Sunday 1 April 2018

எருமை வளர்ப்பு பாகம் - 3

1. எருமைக் கன்றுகளின் தீவன ஊட்டம்
2. கன்றுகளுக்கான தீவனம்
3. கன்றுக்களுக்கான கலப்புத் தீவனம்

எருமைக் கன்றுகளின் தீவன ஊட்டம் :

இந்தியாவில் கன்றுகளின் இறப்பு விகிதம் (30-40 சதவிகிதம்) அதிகம். இது சரியாக பால் வழங்கப்படாமை, காயங்கள், நோய்த்தாக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது. கன்றுகளுக்கு சரியான தீவனமும், கவனிப்பும் அளித்துப் பராமரித்தல் இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவும்.

பிறந்த கன்றுக்கு சீம்பால் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். கன்று பிறந்த 12 மணி நேரத்திற்குள் சீம்பாலானது ஊட்டப்பட வேண்டும். கன்று உயிர்வாழத் தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சீம்பாலில் அடங்கியுள்ளன. சீம்பாலானது சுரக்கும் வரை அதாவது 3-4 நாட்களுக்கு கன்றுக்கு சீம்பால் தரப்படவேண்டும். கன்று ஊட்டியது போக மீதமுள்ள சீம்பாலை பீய்ச்சி வேக வைத்தோ அல்லது குளிர்விப்பானில் வைத்தும் பயன்படுத்தலாம். குளிர்விப்பானில் வைக்கும் போது சீம்பாலானது 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். லேக்டிக் அமிலம் மூலம் சீம்பால் ஆனது நொதிக்க வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்த பாலானது 2 வாரங்கள் வரை குளிர்விப்பானில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

தாய் எருமை கன்றை தன்னிடம் ஊட்ட அனுமதிக்கவில்லையெனில் பாலை பீய்ச்சி சிறிதளவு வெப்பநிலைக்கு (39 டிகிரி செல்சியஸிற்கு) காய்ச்சி சிறிது நேரம் வைத்து கன்றுக்கு அருந்தக் கொடுக்கலாம். சீம்பாலை எக்காரணம் கொண்டும் கொதிக்க வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள நுண்ணுயிரிகள் அனைத்துதம் அழிந்துவிடும்.

கன்று தானாகவே தாயிடம் சென்று அடிக்கடி ஊட்டும். ஆனாலும் சிறிதளவே பால் குடிக்கும். எனவே பாலை கறந்து நாளொன்றுக்கு இரண்டு வேளையாவது நாமே காட்டுவது நல்லது. கன்றை வாளியிலிருந்து நீர் அருந்தப் பழக்கவேண்டும். இதற்கு வாளித் தண்ணீரினுள் கையைவிட்டுக் கன்றை அந்தக் கையை நக்குமாறும், ஊட்டுமாறும் பழக்கவேண்டும். இவ்வாறு நீர் அருந்தப் பழக்கினால் உணவூட்டமும் அதற்கு எளிதாக இருக்கும். கன்று பிறந்து 4-5 நாட்கள் வரை நீர் மற்றும் பால் அருந்தப் பழக்கவேண்டும்.

சீம்பாலை அடுத்து 15 நாட்கள் வரை கன்றின் உடல் எடையில் 1/8 பங்கு 1/10 பங்கு வரை தாய்ப்பால் வழங்கப்படவேண்டும். அதன் பிறகு சிறிது பாலுடன் சேர்த்து பிற உட்டச்சத்துக்களுடன் கூடிய அடர் தீவனம் அளிக்கப்படலாம். பாலை நிறுத்தி (திடீரென) உடனடியாக வெறும் அடர் தீவனம் மட்டும் கொடுத்தால், ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படலாம். நாளொன்றுக்கு இரு வேளை என்ற அளவில் கொழுப்பு நீக்கிய பாலும், தீவனமும் கலந்து அளிக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குப் பின்பு., பசும்புல், கலப்புத்தீவனம் போன்றவை (அட்டவணை 3ல் காட்டிய படி) அளிக்கலாம். இதுவே செரிமானத் திறனை அதிகப்படுத்தும். கீழ்க்காணும் அட்டவணைப்படி தீவனமிடும்போது முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு 0.35 கி.கி அளவு பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

* முதல் 3-4 நாட்கள் சீம்பால் கொடுக்கலாம்.

* சிறிது சிறிதாக கொழுப்பு நீக்கிய பாலை பாலுக்கு பதிலாகக் கொடுத்துப் பழக்கவும்.

* மற்றொரு முறையில் செவிலித்தாய் ஊட்டம் மூலமும் பால் அளிக்கச் செய்யலாம். இத்தாலி போன்ற நாடுகளில் 40 சதவிகிதம் எருமைக் கன்றுகளில் அதிக பால் தராத எருமைகள் அல்லது மாடுகளில் பால் ஊட்டம் செய்யப்படுகின்றன. இதனால் ஆட்செலவு குறைவதோடு, கன்றுக்கும் நல்ல பாலூட்டம் கிடைக்க ஏதுவாகிறது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுக்களுக்கான கலப்புத் தீவனம் :

தீவனப் பொருள் - அளவு

நசுக்கப்பட்ட பார்லி - 50

கடலைப்புண்ணாக்கு - 30 சதவிகிதம்

கோதுமைத் தவிடு - 8 சதவிகிதம்

மீன்துகள் / கொழுப்பு நீக்கிய பால் பவுடர் / மாமிசக்கழிவு - 10 சதவிகிதம்

தாதுக்கலவை - 2 சதவிகிதம்

கரும்புச்சக்கை - 5-10 கிகி

உப்பு - 500 கிராம்

சோளம், கம்பு, ஓட்ஸ் போன்ற பயிர்களின் தட்டுக்களை வெறுமனே எதுவும் கலக்காமல் கொடுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் ஏதும் கால்நடைகளுக்குக் கிடைப்பதில்லை. மாறாக யூரியா, கரும்புச் சக்கை, உப்பு போன்ற பொருட்களை சேர்த்து நேர்த்தி செய்து அளிக்கும் போது கால்நடைகளுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன. நேர்த்தி செய்த சோளத்தட்டை அளிக்கும் போது எருமைக் கன்றின் எடை 150-200 கி.கி வரை கிடைக்கிறது.

இளம் எருமைகளுக்கான தீவனத் தேவை :

* இளம் எருமையானது நல்ல ஊட்டச்சத்துக்களுடன் முறையாக கவனிக்கப்படவேண்டும். அப்போது தான் அதிலிருந்து ஆரோக்கியமான நல்ல எடையுள்ள கன்று கிடைக்கும். எல்லா விலங்குகளுக்கும், எல்லா காலங்களிலும் நிறைய தீவனம் அளிப்பது சாத்தியமில்லை. எனினும் பசுந்தீவனங்கள் கிடைக்கும் காலங்களில் நல்ல பராமரிப்பு அவசியம்.

* இளம் எருமையை நன்கு கவனிக்க வேண்டும். அதன் உடல் எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவேண்டும். எடை சரியாக இல்லையெனில் தீவன அளவைச் சரி செய்யவேண்டும்.

* இளம் எருமைகளுக்கு 4-7 கி.கிராம் பசுந்தீவனம் நாளொன்றுக்கு அளிக்கப்படவேண்டும். அதனுடன் தானிய வகைகள், அடர் தீவனம் போன்றவை அளிக்கலாம்.

* அம்மோனியா கலந்த வைக்கோல் இருந்தால் அதைத் தரம் குறைந்த தீவனங்களுடன் கலந்து அளிப்பதால் அந்தத் தீவனங்களை கால்நடைகள் விரும்பி உண்ணும். பதப்படுத்தப்பட்ட தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளிக்கலாம்.

* முதல் கன்று ஈனும் இளம் எருமையின் ஒரு நாள் தீவனம் என்பது 1-1.5 கி.கி உலர் தீவனம், 3 கி.கி பசும்புல் மற்றும் 1 கி.கி அடர் தீவனம் ஆகும்.

* எருமைகளின் உடல் எடையை அதிகரிக்க வெறும் வைக்கோல் தீவனம் மட்டும் போதாது. வைக்கோலை அம்மோனியாவுடன் பதப்படுத்திப் பின்பு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்துடன் மாற்றி மாற்றி அளிப்பதே நல்ல ஆரோக்கியமான எருமை வளர்ப்பிற்கு ஏற்றது.

பால் வற்றிய எருமை மாடுகளின் தீவனப் பராமரிப்பு முறை :

பால் வற்றிய சினை எருமைகளுக்குக் கன்று ஈனும் 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே நல்ல முறையான தீவனப் பராமரிப்பு அவசியம். இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், முர்ரா இன எருமைகளில் நடத்திய ஆராய்ச்சியின் படி கன்று ஈனுவதற்கு 2 மாதம் முன்பு அட்டவணையில் காட்டிய உணவில் 125 சதவிகிதம் அளவு தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்போது தான் கன்று நல்ல வளர்ச்சி, எடை மற்றும் ஆரோக்கியத்துடன் பிறக்கும். கன்று ஈன்ற பிறகு 100 சதவிகிதம் அளவு தீவனம் அளித்தால் போதுமானது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment