Wednesday 22 February 2017

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 20


கேள்வி :


மாட்டை முதுகில் கல்லால் அடித்து வீங்கி உள்ளது? வலி அதிகமாகவும் உள்ளது?

பதில் :

வீங்கி உள்ள இடத்தில் “அயோடெக்ஸ்”என்ற களிம்பினை தடவி தவிடு வறுத்து தொடர்ந்து 3-4 நாட்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும்.

கேள்வி :

குடற்புழு நீக்கம் செய்த உடனே சினை ஊசி போடலாமா அல்லது ஒரு வருடம் கழித்து போடலாமா?

பதில் :

சினை ஊசி போடுவதற்கு முன்பாக குடற்புழு நீக்கம் செய்வத மிக நல்லது. குடற்புழு நீக்கம் செய்த பின்பு, வரும் பருவத்தில் சினை ஊசி போடலாம்.

கேள்வி :

கால்நடைகளுக்கு புரதசத்து மிகுந்த உணவுப் பொருட்கள் என்னென்ன?

பதில் :

சூரியகாந்தி, சோயா, நிலக்கடலை, எள்ளு, தேங்காய், பருத்திவிதை முதலிய பிண்ணாக்குகளை அடர்தீவனத்தில் கலப்பதின் மூலம் கால்நடைகளுக்கு வேண்டிய புரதச்சத்து கிடைக்கிறது. பிண்ணாக்கு வகைகளில் முப்பது முதல் நாற்பத்தைந்து விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. அடர்தீவனத்தில் சுமார் முப்பது விழுக்காடு வரைச் சேர்க்கலாம். தானியம் மற்றும் உபபொருட்களின் விலையை விட பிண்ணாக்கு விலை குறைவாக இருப்பின் நாற்பது விழுக்காடு வரை கலக்கலாம். அடர்தீவனத்தில் பல வகைப்பட்ட பிண்ணாக்குகளைக் கலப்பதின் மூலம் கறவைமாடுகளுக்கு வேண்டிய அமினோ அமிலங்கள் சமசீராகக் கிடைக்கிறது.

தகவல் – தமிழ்நாடு கால்நடை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment