Tuesday 14 February 2017

கூமுட்டையை கண்டுபிடிக்கும் முறை :




கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.

1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.

2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.

3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.

4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.

5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.

கூமுட்டைக்கான காரணம் :

1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.

2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.

3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment