Wednesday 18 April 2018

பண்ணைக் கட்டிடங்களின் வரைபடம் தயாரித்தல் :


1. தரை வரைபடம்
2. கட்டிடங்களின் அமைப்பு
3. பண்ணையில் உள்ள கட்டிடங்கள்
4. பண்ணை வீடுகள்
5. கால்நடைக் கொட்டகைகள்
6. பண்ணையின் சேமிப்புக்கூடம்

பண்ணைக் கட்டிடங்களை வடிவமைக்க திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் முன்பாக கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ளவேண்டும்.

* பண்ணைக் கட்டிடங்கள் பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படவேண்டும்.

* பண்ணைக்கட்டிடங்கள் வேலையாட்களுக்கான செலவைக் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படவேண்டும்.

* பண்ணையில் செய்யும் வேலையின் திறன் நன்றாக இருக்கவேண்டும்.

* அமைக்கப்பட்ட பண்ணை திரும்ப விற்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

* பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் இடத்தின் வரைபடம்

* இது பண்ணையில் கட்டிடங்கள் அமையும் இடத்தினைத் தேர்ந்தெடுக்க உதவிடும்.

* இந்த திட்டமிட்ட பண்ணை இட வரைபடத்தில் பல்வேறு விதமான கட்டிடங்களின் அமைப்பு, சாலை அமைப்பு, பண்ணைக் கட்டிடங்களுக்கு இடையிலுள்ள இடைவெளி ஆகியவை குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தரை வரைபடம் :

* இந்த வரைபடத்தில் பண்ணையின் மேற்புறம் இருந்து பார்க்கும்போது அவற்றின் கட்டிடங்கள் தெரிவதை வரைபடமாகக் கொண்டிருக்கவேண்டும்.

* இந்த வரைபடத்தில் கட்டிடங்களின் நீள அகலங்கள், ஜன்னல்களின் அமைப்பு, கதவுகள் போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கட்டிடங்களின் வெளிப்புற அமைப்பு :

இந்த வரைபடத்தில் கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பு பற்றி வரையப்பட்டிருக்கவேண்டும்.

கட்டிடத்தின் வெட்டு அமைப்பு :

* இந்த வரைபடத்தில் கட்டிடத்தின் அடித்தளம், தரை வகைகள், சுவர்கள், கூரை போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

* கட்டிடத்தின் உட்புற அமைப்புகளான பிரிக்கும் பகுதிகள், தீவனமளிக்கும் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

கட்டிடத்தின் மொத்த மாஸ்டர் வடிவமைப்பு :

* கட்டிடத்தின் ஒரு மாதிரி வடிவமைப்பைத் தயார் செய்த பின்பு, அது திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருந்தால், மாஸ்டர் பிளேன் தயாரிக்கப்பட வேண்டும்.

* மாஸ்டர் பிளேன்கள், ஒரு கண்ணாடித் தாள் போன்ற காகிதத்தில் கருப்பு மையில் வரையப்பட்டிருக்கவேண்டும்.

* மேற்கூறிய வடிவமைப்பினை வரைந்து பிறகு அதிலிருந்து நீல வரை படம் தயார் செய்யவேண்டும்.

வேண் டைக் பிரிண்ட் :

பண்ணை வரைபடத்தின் நகல் வேண் டைக் பிரிண்ட் ஆகும். வெள்ளை தாளில் கருப்பு அல்லது நீல கோடுகளைக் கொண்டு வரை படம் இதில் வரையப்பட்டிருக்கும்.

புளூ பிரிண்ட் :

* நகல் வரைபடங்களிலிருந்து, கட்டிடங்களின் வரைபடங்களின் பிரதிகள் நீலத்தாளில் எடுக்கப்பட்டு பின் அவை பொட்டாசியம் டைகுரோமைட் உதவியால் நிலைப்படுத்தப்படுகின்றன.

* இந்த வரைபடமானது, கட்டிடங்களை அமைக்கத் தேவைப்படும் கட்டுமானத்திற்கான செலவினங்களை மதிப்பிடப் பயன்படுகிறது.

கட்டிடங்களின் அமைப்பு :

* பண்ணையிலுள்ள வீடுகள் சாலையினை நோக்கி இருக்குமாறு வடிவமைக்கப்பட வேண்டும். இதர கட்டிடங்கள் சாலையிலிந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்பியிருக்குமாறோ அல்லது கட்டிடங்களின் பின்புறம் சாலையினை நோக்கி இருக்குமாறோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படுவதால் காற்று மற்றும் சூரிய ஒளியின் போக்குக்கு ஏற்றவாறு கட்டிடங்கள் இருக்கும்.

* பொதுவாக பண்ணையிலிருக்கும் கால்நடைகளின் கொட்டகைகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நீளவாக்கில் அமைக்கப்படுகின்றன. மேலும் கொட்டகைகளின் திறந்த வெளிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகின்றன. இதனால் குளிர் காலத்தின் போது கால்நடைகளுக்கு நேரடியாக சூரிய ஒளி கிடைக்கும். தவிரவும் சூரிய ஒளி நேரடியாக கால்நடைகளின் கொட்டகையில் விழவும் இது வழி செய்கிறது.

பண்ணையில் கட்டிடங்களின் அமைப்பு அல்லது கட்டிடங்களின் வரிசை :

* கால்நடைப்பண்ணைகளில் அமைக்கப்படும் பல்வேறு கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டிடங்களின் வரிசை போன்றவை பண்ணையின் வெற்றியினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

* பண்ணையின் வடிவமைப்பு முறையாக அமைந்தால் மட்டுமே லாபத்தை அதிகரித்து உற்பத்தி செலவினங்களைக் குறைத்து பண்ணையின் வளர்ச்சியினை ஊக்குவிக்க முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பண்ணையில் உள்ள கட்டிடங்கள் :

1. பண்ணை வீடுகள்
2. கால்நடைகளின் கொட்டகைகள்
3. பண்ணையின் சேமிப்புக்கூடம்
4. நோயுற்ற கால்நடைகளை தனியாக பராமரிக்கும் கொட்டகை
5. புதிதாக வாங்கிய கால்நடைகளைத் தனித்து பராமரிக்கும் கொட்டகை

பண்ணை வீடுகள் :

* பண்ணை வீடுகள் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் வசிப்பதற்காக கட்டப்படும் வீடுகளாகும்.

* பண்ணையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு கால்நடைகளின் எருக்குழியிலிருந்து பூச்சிகள் மற்றும் ஈக்கள் வராதவாறு, எருக்குழியிலிருந்து காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் வீடுகள் அமைக்கப்படவேண்டும்.

* பண்ணையில் வீடுகள் காற்றடிக்கும் திசையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

* பண்ணை அலுவலகம் பண்ணையின் மையப்பகுதியில் அமைந்திருக்கவேண்டும்.

* பண்ணை மேலாளரின் வீடு பண்ணையின் நுழைவுவாயிலுக்கு அருகில் அமைக்கப்படவேண்டும். இதனால் பண்ணை மேலாளர் பண்ணையினை நன்றாக மேலாண்மை செய்ய முடியும்.

* பண்ணையிலுள்ள அனைத்து கட்டிடங்களும் அருகருகே இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இதனால் பண்ணையை நன்றாக நடத்தமுடியும். தவிரவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பண்ணைக் கட்டிடங்களை அருகில் அமைக்கவும் வேண்டும்.

* பண்ணையிலுள்ள முக்கியமான பகுதிகள் பண்ணையின் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்படவேண்டும்.

* பல்வேறு விதமான கால்நடைகளை ஒரே பண்ணையில் பராமரிக்கும்போது, பன்றிப்பண்ணையை, கறவை மாடுகளின் கொட்டகைகளிலிருந்து தொலைவில் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கால்நடைக் கொட்டகைகள் :

* பண்ணையிலுள்ள இந்த கட்டிடங்கள் கால்நடைகளை பராமரிப்பதற்காக கட்டப்பட்டவை.

* பண்ணையாட்களின் வீடுகள் மற்றும் பண்ணையிலுள்ள இதர கட்டிடங்களிலிருந்து கால்நடைகளின் கொட்டகைகள் தொலைவில் அமைக்கப்படவேண்டும்

* ஆனால் கால்நடைக் கொட்டகைகளுக்கும், பண்ணையாட்களின் வீடுகளுக்கும் இடையில் அதிகத் தொலைவு இருக்கக்கூடாது. இவ்வாறு இருந்தால் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் கால்நடைக் கொட்டகைகளுக்கு இரவு நேரத்தில் அல்லது மாறான தட்பவெப்ப சூழ்நிலைகளில் கால்நடைகளை கவனிக்கத் தயங்குவர்.

பண்ணையின் சேமிப்புக்கூடம் ;

* பண்ணையின் சேமிப்புக்கூடம், தீவனங்கள் மற்றும் இதர பண்ணைக்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் பண்ணை உற்பத்திப் பொருட்களை சேமித்துவைக்கப் பயன்படுகிறது.

* புதிதாக வாங்கிய கால்நடைகளைத் தனித்து பராமரிக்கும் கொட்டகை.

* இந்த கொட்டகை பண்ணையின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட வேண்டும்.

* இவ்வாறு அமைக்கப்படுவதால் புதிதாக வாங்கி வந்த கால்நடைகளை தனியாக பராமரித்து, அவற்றுக்கு எந்த நோய்களின் தாக்குதலும் இல்லாமல் இருந்தால் அவற்றை பண்ணையில் சேர்க்கமுடியும்.

* நோயுற்ற கால்நடைகளை தனியாக பராமரிக்கும் கொட்டகை.

* இந்தக் கொட்டகை நோயற்ற மாடுகளின் கொட்டகையிலிருந்து தனியாக இருக்கவேண்டும். இக்கொட்டகையில் நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment