Monday 13 February 2017

முயல் வளர்ப்பு பாகம் : 8


முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும் :

1. நோயின் பெயர் : முயல் நச்சுயிரி நோய்

காரணிகள் : வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது

அறிகுறிகள் : கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு

சிகிச்சை / மருந்துகள் : சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது.

குறிப்புகள் : இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். சில நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன

2. நோயின் பெயர் : பாஸ்சுரேல்லா நுண்ம நோய்

காரணிகள் : பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா)

அறிகுறிகள் : மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

சிகிச்சை / மருந்துகள் : சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின்

3. நோயின் பெயர் : இரத்தக் கழிச்சல் நோய்

காரணிகள் : புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே

அறிகுறிகள் : பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல்

சிகிச்சை / மருந்துகள் : சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன்

4. நோயின் பெயர் : கோழை குடல் அழற்சி

காரணிகள் : எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை

அறிகுறிகள் : வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும்.

சிகிச்சை / மருந்துகள் : சிறந்த தடுப்பு முறைகள் ஏதுமில்லை.

5. நோயின் பெயர் : மடிவீக்க நோய்

காரணிகள் : ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ்

அறிகுறிகள் : சிவந்த, ஊதா நிற நாளங்கள்

சிகிச்சை / மருந்துகள் : எதிர் உயிர்ப்பொருள்

6. நோயின் பெயர் : காது சொறி

காரணிகள் : சோரோஃபீட்ஸ் குனிகுளி

அறிகுறிகள் : தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும்

சிகிச்சை / மருந்துகள் : பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்). காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும்.

7. நோயின் பெயர் : உருளை நாடா

காரணிகள் : பூஞ்சான் (டிரைக்கோபைட்டான் மைக்ரோஸ்போரான்)

அறிகுறிகள் : முடிகள் உடலின் சில பகுதிகளிலிருந்து உதிர்ந்து விடுவதால் அங்கங்கே சொட்டையாகக் காணப்படும்

சிகிச்சை / மருந்துகள் : கிரிசியோஃபல்வான்

8. நோயின் பெயர் : உடல் சொறி / சொறி நோய்

காரணிகள் : நோட்டிரஸ் கேட்டி

அறிகுறிகள் : காது மற்றும் மூக்கிலிருக்கும் முடி விழுந்துவிடும். முன்னங்கால்களால் காது மற்றும் முகங்களை பிராண்டிக் கொள்ளும்.

சிகிச்சை / மருந்துகள் : பாதிக்கப்பட்ட இடங்களில் பென்சைல் பென் சோயேட் மருந்தை தடவலாம். 2.5 கிலோ எடல் எடையுள்ள முயலுக்கு 0.1 மிலி ஐவர்மெக்டின் மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

9. நோயின் பெயர் : பின்னங்கால் புண் (அல்சரேட்டிவ்போ டோடெர்மாடிட்டிஸ்)

காரணிகள் : முயல்கள் கூண்டுகளின் கம்பித் தரையில் நிற்கும் போது உடல் எடை தாளாமல் கால்களில் புண் ஏற்படும். இப்புண்பட்ட இடங்களில் திசுக்கள் அழிந்து விடுவதால் வலி ஏற்படும்.

அறிகுறிகள் : கணுக்கால் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, அழற்சி போன்று உடலில் தோன்றுகிறது. எடைகுறைதல், பின்பகுதியில் வீக்கம் ஏற்படுதல், காலை சாய்த்து நடக்கும்.

சிகிச்சை / மருந்துகள் : ஜிங்க் அயோடின் களிம்பு மற்றும் 0.2 சதவிகிதம் அலுமினியம் கரைசல் மேலும் பரவாமல் தடுக்க, நுண்ணுயிர்க்கொல்லியைப் பயன்படுத்தலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment