று, கட்டுக்கு அடங்காமல் வளரும் தன்மை கொண்டது. இதுவும், வெளி நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த ஒரு அந்நிய தாவரம்.

நீர் நிலைகளை முழுவதும் மாற்றும் திறமை கொண்டது இது! நீரில் உள்ள ஆக்சிஜென குறைந்து, நீரில் உள்ள மீன்கள் எல்லாம் இறந்து விடும். ஒரு முறை குளத்திலோ, ஏரியிலோ வந்து விட்டால் போதும். இருபது வருடம் கழித்து கூட இதன் விதைகள் திரும்ப முளைக்கும் திறன் கொண்டது! ஒரு ஏகர் ஏரியை, எட்டு மாதத்தில் முழுவதும் மூடி விடும்.

இந்த நீர் ராட்சசனை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் நமக்கு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழக ஆராய்ச்சி ஆளர்கள் ஒரு பதில் கண்டு பிடித்து உள்ளார்கள்.

ஆகாய தாமரையானது, நீரில் இருந்து நைட்ரோ ஜென, போடச்சியம், மற்றும் போச்போருஸ் (Nitrogen, potassium and phosphorus) தாதுக்களை எடுத்து கொள்கிறது. அதனால், இதனின் இலைகள் கம்போஸ்ட் செய்ய பயன் படுத்தலாம். இந்த கம்போச்டில் மண் புழுக்கள் சாதாரண கம்போச்டை விட நன்றாக வளர்கிறது.

ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் செய்யும் முறை :

* ஆகாய தாமரையும், மாட்டு சாணமும் 1:3 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்

* இந்த கலவையை 50 நாட்களுக்கு விட்டு வைக்க வேண்டும்

* மக்கிய இந்த கலவையை மண் புழுவிர்கான வேர்மிபோஸ்ட் இடத்தில போட வேண்டும்.

* ஒரு டன்னிற்கு 1500 என்ற கணக்கில் மண்புழுவை இந்த மக்கிய கலவையில் போட வேண்டும்

* 55நாட்கள் பின்னல் வெர்மி கம்போஸ்ட் ரெடியாகி விடும்.

* ஆகாய தாமரை மூலம் கம்போச்டில் 4590 மண்புழுக்களும், சாதாரண கம்போச்டில் 2610 மண்புழுக்களும் இருந்தன.

* மேலும், ஆகாய தாமரை கம்போச்டில், மண் புழுக்கள் ஆரோக்யமாகவும், நீளமாகவும் இருந்தன.

* ஆகாய தாமரை மூலம் செய்ய படும் கம்போச்டில் இருந்து விரைவாகவும், நல்லதுமான எண்ணிக்கையில் அதிகமாகவும் மண்புழு கம்போஸ்ட் நமக்கு கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு அணுகுவீர்:

தலைவர்,
தோட்டத்துறை ஆராய்ச்சி நிலையம் (Horticultural Research Station),
தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்,
பின்: 643 001,
தொலைபேசி: 04232442170
email: selvanan@yahoo.co.in

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment