Monday 29 October 2018

மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மை :

1. சினை மாடுகளைப் பராமரித்ததல்
2. கன்று ஈனுவதற்கான அறிகுறிகள்
3. சினை ஊசி போடும் நேரம்
4. சினைப்பருவத்தைக் கண்டறியும் இதர வழிமுறைகள்
5. எருமை மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டறிதல்
6. மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிதல்
7. இனப்பெருக்க வயது முதிர்ச்சி
8. சினைப்பருவ காலம்

சினை மாடுகளைப் பராமரித்ததல் :

* சினையுற்றிருக்கும் மாடுகளுக்கு அவற்றினுள் வேகமாக வளரும் கருவிற்காகவும், பிற்கால பால் உற்பத்திக்குத் தேவைக்கான சக்தியைச் சேமித்து வைப்பதற்கும் அவற்றிற்கு அதிகப்படியான தீவனம் அளிக்கப்படவேண்டும்

* சினையுற்றிருக்கும் மாடுகளை அவற்றின் கடைசி சினைக்காலத்தின்போது மற்ற மாடுகளிலிடமிருந்து தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்.

* கன்று ஈனும் கொட்டகையில் சினையுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

* சினை மாடுகளின் கொட்டகையில் போதுமான அளவு வைக்கோல் பரப்பி மாடுகள் படுப்பதற்கு வசதி செய்யவேண்டும்.

* சினை மாடுகளின் கொட்டகைத் தரை வழுக்காமல் இருக்கவேண்டும்.

* மாடுகளின் கடைசி சினைக் காலத்தில் அவற்றுக்கு மலமிலக்கும் தன்மை வாய்ந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.

* மாடுகளில் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்

* மாட்டுப்பண்ணையில் மாடுகளின் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கு பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படவேண்டும்

* மாடுகளின் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நாள், காளையுடன் இனப்பெருக்கத்திற்காக சேர்த்த நாள் மற்றும் கன்று ஈன்ற நாள் போன்ற விவரங்களை பதிவேட்டில் எழுதி வைத்திருக்கவேண்டும்

* இந்த விவரங்களைக் கொண்டு மாடுகள் சினைப்பருவத்திற்கு வரும் உத்தேச நாளைக் கணக்கிட்டு மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்கவேண்டும்

* பெரிய மாட்டுப் பண்ணைகளில் சினைப்பருவத்தைக் கண்டறியும் காளைகளைப் பயன்படுத்தலாம்

* ஒவ்வொரு மாட்டினுடைய முழுமையான இனப்பெருக்க வரலாறு, முந்தைய இனப்பெருக்கத்திறன், இனப்பெருக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவற்றை முறையாக குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்

* மாடுகளின் ஒழுங்கற்ற சினைப்பருவம், அவற்றின் பிறப்புறுப்பில் இருந்து வெளிவரும் திரவ ஒழுக்கின் நிற மாறுபாடு போன்றவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கவேண்டும்.

* நஞ்சுக்கொடி போடாத மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்து, அடுத்த முறை அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கு முன்பு அவற்றின் இனப்பெருக்க உறுப்பை பரிசோதித்து ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

* பண்ணை மேலாளர் மாடுகளுக்கு சினை ஊசி போட்ட 24-36 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றின் பிறப்புறுப்பில் இருந்து சினைப்பருவ காலத்தின் மத்திய பகுதியில் ஏற்படும் இரத்த ஒழுக்கு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவேண்டும்.

* இவ்வாறு இரத்த ஒழுக்கு சினை ஊசி போட்ட 24 மணி நேரம் கழித்துத் தென்பட்டால் மாடுகள் மிகவும் தாமதமாக கரூவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

* கருவூட்டல் செய்யப்பட்டு 36மணி நேரம் கழித்து இரத்த ஒழுக்கு காணப்பட்டால் மாடுகள் மிகவும் முன்பாகவே கருவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம்.இதனை வைத்து மாடுகள் கருவுறாததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

* கருவூட்டல் செய்து 45-60 கழித்து மாடுகளுக்கு சினைப்பரிசோதனை செய்யவேண்டும்.அவை சினையாக இல்லையெனில், மீண்டும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

* காளைகள் மூலம் இனவிருத்தி செய்வதை விட செயற்கை முறைக் கருவூட்டல் மூலம் மாடுகள் கருவுறும் விகிதம் குறைந்தால், செயற்கைமுறை கருவூட்டல் செய்த நேரம், செய்த முறை, விந்தின் தன்மை போன்றவற்றை பரிசோதிக்கவேண்டும்.

* மாடுகளுக்கு முறையான உடல்நலப்பராமரிப்பு, நோய்ப்பரிசோதனை மற்றும் நோய்களுக்கெதிரான தடுப்பூசி அளித்தல் மிகவும் அவசியமாகும்.

* சினைப்பருவ அறிகுறிகள் வெளிப்படுத்தும் காலம் ஒழுங்கற்று இருந்தால் மாடுகளுக்கு நீர்க்கட்டிகள் கருமுட்டைப்பையில் இருக்கின்றன என்று அர்த்தம். சினைப்பருவ அறிகுறிகளுக்கு இடையில் குறைந்த மற்றும் நீண்ட கால இடைவெளி இருந்தால் சினைப்பருவத்தை முறையாகக் கண்டறியவில்லை என்று அர்த்தம்.

* ஊமை சினை அறிகுறிகள்-சில மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் நன்றாக வெளிப்படுத்தப்படாமலும், அறிகுறிகளே வெளியில் தெரியாமலும் இருக்கும்.

* ஊமை சினைப் பருவ அறிகுறிகள் எருமைகளில் பொதுவாகக் காணப்படும். ஆனால் சினை முட்டை வெளியேறுவது எப்போதும் போலவே இருப்பதால் இந்த எருமைகளை கருவூட்டல் செய்யும் போது அவற்றுக்கு சினை பிடிக்கும்.

* ஆனால் மாடுகளில் சினைப்பருவ காலத்தில் கருமுட்டைப்பையில் சாதாரணமாக ஏற்படும்மாற்றங்களே ஏற்படும். ஆனால் பழக்க வழக்க மாறுபாடுகளும்,இனப்பெருக்கத்தினை ஏற்றுக்கொள்ளும் திறனும் மாறுபடும்

* இந்த மாறுபாடு வெயில் காலங்களில் மற்ற பருவ காலங்களை விட அதிகமாகவும், கிடேரிகளில் அதிகமாகவும் காணப்படும்.

* சரிவிகிதத் தீவனமளித்தல், முறையான வெயில் கால மேலாண்மை, சினைப்பருவத்தைக் கண்டறியும் காளைகளைப் பயன்படுத்துதல் போன்றவை ஊமை சினைப்பருவத்தைக் கண்டறியும் பல்வேறு முறைகளாகும்.

* சினைப்பருவத்திற்கு வராமல் இருப்பது கருமுட்டைப்பை முதிர்ச்சி அடையாமல் இருப்பதாலோ அல்லது கார்பஸ் லுயூட்டியம் எனும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதாலும் ஏற்படுகிறது. முந்தைய நிலையில் கருமுட்டைகள் உருவாவதில்லை எனவே கிடேரிகள் சினைப்பருவத்திற்கு வருவதில்லை.

* கருமுட்டைப்பைகள் முதிர்ச்சி அடையாததற்கான முக்கிய காரணம் சத்துக்குறைபாடாகும். இது தவிர மரபியல் காரணங்களும் கருமுட்டைப்பைகள் முதிர்ச்சி அடையாததற்கு காரணமாகின்றன.

* கார்பஸ் லுயூட்டியம் எனப்படும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதற்கு பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளும் சரிவிகிதமற்ற தன்மையும் காரணமாக இருக்கிறது. இவ்வாறு நிலையாக இருக்கும் கார்பஸ்லுயூட்டியத்தால் மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவது தடுக்கப்படுகிறது. இதற்கான பொதுவான காரணம் நஞ்சுகொடி தங்குதலும்,கருப்பையில் நோய்த் தொற்றுகளுமாகும்.

* கன்று ஈன்ற பிறகு சிறிது காலத்திற்கு மாடுகள் பால் கொடுப்பதால், சினைப்பருவத்திற்கு வருவதில்லை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்று ஈனுவதற்கான அறிகுறிகள் :

* கன்று ஈனும் மாடுகள் மற்ற மாடுகளில் இருந்து தனியே பிரிந்து காணப்படும்.

* தீவனம் எடுக்காமல் அயற்சியுடன் காணப்படுதல்

* மடி மற்றும் மடிக்காம்புகள் வீங்கி, காம்புகளில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிதல்

* மாடுகளின் இடுப்பின் தசை நார்கள் கன்று ஈனுவதற்கு ஒரு நாள் முன்பாகத் தளர்ந்து காணப்படுதல். வாலின் அடிப்பகுதியில் தசை நார்கள் வலுவிழந்து தளர்ந்து காணப்படுவதால் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோன்றுதல்

* பிறப்புறுப்பு வீங்கி தொளதொளவென்று காணப்படுதல்.

* மாடுகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டு பின்புறம் நோக்கி உதைத்துக்கொண்டு இருத்தல்.

* கன்று ஈனுதல் மூன்று நிலைகளாக நடைபெறும்.1.தயாரிப்பு நிலை (கருப்பை சுருக்கம் மற்றும் கருப்பையின் வாய் விரிவடைதல்)2.கன்றை வெளித்தள்ளும் நிலை 3. நஞ்சுகொடியினை வெளியேற்றல்.

* முதல் நிலை ஏற்பட்ட 12 மணி நேரத்திற்குள் மாடு கன்றினை ஈனும் கன்று ஈன்றவுடன் மாடுகள் நஞ்சுகொடியினை வெளித்தள்ளுகின்றனவா என்பதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். நஞ்சுக்கொடியினை மாடு வெளித்தள்ளியவுடன் நஞ்சுகொடியினை மாடு தின்றுவிடுவதைத் தவிர்ப்பதற்காக அதனை முறையாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

சினை ஊசி போடும் நேரம் :

* சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தி 12 மணி நேரம் கழித்து மாடுகளில் சினை முட்டை வெளியேற்றப்படும்.இவ்வாறு வெளியேற்றப்பட்ட சினைமுட்டை சினைக்குழாயை அடைய 6 மணிநேரமாகும்.

* சினை ஊசி போட்டு சில நிமிடங்களுக்குள் விந்து சினைக்குழாயை அடைந்தாலும்,அது பெண் இனப்பெருக்க உறுப்பில் 6 மணி நேரமாவது இருந்தால் தான் கருவுறுதலை ஏற்படுத்தும் திறனைப் பெறுவது சாத்தியம் கருவுறுதலுக்கு விந்தினைத் தயார் செய்வது கெப்பசிடேட்டிங் எனப்படும்

* பெண் இனப்பெருக்க உறுப்பில் விந்து 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். ஆனால் சினை முட்டை அது வெளி வந்த 10 மணி நேரம் வரைதான் உயிரோடிருக்கும்

* எனவே தான் சினை ஊசியினை மாடுகள் அவற்றின் சினைப்பருவத்தின் மத்தியில் இருக்கும்போது மாடுகளுக்குப் போடவேண்டும்

* பொதுவாக மாடுகள் தங்கள் சினைப்பருவ அறிகுறிகளை காலையில் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு மாலையில் செயற்கை முறைக் கருவூட்டல் அல்லது சினை ஊசி போடவேண்டும்

* கன்று ஈன்ற 30-40 நாட்கள் கழித்து மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். கன்று ஈன்று 50 நாட்கள் கழித்தும் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை எனில் மாடுகளுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். எனவே மாடுகளை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்

* எருமைகள் சினைப்பருவத்தின் சரியான நிலையிலிருக்கும்போது அவற்றுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யவேண்டும்.ஆனால் எருமைகள் வெளிப்படுத்தும் சினைப்பருவ அறிகுறிகளைப்பற்றி நன்றாக அறிந்திருப்பது மிகவும் நல்லது

* எருமைகள் சினைப்பருவத்தின் சரியான நிலையிலிருப்பதை அவற்றின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வெளி வரும் திரவ ஒழுக்கின் நிறம் மாறியிருப்பதை வைத்துக் கண்டறியலாம். இந்த திரவ ஒழுக்கு எருமைகளின் முந்தைய சினைப்பருவத்தில் நிறமற்று கண்ணாடி போன்றும், சினைப்பருவத்தின் பிந்தைய நிலையில் வெள்ளையாகவும் இருப்பதை வைத்து அவை சினைப்பருவத்தின் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்டறியலாம்

* சினைப் பருவத்தின் மத்திய நிலையில் எருமைகளின் பிறப்புறுப்பின் இதழ்கள் வீங்கி அவற்றுக்கு இடையில் ஒரு சிறிய திறப்பு காணப்படும். மேலும் அந்த இதழ்களின் உட்பகுதியில் எண்ணெய் தடவியது போன்று காணப்படும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினைப்பருவத்தைக் கண்டறியும் இதர வழிமுறைகள் :

* இனப்பெருக்க காலத்தில் மாடுகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் திரவ ஒழுக்கின் கிளை போன்ற அமைப்பை வைத்து மாடுகள் சினைப்பருவத்தில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம்

* சினைப்பருவத்தைக் கண்டறிவதற்கென்றே பல்வேறு உபகரணங்கள் உள்ளன.இந்த உபகரணங்கள் மாடுகளின் வால் மற்றும் முதுகுப்பகுதியில் இணைக்கப்பட்டு சினைப்பருவத்தில் இருப்பது கண்டறியப்படுகிறது

* சினைப்பருவத்தில் மாடுகள் மற்ற மாடுகளின் மீது தாவும்போது இந்த உபகரணங்களில் இருந்து நிறமூட்டப்பட்ட திரவம் வடியும்.இதனை தூரத்தில் இருந்து கூட பார்க்கமுடியும்.

* சின் காளை இனப்பெருக்க கண்டறியும் உபகரணம் மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.பந்து முனைப் பேனா செயல்படும் முறையில் இந்த உபகரணம் செயல்படுகிறது.இந்த உபகரணம் சினைப்பருவத்தைக் கண்டுபிடிக்கும் காளைகளின் கழுத்து சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்

* இந்த காளைகள் சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளின் மீது ஏறும்போது இந்த உபகரணத்தில் இருக்கும் நிறமூட்டப்பட்ட திரவம் மாடுகளின் முதுகில் வடிந்து விடும்.இதிலிருந்து சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளைக் கண்டறியலாம்

* ஓம் மீட்டர் மற்றும் எலெக்ட்ரோடுகளைப் பயன்படுத்தி ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் மாடுகளில் சினைப்பருவத்தைக் கண்டறியும் உபகரணம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்

* இந்த உபகரணத்தின் ஒரு பகுதியினை மாடுகளின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கும்போது மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியலாம்

* பீடோமீட்டர் எனப்படும் கருவியும் மாடுகளின் நடமாட்டத்தை அறிய உதவுகிறது

* சினைப்பருவ காலத்தில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இதனை அடிப்படையாகக் கொண்டு பீடோமீட்டர் கருவியை மாடுகளின் கால்களில் பொருத்தி மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியலாம்

* இனப்பெருக்க உறுப்பின் வெப்பநிலையினை கண்டுபிடித்தும் மாடுகள் சினைப்பருவத்திலிருப்பதைக் கண்டறியலாம்

* சினைப்பருவத்தில் இருக்கும்போது மாடுகளின் இனப்பெருக்க உறுப்பின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.ஆனால் இம்முறை பொதுவாக பின்பற்றப்படுவதற்கு ஏற்றதல்ல

* பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை காரணங்களால் மேற்கூறிய முறைகளில் சினைப்பருவத்தை மாடுகளில் கண்டறிவது வளரும்நாடுகளில் சாத்தியமல்ல

* வளரும் நாடுகளில் மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளைப் பயன்படுத்தி மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியலாம்

* பெரிய பண்ணைகளில் மாடுகளை காளைகளுக்கு அருகில் ஓட்டிச் சென்று மாடுகள் சினைக்காலத்தல் இருப்பதைக் கண்டறியலாம்.சினைப்பருவத்தினைக் கண்டறிய இனப்பெருக்கம் செய்ய முடியாதவாறு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காளைகளைப் பயன்படுத்தலாம்

* இனப்பெருக்கம் செய்ய முடியும் காளைகளின் ஆணுறுப்பின் மீது துணி அல்லது சாக்கினைப் பொருத்தியும் மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தலாம்

* சினைப்பருவத்தைக் கண்டறியப் பயன்படுத்தும் காளைகளுக்கு எந்தவொரு நோய்த்தொற்றும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

எருமை மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டறிதல் :

மற்ற மாடுகளின் மீது தாவுதல்,மற்ற மாடுகளைத் தங்கள் மீது தாவ அனுமதித்தல் போன்ற அறிகுறிகள் சினைப்பருவகாலத்தில் இருக்கும் பசுமாடுகள் வெளிப்படுத்தும். ஆனால் எருமை மாடுகளில் இந்த அறிகுறிகள் காணப்படாது.

சினைப்பருவகாலத்தில் இருக்கும் எருமைகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கும் மாடுகளைப் போல காணப்படாது. திடீரென இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு ஏற்பட்டு அது கீழே விழுந்துவிடும்.இவ்வாறு ஏற்படும் திரவ ஒழுக்கு குறைந்த அளவே இருக்கும்

சினைப்பருவ காலத்தில் இருக்கும் சில எருமை மாடுகள் கத்தவும் செய்யாது. குறிப்பாக அதிக பால் உற்பத்தி செய்யும் எருமைகள் ஊமை சினைஅறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்தும்.

எருமைகளில் காணப்படும் சினைப்பருவ அறிகுறிகள் பின்வருமாறு :

* இனப்பெருக்க உறுப்பு சிவந்து, வீங்கிக் காணப்படுதல். இனப்பெருக்க உறுப்பின் கீழ்ப்புறம் எண்ணெய் தடவினாற் போன்று காணப்படுதல். இனப்பெருக்க உறுப்பின் இரண்டு இதழ்களும் விரிந்து காணப்படுதல்

* சினைப்பருவ அறிகுறிகள் இல்லாத காலத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறைந்துவிடுதல்

* இனப்பெருக்க உறுப்பின் உட்புறச்சவ்வு, சிவந்து, ஈரமாக கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுதல்

* சினைப்பருவகாலத்தின் முன்னும் பின்னும் எப்போதாவது இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு காணப்படுதல்

* இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் கோழை போன்ற திரவத்தின் நிறம்,தன்மை மற்றும் அதிலுள்ள கோழையின் அமைப்பு போன்றவற்றை வைத்து எருமைகள் சினைப்பருவகாலத்தின் எந்த நிலையில் உள்ளன என்பதைக் கண்டறியலாம்

* பால் உற்பத்தி செய்யும் எருமைகள் சினைப்பருவ காலத்தில் இருந்தால் அவற்றின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் விளைவாக மடிக்காம்புகள் வீங்கிக் காணப்படும்

* அடிக்கடி சிறுநீர் கழித்தல். சிறுநீரானது குறைந்த அளவில் இனப்பெருக்க உறுப்பு மற்றும் மடிக்கு மேல் உள்ள தோல் பகுதியினை நனைக்கும் அளவிற்கு மட்டுமே இருக்கும். இப்பகுதியில் பட்ட சிறுநீர் காய்ந்து வெள்ளையாக இருக்கும்.

* சினைப்பருவத்தில் இருக்கும் எருமை மாடுகள் அமைதியின்றி, தீவனம் எடுக்காமல், தலையைத் தூக்கிக்கொண்டு இருக்கும்

* உள்ளூர் எருமை மாட்டினங்கள் அடிக்கடி கத்திக்கொண்டு,தீவனம் எடுக்காமல் இருப்பது சினைப்பருவகால அறிகுறியாகும்.இவற்றின் பால் உற்பத்தி குறைவாகவும் காணப்படும்.

* எருமை மாடுகள் சில சமயங்களில் பற்களை வெளியே காட்டிக்கொண்டு கத்துவதும் சினைப்பருவ காலத்தின் முக்கிய அறிகுறியாகும்

* 49% எருமை மாடுகளில் இனப்பெருக்க உறுப்பிலிருந்து கோழை வடிவது காணப்படும். சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நாளில் மட்டுமே திரவஒழுக்கு ஆரம்பித்து பிறகு நாள் ஆக ஆக அதன் நிறம் வெள்ளையாக மாறி, தடிமனாகவும் மாறும்

* 60-70% எருமை மாடுகள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் சினைப்பருவத்திற்கு வரும் (சூரியன் உதித்த பிறகு, சூரியன் மறைவதற்கு முன்பாக)

* எருமைகள் பொதுவாக இரவு நேரத்தில் இனப்பெருக்கம் செய்யும் என்பதை மனதில் கொண்டு எருமைகளைப் பராமரிக்கும் வேலையாட்கள் காலையிலும் மாலையிலும் எருமைகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதை கண்காணிக்கவேண்டும்

* இனப்பெருக்கம் செய்யமுடியாதவாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காளைகளைக் கொண்டும் எருமைகள் சினைப்பருவத்தில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம்

மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பதைக் கண்டறிதல் :

சினைப்பருவக்காலத்தில் இருக்கும் மாடுகள் தங்கள் மீது மற்ற மாடுகளைத் தாவவும், ஏறவும் அனுமதிப்பது சினைப்பருவ காலத்தின் முக்கியமான அறிகுறியாகும்.

இதனை மாடுகள் சினைப்பருவகாலத்தில் இருப்பதைக் கண்டறியும் பொறுப்பில் இருப்பவர் முறையாக கவனித்து,தங்களுடைய அனுபவம் மூலம் அறிந்து மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கவேண்டும்

சினைப்பருவ காலத்தில் இருக்கும் மாடுகள் மற்ற மாடுகளை தவிர்த்து தங்களின் அதிகாரத்தை மற்ற மாடுகளின் மீது வெளிப்படுத்தும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சினைப்பருவ அறிகுறிகள் :

* சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாடுகள் கொட்டகையிலுள்ள மற்ற மாடுகளை விட சீக்கிரம் எழுந்திருக்கும்

* மாடுகள் தீவனம் சரியாக எடுக்காமல், அடிக்கடி கத்திக்கொண்டு எப்போதாவது மட்டுமே அசைபோடுவதுடன்,அமைதியின்றிக் காணப்படும்

* பால் உற்பத்தி திடீரெனக் குறைந்துவிடும்

* காளை மாடுகளைத் தேடும்

* ஒரினச்சேர்க்கை அறிகுறிகளை வெளிப்படுத்தம் விதமாக சினைப்பருவ காலத்திலிருக்கும் மாடுகள், சினைப்பருவத்தில் இல்லாத மற்ற கறவை மாடுகளின் மீது ஏறும்

* காளை தன் மீது ஏறுவதற்கு சினைப்பருவத்தில் இருக்கும் மாடுகள் அனுமதிக்கும்

* காளைகள் தன் மீது ஏறும்போது சினைப்பருவத்தில் இருக்கும் மாடுகள் அமைதயாக இருக்கும். இது சினைப்பருவ காலத்தில் மாடுகள் இருப்பதற்கான உறுதியான அறிகுறியாகும்

* இந்த அறிகுறிகள் 14-16 மணி நேரத்திற்கு நீடிப்பதுடன், இதர சினைப்பருவகால அறிகுறிகளான அமைதியின்றி இருத்தல்,கத்துதல், தீவனம் எடுக்காமல் இருத்தல், பால் உற்பத்திக் குறைவு போன்ற இதர அறிகுறிகளும் காணப்படும்

* சினைப்பருவ காலத்திலிருக்கும் மாடுகளின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் கண்ணாடி போன்ற திரவம் மாடுகளின் வாலில் ஒட்டிக்கொண்டிருக்கும்

* சினைப்பருவ காலத்தின் முதல் நிலையில் , இனப்பெருக்க உறுப்பிலிருந்து வடியும் திரவம் தண்ணீர் போன்றும், பிறகு தடிமனாகவும் மாறும். சினைப்பருவ காலத்தின் கடைசி நிலையில் இத்திரவம் கடினமாகவும் நிறம் மாறியும் காணப்படும்

இனப்பெருக்க வயது முதிர்ச்சி :

* கால்நடைகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகி, இதர இனப்பெருக்கப்பண்புகள் வெளிப்படுதலே இனப்பெருக்க வயது முதிர்ச்சியாகும்

* இனப்பெருக்க வயது முதிர்ச்சியடைந்த கால்நடைகள் இனப்பெருக்கத்திற்கு தயாரக இருக்கிறது என்று அர்த்தம்

* இனப்பெருக்கத்திற்கு தயாரான கிடேரிகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். காளைகள் விந்துக்களை உற்பத்தி செய்யும்

* இனப்பெருக்க வயது முதிர்ச்சி அடைந்த மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் அளவில் பெரியதாகும்

* நல்ல தரமான தீவனம் அளிக்கப்படும்போது வயது முதிர்ந்த மாடுகளின் எடையில் 66 % எடையினைக் கன்றுகள் அடையும்போது இனப்பெருக்க முதிர்ச்சியினை அடையும்

சினைப்பருவ காலம் :

முன் சினைப்பருவ காலம் – 2-3 நாட்கள்

சினைப் பருவ காலம் - 12-18 மணி நேரம்

சினை முட்டை வெளி வரும் காலம் – சினைப்பருவ அறிகுறிகள் வெளியிட்டு 12-16 மணி நேரம் கழித்து

சினைப்பருவ காலம் – 21+3 நாட்கள்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment