Monday 20 February 2017


கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 18


கேள்வி : 

பசு எத்தனை வகைகள் இருக்கின்றன? 24 வகைகள் இருக்கிறதா சொல்கிறார்களே உண்மையா? இறக்குமதி செய்யும் மாட்டிற்கும், நாட்டு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் :

மாட்டு வகைகள் 24 வகைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இறக்குமதியாகும் மாடுகள் நம்ம நாட்டின் தட்பவெப்பநிலைக்கு வரும்போது தடுப்பு சக்தி குறைந்து விடுகின்றன. இதனால் தான் நாம் இறக்குமதி மாட்டு இனத்தை வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டி இருக்கிறது. வெளிநாட்டு மாட்டு இனங்கள் இங்கு வந்து தாக்குபிடிக்கும் சக்தியும் குறையும். மேலும், எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி தடுப்பூசி போட வேண்டியும் இருக்கு. ஹெச் எஸ் சி கருப்பு வெள்ளை மாடுகள் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஏற்றதுஅல்ல. வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். வெயில் காலத்தில் மூச்சு வாங்கும். மேலும் பால் குறைந்து விடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். தீவனம் அதிகளவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஜெர்சி மாடுதான் சரியானவை.

கேள்வி :

நான் வளர்க்கும் மாட்டுக்கு மூன்று வருடமாக சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? மாட்டை விற்று விடலாமா? வைத்துக் கொள்ளலாமா?

பதில் :

ஆறு வயதாகியும் இன்னும் கன்று போடவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை பலவிதமான வைத்தியமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குடல்புழு நீக்கம் செய்யவில்லை என்கிற போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடையில் விற்பனையாகும் பாணக்கியூர் என்ற மாத்திரையை வாங்கி கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, கோழிமுட்டையை ஒட்டுடன் தினமும் ஒன்று விதம் முப்பது நாளைக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்படி இல்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்கள். மேற்சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை என்றால் பாண்டிகைண்ட் என்ற மாத்திரையை வாங்கிக் கொடுங்கள்.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.

மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டிய வழிமுறைகள் :

கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை :

* முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.

இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும். சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் காளையுடன் சேருங்கள் அல்லது செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்.

தகவல் : டாக்டர் N.புண்ணியமூர்த்தி, தலைவர் மற்றும் பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment