Monday 27 February 2017


கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 24


கேள்வி :

கறவை மாட்டிற்கு மடி வீக்கமாக உள்ளது, இதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில் :

மடிவீக்கத்தை கட்டுப்படுத்த,

சோற்றுக்கற்றாழை – 1 மடல்
மஞ்சள் தூள் – 1 கரண்டி
சுண்ணாம்பு – 1 கொட்டைப்பாக்கு அளவு

-இந்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு மாட்டியின் மடியிலிருந்து 4 காம்பிலிருந்து பாலை கறந்து எடுத்துவிடவேண்டும். பிறகு அரைத்து வைத்து மருந்தை மடிப்பாகம், காம்பு பகுதிகளில் மருந்தை தடவி விடவேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 10 முறை தடவிவரவேண்டும். குணம் தெரியும்.

கேள்வி :

மாட்டுத்தொழுவத்தை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்?

பதில் :

மாட்டுதொழுவத்தை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாட்டுத்தொழுவம் அருகில் குப்பை, அடைசல் போடக்கூடாது. அவ்வப்போது டெட்டால், பினாயில் போன்றவற்றை தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

கேள்வி :

கன்று மாட்டிடம் அதிகமாக பால் குடித்துவிட்டால் ஒரே கழிச்சலாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

பதில் :

இதற்கு சீரகம், கசகசா, வெந்தயம் தலா – 1 ஸ்பூன்
பெருங்காயம், மஞ்சள்தூள், மிளகு தலா – 1/2 ஸ்பூன்

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சட்டியில் போட்டு வறுத்து 1 பல் பூண்டு, 1 பல் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து பனைவெல்லத்தில் தொட்டு, தொட்டு நாக்கின் மேல் தடவி உள்ளுக்குள் கொடுக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அனைத்து உருண்டைகளையும் உள்ளுக்குள் கொடுத்துவிடவேண்டும்.

faizalpetsfarm.blogspot.com

கேள்வி :

இரண்டு வார கோழிக்குஞ்சு தீனி உண்ணாமல் குன்றிப்போய் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

பதில் :

கீழாநெல்லி இலை – 1 கைப்பிடி
முருங்கைக்கீரை – 1 கைப்பிடி
வருகடலை – 1 கைப்பிடி
சின்ன சீரகம் – அரை கைப்பிடி

இவை அனைத்து நுணுக்கி தூள் செய்து தீவனத்துடன் கலந்து கோழிக்குஞ்சுகளுக்கு வைக்கவேண்டும். இவற்றை உண்ணும் கோழிக்குஞ்சுகள் உடனடியாக குணமடையும்.

கேள்வி :

கன்று போட்டு 3 நாளில் தொப்புள் கொடிவிழுந்துவிட்டது. ஆனால் அந்த இடத்தில் தற்போது கட்டிமாதிரி வீக்கமாக உள்ளது. இதற்கு என்ன செய்வது?

பதில் :

1 பூண்டு, மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அரைத்து 100 மிலி நல்லெண்ணையில் போட்டு கொதிக்கவைத்து இவற்றை ஆறியதும் ஒரு துணியில் வைத்து நழுவாமல் தொப்புள் கொடியில் வைத்து கட்டி வரவும். இப்படி செய்தால் ஒரிரு நாளில் குணமாகிவிடும்.

பதிலளித்தவர் : டாக்டர் N.புண்ணியமூர்த்தி, தலைவர் மற்றும் பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

faizalpetsfarm.blogspot.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment