Monday 22 October 2018

கோடைக்கலத்திற்கேற்ற கால்நடைநோய்த் தடுப்புமுறைகள் :

1. கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள்
2. கோடைக்காலத் கால்நடைப் பராமரிப்பு முறைகள்
3. நம் மாநிலக் கால்நடைகளுக்கான காலத்திற்கேற்ற தடுப்பூசி அட்டவணை
4. கேள்வி பதில்

கோடைக்காலங்களில் கால்நடை மற்றும் கோழியினங்களுக்குச் சரியான பசுந்தீவனம் மற்றும் போதுமான குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கால்நடைகளை, அதிகவெப்பத்தின் காரணமாகக் கொட்டிலில் அடைத்து வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாகக் கொட்டிலில் உள்ள சுகாதாரம் மற்றும் காற்றின் தரம் ஆகியவை கால்நடைகளின் நலனில் பெரும் பங்குவகிக்கின்றன. கறவை மாட்டினங்கள் மற்றும் எருமை இனங்களில் கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப உளைச்சல் காரணமாகக் கறவை திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பன்றி மற்றும் கோழியினங்கள் போன்ற உற்பத்திசார் தொழில் முறைகளுக்காக வளர்க்கப்படும்.

கால்நடைகளை வெப்ப உளைச்சல் பெரிதளவில் பாதிக்கிறது. கோடைக்காலப் பிரச்சினைகளான அதிகவெப்பமும் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு கால்நடைகளின் உற்பத்திதிறனை மேம்படுத்துவதற்கான மேலாண்மை முறைகள் இங்குத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள் :

கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள்

அடைப்பான் நோய் :

கால்நடைகளில் விரைவில் மரணத்தை விளைவிக்கும் அடைப்பான் நோய் பேசில்லஸ் அந்தராசிஸ் எனும் நுண்ணுரியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடல் துவாரங்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தொடர்ந்து உடனடி மரணம் ஏற்படும். இவ்வாறாக இறந்த கால்நடைகளின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவ வாய்ப்புள்ளதால், இவற்றை உடனடியாக ஆழ்குழியில் 10 லி சுண்ணாம்பு (அல்லது) சலவை சோடா கரைசலைத் தெளித்துப் புதைத்துவிட வேண்டும். இறந்த கால்நடைகளில் அருகாமையில் இருந்து பிற கால் நடைகளுக்கு முறையான தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

கோமாரிநோய் (கால்வாய் நோய்) :

கோமாரிநோய் மாட்டினங்களை அதிகம் பாதிக்கின்றது. எருமை, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை இந்நோய் பாதித்தாலும் இவற்றில் நோய்க்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே வெளிப்படுகின்றன. இந்நோயால் அதிக அளவில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை இந்நோய்க்கான தடுப்பூசியைக் கால்நடைகளுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும். இந்நோயின் அறிகுறிகளாகக் கால்நடைகளில் வாய், நாக்கு மற்றும் கால் குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கொட்டகைகளில் 10 லி சலவைசோடா அல்லது 0.2 லி சிட்ரிக் அமில கரைசல் ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலைக் தடுக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அம்மைநோய் :

அம்மை நோயானது மாடு, எருமை, ஆடு மற்றும் கோழியினங்களை தாக்கும். நோய்த்தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளில் காய்ச்சலுடன் சிறுகொப்புளங்கள் காம்புப் பகுதிகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையில் இருந்து உடனடியாகப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் கலந்து புண்களின் மீது தடவுதலின் மூலம் இந்நோய், ஈக்கள் மூலம் பிறமாடுகளுக்குப் பரவுவதையும் இதர நோய்க்கிருமிகள் தாக்கத்தையும் தவிர்க்கலாம்.

ஆட்டுக் கொல்லைநோய் (பி.பி.ஆர்) :

இது செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் தாக்கவல்ல வெக்கை நோயினை ஒத்த ஒரு வகை நச்சுகிருமியால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளின் காய்ச்சல் மற்றும் மூக்குச் சவ்வு மற்றும் தொண்டைப் பகுதிகளில் அழற்சியும் ஏற்படும். பாதிக்கப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் சோர்வடைந்து, மெலிந்து நீர்வற்றி மூச்சுக்குழாய் பாதிப்பு மூலம் இறக்க நேரிடும். இந்நோய்க்கான தடுப்பூசி 3-4 மாதத்தில் குட்டிகளுக்கு அளிப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

தொண்டை அடைப்பான் நோய் :

தொண்டை அடைப்பான் நோய் மாடுகளையும், எருமைகளையும் தாக்கும்.

கருச்சிதைவு நோய் :

கருச்சிதைவு நோயால் (புருசெல்லோசிஸ்) பாதிக்கப்பட்ட கால்நடைகளை மந்தையில் இருந்து அறவே நீக்க வேண்டும். இந்நோய்த் தடுப்பூசி சரியான காலத்தில் அளிக்கப்பட வேண்டும். இந்நோய் மனிதர்களுக்கும் பரவும் தன்மை உடையது.

தொற்றும் வாய்ககொப்புளநோய் (ஒர்ப்) :

ஆடுகளில் பரவலாகக் காணப்படும் இந்நோய் அம்மை வகையினைச் சார்ந்த ஒருவகை நோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நம் நாட்டில் தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளை உடனுக்குடன் தனியே பிரிக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் :

இந்நோய்க்குப் பன்றிக்காலரா என்ற மறு பெயரும் உண்டு. இது காலரா போன்ற கொடிய நோயாகும். 90 விழுக்காட்டிற்கு மேல் திடீர் இறப்பு ஏற்படும். மேலும் இது தீவிரமாகப் பரவும் தன்மை உடையதால் பாதிக்கப்பட்ட பன்றிகளை உடனடியாக பண்ணைக் கொட்டகைகளில் இருந்து நீக்கம் செய்தல் வேண்டும்.

கால்நடைகளில் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடைநோய் ஆய்வுக்கூடங்கள், மாதாவரம் பால்பண்ணை, நாமக்கல், தலைவாசல் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ளன. இவை மட்டுமேயன்றித் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத்துறையின் கால்நடை நோய்ப் புலனாய்வு பிரிவு எல்லா மாவட்டத் தலைநகரிலும் இயங்கிவருகிறது. இவ்வனைத்துப் பிரிவுகளும் நோய் காரணிகளைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையைப் பரிந்துரைக்கத் தயார் நிலையில் உள்ளன. கால்நடைப் பண்ணையாளர்கள் மேற்குறிப்பிட்ட நோய் ஆய்வுக்கூடங்களையோ அல்லது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களைத் தொடர்பு கொண்டு தக்க ஆலோசனைகளை பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோடைக்காலத் கால்நடைப் பராமரிப்பு முறைகள் :

* கொட்டிகள் சரியான காற்றோட்ட வசதியோடு அமைக்க வேண்டும்.

* சூரிய ஒலி நேரிடையாக படாத வண்ணம் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் கொட்டில்களில் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.

* கொட்டிகளின் கூரைகளை வெண்மை நிற வண்ணப்பூச்சி செய்தல் மூலம் வெளிப்புற வெப்பம், உள்ளே வராமல் தடுக்கலாம்.

* அதிகமான வெப்பம் நிலவும் நேரங்களில் கொட்டிகளின் உள்ளே மின்விசிறி, தண்ணீர்த் தெளிப்பான் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

* கால்நடைகளுக்கு எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் குளிர்ந்தநீர் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படுமானால் அடர் தீவனங்களின் அளவை உயர்த்திக் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கனிம மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துணை உணவுகளை அடர் தீவனங்களுடன் சேர்த்து அளித்தல் வேண்டும்.

* கொட்டிகளின் தரைகள் தரமாகவும் தண்ணீர் வடியக் கூடிய நிலையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவங்களில் கால்நடைகளை நோய் அறிகுறிகளுக்காக அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

* நோய் அறிகுறி தென்படும் கால்நடைகளை உடனடியாக பிரித்துக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றைப் பராமரிக்கலாம்.

* நோய் அறிகுறி தென்பட்ட கொட்டிலை உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* தினந்தோறும் கொட்டிகளைச் சுத்தப்படுத்தியபின் கிருமி நாசினி கரைசலைத் தெளித்தல் மூலம் நோய்த் தொற்றுகள் பரவாமல் தவிர்க்கலாம்.

* கொட்டிகளில் முறையான சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி உயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.

* கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய நேரத்தில் ஒட்டுண்ணிகளுக்கான பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கல் செய்ய வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நம் மாநிலக் கால்நடைகளுக்கான காலத்திற்கேற்ற தடுப்பூசி அட்டவணை :

இது மட்டுமின்றி அரசால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையின் படி, கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளிக்க வேண்டும்.

* ஜனவரி – பிப்ரவரி கோமாரி நோய்

* மார்ச் - ஏப்ரல் ப்ருசெல்லோசிஸ் (அ) கருச்சிதைவுநோய்

* ஜூன் - ஜூலை கோமாரிநோய்

* ஆகஸ்ட் - செப்டம்பர் (மழைக்காலத்திற்கு முன்பாக) சப்பைநோய்

* செப்டம்பர் -அக்டோபர் தொண்டை அடைப்பான்

* பண்ணையில் இறக்கும் மாடுகளைக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகே, முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* வெளியாடுகளுக்குப் பண்ணையின் உள்ளே அனுமதி மறுத்தலின் மூலம் புதிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கேள்வி பதில் :

1. சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கு தடுப்பூசி போட்டேன். இன்னும் தடுப்பூசி போட்ட இடத்தில் தடித்து இருக்கிறது? தடிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் : மாட்டுக்கு தடுப்பூசி போட்ட உடனே, ஊசி போட்ட இடத்தினை நன்கு கரகர வென்று தேய்த்து விட வேண்டும். அவ்வாறு தேய்த்து விடாமல் விட்டுவிட்டால் தடிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது தடிப்பு உள்ள இடத்தில் ஐயோடெக்ஸ் மருந்தை தடவி நன்கு தேய்த்து ஒத்தடம் கொடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் இதுபோல் செய்யும் போது தடிப்பு காணாமல் போய்விடும்

2. மாட்டுக்கு தடுப்பூசி போடும் சேவையினை செய்து வருகிறேன். தடுப்பூசிகளுக்கும், சேவைக்கும் மானியம் பெற முடியுமா?

பதில் : உங்களின் சேவையினை நாங்கள் பாராட்டுகிறோம். சேவைகளுக்கு இதுவரை கால்நடை சார்ந்த சேவைகளுக்கு மானியம் வழங்கப்பட்டதாக நாங்கள் அறியவில்லை. மாட்டுக்கான தடுப்பூசிகள் கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடைகளிலேயே கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் சரியான விலைக் கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? என்ன செய்ய வேண்டும்?

பதில் : கால்நடை மருந்து விற்பனை செய்யும் மருந்துக்கடைகளில் பாண்டிகைண்ட் அல்லது பானகிர் என்று மாத்திரை கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை வாங்கி ஒரே மாத்திரையை ஒரே நாள் மட்டும் கொடுக்க வேண்டும். அதன் பின்பு இரண்டு நாள் இடைவெளி விட்டு, ஒரு மாதம் வரை தினமும் ஒரு முட்டை ஒட்டோடு கொடுங்கள். அதன் பின்பு ஒன்றிரண்டு வாரங்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள். அப்படியும் சினை நிற்கவில்லை என்றால் ஊசியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment