Sunday 15 April 2018

உளிக் கலப்பை :

பயன் : ஆழ உழவதற்கு பயன்படுத்தலாம்
திறன் : ஒரு நாளில் 1.4 எக்டர் உழவு செய்யலாம் 1 மீ இடைவெளியில்

அமைப்பு :

இக்கலப்பை குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல்திறன் கொண்டது. இதன் கொழு 20 கோணமும் 25 மி.மீ அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது. இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள்சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்äட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம். கொழு கொழுதாங்கி என மூன்று பாகங்கள் மட்டும் உண்டு. இக்கலப்பை எதிர்பாராத அதிகப்படி விசையினால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பு அமைப்பை தன்னக்த்தே கொண்டது.

சிறப்பு அம்சங்கள் :

* இக்கலப்பையைக் கொண்டு 40 செ.மீ வரை ஆழ உழுவு செய்யலாம்.

* இக்கலப்பையை 35 முதல் 45 குதிரை திறன் கொண்ட டிராக்டர்களால் எளிதாக இயக்கலாம்.

* ஆழமாக உழுவதால் கடினப்படுகை தகர்க்கப்பட்டு மண்ணின் நீர் சேமிப்புத் தன்மை அதிகமாகிறது.

* பயிரின் வேர் அதிக ஆழம் வரை ஊடுவரு முடிகிறது. குறிப்பு : உளிக் கலப்பை இயந்திரம் விற்பனையாளர்கள் விபரம், ஊர், தொலைபேசி எண் அல்லது கைபேசி எண். தெரிந்தவர்கள் கமெண்டில் பதிவிட்டால் மற்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி...!!!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment