Monday 13 February 2017

பரண் மேல் ஆடு வளர்ப்பு :

1. வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும்.

2. பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.

3. பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.

4. பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.

5. வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.

6. வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.

7. வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.

8. பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும் வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும் நல்லது.

9. பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு பற்றிய காணொலி : https://www.youtube.com/watch?v=ojEpKD54u04

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment