Monday 13 February 2017


முயல் வளர்ப்பு பாகம் : 3


கூண்டு முறை :

கூண்டின் உயரம் 50 செ.மீ ஆகவும், அகலம் 70 செ.மீ நீளம் 90 செ.மீ ஆகவும் இருத்தல் வேண்டும். இது பெண் முயல்களுக்கான கூண்டின் அளவு. ஆண் முயல்களுக்கு இவை முறையே 45 செ.மீ, 60 செ.மீ, 60 செ.மீ. கூண்டு செய்யும் கம்பி அளவு அடிப்பாகத்தில் 1 செ.மீ x 1 செ.மீ பக்கங்களில் 2.5 செ.மீ x 2.5 செ.மீ அளவும் இருக்கவேண்டும். கூண்டின் அடிப்பாகம் தரைமட்டத்தில் இருந்து 75-90 செ.மீ உயரத்தில் இருக்குமாறும், எலி, பாம்பு தொல்லைகள் இல்லாதவாறும் கூண்டுகளை வைக்கவேண்டும். கூண்டுகள் நல்ல குளிர்ந்த நிழற்பாங்கான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.

கொட்டில் முறை :

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட முயல் குட்டிகளை 1.2 மீட்டர் அகலம், 1.5 மீ நீளம், 0.5 மீ உயரம் கொண்ட கொட்டிலில் அடைக்கலாம். ஒரு கொட்டிலில் 20 குட்டிகள் வரை அடைக்கலாம். பருவமடைந்த ஆண், பெண் குட்டிகளை ஒரு கொட்டிலில் அடைத்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே ஒவ்வொன்றையும் தனியே அடைத்தல் சிறந்தது.

குடிசை முறை :

நிழலான இடத்தில் குடிசைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தரை கான்கிரீட் சிமெண்ட் தளமாக இருத்தல் நலம். குடிசையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் சிறிது உயரத்துடன் பாம்பு, எலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும். மேற்கூரை, மரக்கட்டை, ஆஸ்பெஸ்டாஸ் அல்லது இரும்புக் கம்பிகள் கொண்டதாக இருக்கலாம்.

பறவைக்கூடு முறை :

இம்முறையில் பல அளவுகளில் கூடுகள் இருந்தாலும் 50 செ.மீ நீளமும், 30 செ.மீ அகலமும், 15 செ.மீ உயரமும் கொண்ட அளவு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தால் செய்யப்பட்டாலும் காற்றும், வெளிச்சமும் புக வசதியாக இருக்கவேண்டும். கழிவுகள் வெளியேற வசதியாகக் கீழே கம்பி வலை போல் பின்னப்பட்ட அடிப்பாகம் அமைக்கலாம்.

தீவனமும் நீரும் :

அலுமினியம் அல்லது கால்வனைசிங் செய்யப்பட்ட இரும்பினால் ஆன தீவனத்தொட்டியைப் பயன்படுத்தலாம். தீவனத் தொட்டியானது கூண்டின் ஓரங்களில் வெளியிலிருந்து கதவைத் திறக்காமலே தீனியை உள்ளே கையைவிட்டுப் போடுமாறு அமைப்பது நன்று. கூண்டுகளில் நீர் வைக்க மண்பானைகள் உபயோகிக்கப்படுகின்றன.தானாக நீர் வெளியாகும் குழாய் அல்லது புட்டியில் நீர் அளிப்பதே சிறந்தது.

முயல்களின் தீவனத் தேவை :

முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும். பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.

வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் :

குட்டிகளுக்கான வளர்ச்சிக்கெனப் பல உயிர் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனம் வயது அதிகரிக்க அதிகரிக்க அளவு குறையும். உட்கொள்ளும் தீவனத்தை விட அதிகமாகவே வளர்ச்சியடையும் குட்டிகளுக்கான தீவனம் அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் எளிய தீனிகளை நாமே தயாரித்து அளிக்கலாம்.

22 சதவிகிதம் பண்படா புரதமுள்ள குட்டிகளுக்கான தீனியில் அடங்கியுள்ள பொருட்கள் :

பொருட்கள் - அளவு :

ஓட்ஸ் (அரைத்தது) - 19.0

கோதுமை (அரைத்தது) - 10.0

பார்லி (அரைத்தது) - 10.0

கோதுமை தவிடு - 6.4

சோயாபீன் கழிவு - 12.0

மீன் கழிவு - 3.2

குதிரை மசால் (ஹைட்ரஜன் ஒடுக்கம் செய்யப்பட்ட) - 23.7

ரேப்ஸ்டு கழிவு - 2.5

உலர்ந்த தயிர்த் தெளிவு - 4.0

நொதித்து உலர்ந்த ஈஸ்ட் - 3.0

கரும்புச்சக்கை - 1.0

அயோடைஸ்டு உப்பு - 0.5

வைட்டமின்கள், தாதுக்களின் கலவை - 0.775

டிஎல் மெத்தியோனைன் - 0.07

வாசனைத் தீவனம் - 0.05

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment