Monday 13 February 2017


கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 14



கேள்வி :

வான் கோழி வளர்ப்பு லாபம் தருமா?

பதில் :

வான்கோழி வளர்க்கலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த கோழி விற்பனையிலும் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் முன்னரே, திட்டமிட்டு , உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில் ஒப்பந்தம் செய்துக் கொண்டு வான்கோழி வளர்ப்பது நல்லது.

கேள்வி :

குளக்கரை கோழிக்கு தடுப்பூசி கிடைக்க மாட்டேன் என்கிறது? எங்கு தடுப்பூசி கிடைக்கும்?

பதில் :

கோழிக்கு தடுப்பூசி அரசு மருத்துவமனை மட்டுமே கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி :

பண்ணை கோழி குஞ்சு வாங்கி வளர்த்து வருகிறேன். ஆனால் இவ்வாறு வாங்கி வளர்க்கும் போது சிக்கிரமே இறந்து விடுகின்றன. இதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் :

நீங்கள் பத்து குஞ்சுகள் வாங்கி வளர்ப்பது கொஞ்சம் ரிஸ்க் தான். இவ்வாறு வாங்கி வளர்க்க ஆரம்பிக்கும் போது, உடனே கூடையில் போட்டால் மூடினால், தேவையான வெப்பம் அல்லது குளிர் காற்றின் வாடையால் கூட இறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதனைத்தவிர்க்க, ஒரு அறையில் பல்ப் மிகவும் கீழே புறத்தில் இருக்கும் வகையில், அமைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது, அந்த கோழிகுஞ்சுகளுக்கு தேவையான வெப்பம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு வளர்த்துபின்பு வெளியே விட்டுவிடுங்கள்.

கேள்வி :

ஊரில் இருந்து வான்கோழி வாங்கி வளர்த்து வருகிறோம். இதன் எடைகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன?

பதில் :

வேகவைத்த அவுச்ச கோழி முட்டையை தினமும் இரண்டினை கொடுங்கள். இதன் மூலம் வான்கோழியின் எடைகூடும்.

கேள்வி :

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முட்டை வாங்கி Incubator பொறிக்க வைக்கலாமா? மின்சாரம் எவ்வளவு செலவு ஆகும்?

பதில் :

நாட்டு கோழி முட்டைகள் அதிக அளவில் கிடைப்பதில்லை. நாட்டு கோழி முட்டைகள் கிடைக்கும் போது சேர்த்து வைத்து அடைகாக்கும் கோழிகளில் வைப்பது மிகவும் சிறந்தது. மின்சாரம் அடைகாக்கும் கருவி (INCUBATOR)யில் வைப்பதற்கு குறைந்தபட்சம் 100 அல்லது 200 கோழி முட்டைகள் தேவைப்படும். மின்சாரம் அதிகமாக செலவாகது.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment