Sunday 15 April 2018

தென்னை மரத்திலிலுள்ள நீராபானம் உற்பத்திக்கு தயாராகும் விவசாயிகள்..!

தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தென்னை விவசாயிகளுக்கு நீரா பானம் குறித்த ஒரு புரிதல் ஏற்படாமல் இருந்தது. நீராவும் கள்ளும் ஒன்றுதான் என்று கூறிக்கொண்டு விவசாயிகளில் ஒரு தரப்பினர் தங்களது தோப்புக்களில் கள் இறக்கி நேரடி விற்பனை செய்யத்தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் கள் தடை செய்யப்பட்ட பானம். அதை தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்குவதும் அதை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் என்கிற ரீதியில் காவல்துறை கள் இறக்கி விற்பனை செய்யும் விவசாயிகளை கைது செய்து வழக்கு போட்டு வருகிறார்கள்.

அதைக் கண்டித்து தென்னை விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருவதும் வாடிக்கையான விஷயமாகி விட்டது.

இந்நிலையில், நீரா வேறு, கள் வேறு என்பதை விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நீரா உற்பத்தி மாதிரிப் பண்ணைகள் அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள இலுப்பநகரம் மற்றும் பொள்ளாச்சி அடுத்துள்ள பொன்னாலம்மன் துறை ஆகிய இரண்டு இடங்களில் மாதிரிப்பண்ணைகள் அமைக்கவுள்ளது.

ஆனைமலை தென்னை சாகுபடியாளர் நிறுவனம், கொங்குநாடு தென்னை சாகுபடியாளர் நிறுவனம் இரண்டும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் இதுகுறித்து கொங்குநாடு தென்னை சாகுபடியாளர் நிறுவனத்தின் தலைவர் உடுமலை பெரியசாமி கூறியதாவது, 'கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் நீரா உற்பத்தி சிறப்பாக நடந்து வருகிறது. அரசு அலுவலக கேண்டீன்கள், பேருந்து நிலையகடைகள், பொது இடங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் பதப்படுத்தப்பட்டு பாடிலில் அடைக்கப்பட்ட நீரா விற்பனை சக்கை போடு போட்டுவருகிறது. இதனால் கேரள மாநில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

மேலும், நீரா பானம் என்பது கள்ளுக்கும், பதநீருக்கும் இடைப்பட்ட பானம். பதநீர் இறக்குவது போல மண்பானைகளை சீவிய தென்னை மரத்தின் பானைகளில் பொருத்தி நீராவை வடிக்க முடியாது. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யோகப் பெட்டிகளை பொருத்தித்தான் நீராவை சேகரிக்க முடியும். நீரா பானம் எப்போதும் 9டிகிரி சென்டிகிரேட் குளிரில்தான் வைத்திருக்க வேண்டும். அதை தென்னை மரத்தில் பொருத்தி சேகரிக்கும் பெட்டிக்குள் ஐஸ் பெட்டி இருக்கவேண்டும். சேகரிக்கும் நீராவை குளிர்பதன கிடங்குகளுக்கு கொண்டுசெல்லும் வாகனங்களும் குளிர்சாதன வசதி கொண்டிருக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும்போதும் பிரிஸரில்தான் அது இருக்கவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வெளியில் எடுத்த சில நிமிடங்களில் அது கள்ளாக மாறிவிடும். எனவே கள் வேறு. நீரா வேறு. இதை புரியமல் சிலர் இருப்பதால்தான் வீண்பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை புரியவைக்கத்தான் நீரா மாதிரிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு விதிகளின் படி, நீரா பானத்தை தனி மனிதனாக தென்னை மரங்களில் இருந்து இறக்கி யாரும் விற்பனை செய்யமுடியாது. உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளை உறுவாக்கி அதன் வாயிலாகத்தான் விற்பனை செய்யமுடியும்.
என்று தெரிவித்தார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment